பெக்காமின் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் ஏலத்திற்கு வருகிறது
published on நவ 19, 2015 01:36 pm by sumit for லேண்டு ரோவர் ரேஞ்ச் rover ஸ்போர்ட் 2013-2022
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
நீங்கள் டேவிட் பெக்காமின் ஒரு ரசிகராக இருந்து, அந்த பிரபல மனிதரால் பயன்படுத்தப்பட்ட ஏதாவது ஒரு பொருளை சொந்தமாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டமான நாளாக அமையலாம். இந்த ஆங்கிலேயர் ஒரு காலத்தில் பயன்படுத்தி வந்த ஒரு ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார், அடுத்த மாதம் ஏலத்திற்கு வைக்கப்பட உள்ளது. இங்கிலாந்தில் உள்ள வார்விக்ஸ்ரைன் எக்சிபிஷன் சென்டரில் இதற்கான விண்ணப்ப மனுவை சமர்ப்பிக்கலாம். மேலும் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்டு ஏலத்தில் வல்லுநரான ஒரு அமைப்பு (கிளாஸிக் கார் அக்ஷன்ஸ்) இந்த கார் விற்பனையில் ஈடுபடுகிறது. வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ஏறக்குறைய GBP 24,000 (ரூ.24 லட்சம்) என்று இந்த ஏலம் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டேவிட் பெக்காமின் 2007 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில், அதற்கான பாடி கிட் மற்றும் கருப்பு 5-ஸ்போக் அலாய் வீல்கள் ஆகியவற்றை உட்கொண்டுள்ள கான் டிசைன் நிறுவனத்தினரின் உயர்தர மேம்பாடுகளை காண முடிகிறது.
இந்த SUV-யில் ஒரு 4.2-லிட்டர் சூப்பர்சார்ஜ்டு V8 பெட்ரோல் என்ஜின் மூலம் சுமார் 389 bhp ஆற்றலையும், 550 Nm அதிகபட்ச முடுக்குவிசையையும் அளிக்கிறது. கையால் தைக்கப்பட்ட கனமான லேதர் சீட்கள், ட்வின் ரேர் ஸ்கிரீன்கள் மற்றும் இந்த காரின் உட்புறத்திற்கு ஒரு உயர்தர தோற்றத்தை அளிக்கும் ஒரு புகழ்பெற்ற ஜெனிசிஸ் சவுண்டு சிஸ்டம் ஆகியவற்றை பெற்றுள்ளது. இந்த காரில் உள்ள தரை விரிப்புகளில் “பெக்காம்” என்ற பெயரை கொண்டிருப்பது மட்டுமின்றி, இந்த ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் “டேவிட் பெக்காமிற்காக வடிவமைக்கப்பட்டது” (டிசைன்டு ஃபார் டேவிட் பெக்கம்) என்ற ஒரு புனைப்பெயர் பலகையை காண முடிகிறது. இந்த SUV, 62 ஆயிரம் மைல்களை கடந்து ஓடியுள்ள நிலையில், இந்த காரை பெக்கம் முதலில் வாங்கி ('DB1001' என்ற நம்பர் பிளேட் உடன்), பின்னர் அதை அவரது சகோதரியாகிய ஜோன்னி என்பவருக்கு பரிசாக அளித்தார்.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful