• English
  • Login / Register

A3 சேடனை சேர்ந்த புதிய காரை ரூ.25.50 லட்சத்தில் ஆடி அறிமுகம் செய்கிறது

published on செப் 03, 2015 04:01 pm by nabeel for ஆடி ஏ3

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்: A3 சேடன் வகையை சேர்ந்த புதிய காரை ஆடி இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய A3 40 TFSI பிரிமியமிற்கு ரூ.25.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி/ மும்பை) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. A3 தன்மையில் பெட்ரோல் வகையை மட்டும் கொண்டு, ரூ.30.2 லட்சம் என்று விலை நிர்ணயிக்கப்பட்ட 40 TFSI என்ற பிரிமியம் பிளஸ் வகையின் தயாரிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையை சேர்ந்த கார்கள், இதனை சார்ந்த டீசலில் இயங்கும் கார்களின் விலையை விட ரூ.3 லட்சம் குறைவாக இருப்பதால், ஆடம்பர சேடன் பிரிவை விரும்பும் மக்களுக்கு, இது ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. மேலும் இந்த அட்டகாசமான விலை நிர்ணயம், அடிப்படை ஆடி கார்களுக்கும் இதன் எதிரணியில் போட்டியாளராக உள்ள CBU-யின் தயாரிப்பான CLA-வான மெர்சிடிஸ் ரிவல் கார்க்கும் இடையே ரூ.10 லட்சம் விலை இடைவெளியை உருவாக்கி உள்ளது.

இந்த விலை குறைவின் பின்னணியில் இந்த காரில் இருந்த சில அம்சங்களும் மாயமாகி உள்ளன. இந்த காரில் முன்பக்க பார்க்கிங் சென்ஸர்கள், ஃபேக் லெம்ப்கள் மற்றும் டயரின் காற்றழுத்தம் கண்காணிக்கும் அமைப்பு (டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்) ஆகியவை நீக்கப்பட்டுள்ளது. மேலும் 17-இன்ச் அலாய்கள் 16-இன்ச் என குறைக்கப்பட்டு, பார்க்கிங் செய்ய பயன்பட்ட முழு டிஸ்ப்ளே அமைப்பிற்கு பதிலாக ஆடியோ ரெஸ்பான்ஸ் பார்க்கிங் சென்ஸர் (பின்புறம் மட்டும்) பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பிரிமியம் பிளஸில் காணப்பட்ட ஸினான்ஸ் நீக்கப்பட்டு, ஹாலஜன் ஹெட்லெம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆனால் லேதர் பேக்கேஜ், ஸ்டார்ட்-ஸ்டாப் இயக்கம் மற்றும் எனர்ஜி ரிகப்ரேஷன் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த காரில் சன் சென்ஸர் உடன் கூடிய இரண்டு-ஸோன் ஏர் கண்டிஷனிங், பின்புற AC திறப்புகள், குரூஸ் கன்ட்ரோல், ரஃப் ரைடு சஸ்பென்ஸன், ஆட்டோ ரிலீஸ் ஃபங்ஷன், மல்டி-ஃபங்ஷனல் லேதர் ஸ்டீயரிங் வீல், லைட்டிங் பேக்கேஜ் பிளஸ், புதிய கிரோம் பேக்கேஜ் மற்றும் டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் ஆகிய அம்சங்களையும் உட்கொண்டுள்ளது.

இந்த அம்சங்களுடன் இக்காரில், மேலும் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களான MMI ரேடியோ, பேஸ்சீவ் ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் இன்டர்ஃபேஸ், ஆடி மியூசிக் இன்டர்ஃபேஸ் ஆகியவை கொண்ட வாகன இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. MMI உடன் போர்டபில் மீடியா பிளேயர்களை இணைக்க ஆடி மியூசிக் இன்டர்ஃபேஸ் உதவுகிறது. இதன்மூலம் MMI கன்ட்ரோல்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமுள்ள ஆல்பம், ஆர்டிஸ்ட்கள், வகைகள் அல்லது டிராக்குகள் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க முடியும்.

அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, 1.8-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் முன்புற வீல்களை இயக்கும் இந்த கார், 178bhp மற்றும் 250Nm முடுக்குவிசையை (டார்க்) அளிக்கிறது. ஆற்றல் அளிக்கும் பொறுப்பை கையாளும் 7-ஸ்பீடு இரட்டை-கிளெச் S-ட்ரோனிக் கியர்பாக்ஸ் மூலம் இந்த கார் இயக்கப்பட்டு 7.3 விநாடிகளில் மணிக்கு 0-வில் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்டுகிறது.

புதிய A3 40 TFSI பிரிமியம் குறித்து ஆடி இந்தியா தலைவர் திரு.ஜாய் கிங் கூறுகையில், “இளமையான டிசைன் உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடி A3 சேடன், விஷினரி டெக்னாலஜி மற்றும் ஆடம்பர செயல்திறன் ஆகியவற்றின் மூலம் கச்சிதமான ஆடம்பர கார்களின் பிரிவில் ஒரு புதிய உயர்நிலையை எட்டியுள்ளது. இது இந்தியாவில் ஓராண்டை முடித்துள்ள நிலையில், எக்காலமும் சிறந்து விளங்கும் இந்த புதிய மாடலை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த காரில் உள்ள புதிய அம்சங்களின் மூலம் ஆடி கார் ஆர்வலர்களுக்கு இன்னும் கச்சிதமான, ஸ்போர்ட்டியான, வளர்ச்சி மிகுந்த மற்றும் அதிநவீன சேடன்களை பெறும் விருப்பம் ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம். பெட்ரோல் வாடிக்கையாளர்களை பொறுத்த வரை, ஆற்றல் மற்றும் எரிபொருள் சிக்கனம் என்ற இரண்டையும் எதிர்பார்க்கும் தனித்துவம் மிகுந்த வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஆடி A3-யின் மூலம் மேற்கண்ட இரண்டின் சிறப்பையும் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறோம்.

ஆடி A3 40 TFSI-யின் மூலம் 180 hp ஆற்றலும், லிட்டருக்கு 16.6 கி.மீ என எரிபொருள் சிக்கனத்தையும் கொண்டுள்ளது. ஆடி A3 கேப்ரியோலெட் பொறுத்த வரை, பெட்ரோல் கார்கள் தான் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகிறது. A3 கேப்ரியோலெட் (இதில் பெட்ரோல் வகை கார்கள் மட்டுமே கிடைக்கிறது) கார்களுக்கான தேவையை கண்டு நாங்கள் ஆச்சரியம் அடைந்தோம். இந்த ஆண்டின் தேவைகளை பகிர்ந்து அளித்துவிட்ட நிலையில், இன்னும் உயர்வான எண்ணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளோம். மேலும் ஆடி A3 40 TFSI பிரிமியம் கூட இதே நிலையை அடையும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Audi ஏ3

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience