ஆடியின் புதுப்பிக்கபட்ட A6 மாடல் ரூபாய் 49.50 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
published on ஆகஸ்ட் 21, 2015 10:05 am by அபிஜித் for ஆடி ஏ6 2015-2019
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
அனைவரும் மிகவும் எதிர்பார்த்த, ஆடியின் புதுப்பிக்கபட்ட A 6 கார் மாடல், டெல்லி ஷோரூம் விலையாக ரூபாய் 49.50 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டு, சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் 2014 அக்டோபர் மாதத்தில் நடந்த 2014 பாரிஸ் மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்டது. இது உட்புற மற்றும் வெளிப்புற மாற்றங்களுடனும்; ஒரு சில இயந்திர மேம்பாடுகளுடனும் சந்தைக்கு வந்துள்ளது. BMW5 வரிசை, மெர்சிடிஸ் பென்ஸ் E –கிளாஸ் மற்றும் ஜாகுவார் XF ஆகிய கார்களுடன், புதுப்பிக்கபட்ட A6 போட்டியிட தயாராக உள்ளது. விலையைப் பற்றி பேசும்போது, முந்தைய காரை விட இதன் விலை சற்று கூடுதலாகவே உள்ளது.
மாற்றங்கள் பற்றி பேசுகையில், A6 காரில் கம்பீரமாக செதுக்கப்பட்ட புதிய முட்டுதாங்கிகள் (பம்பர்) மற்றும் புதிய ஒற்றை சட்ட கம்பி வலை (கிரில்) ஆகியன பொருத்தப்பட்டுள்ளன. இந்த சலூன் வகை கார், மேட்ரிக்ஸ் LEDமுகப்பு விளக்குகளையும், மறுவடிவமைக்கப்பட்ட LED பின்புற விளக்குகளையும் பெற்றுள்ளது. புதிய அலாய் சக்கரங்களை தவிர, இதன் பக்க தோற்றத்தில் மாற்றம் எதுவும் இல்லை. இதன் உட்பகுதி, புது விதமான இருக்கை மற்றும் விதான விரிப்புகள் (அப்ஹோல்ஸ்டெரி), அப்ளிக் வேலைபாட்டுடன் உள்ளது. மேலும், புதுப்பிக்கப்பட்ட ஆடியின் MMI இன்போடெயின்மென்ட் அமைப்பும் மேம்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கபட்ட A6 கார், மேம்படுத்தப்பட்ட TFSI மற்றும் TDI இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, சர்வதேச சந்தையில் கிடைக்கின்றது. ஆனால் இந்தியாவில், ஆடி தற்போதைய டீசல் பவர்டிரெய்ன் இஞ்ஜினையே பொருத்தி உள்ளது. அதாவது, புதுப்பிக்கப்பட்ட Q3 மாடல் போல அல்லாமல், இதன் பெட்ரோல் ரகத்தை முழுமையாக விட்டுவிட்டது; இதன் 2.0 லிட்டர் 35 TDI இஞ்ஜின் 190 bhp ஓடுதிறனை கொடுக்கிறது. இந்த மோட்டார், பழைய இஞ்ஜினை விட 7% அதிகமான சக்தியையும், 5% அதிகமான எரிபொருள் சிக்கனத்தையும் கொடுக்கிறது. இந்த மோட்டார், ஒரு புதிய ஏழு வேக S- டிரானிக் உட்செலுத்தி (7 ஸ்பீட் s –ட்ரானிக் ட்ரான்ஸ்மிஷன்) அமைப்புடன் இணைத்து பொருத்தப்பட்டுள்ளது.