ஆடி A6 35 TFSI ரூ. 45.90 லட்சத்திற்கு அறிமுகமானது

ஆடி ஏ6 2015-2019 க்கு published on sep 14, 2015 09:50 am by konark

  • 9 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

டெல்லி: சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட தனது செடான் வகை A6 காரின் பெட்ரோல் மாடலை ரூ. 45.90 லட்சத்திற்கு ( எக்ஸ் - ஷோரூம் டெல்லி மற்றும் மும்பை ) ஜெர்மனி நாட்டு கார் தயாரிப்பாளரான ஆடி நிறுவனம் அறிமுகம் செய்தது. சில நாட்களுக்கு முன்னாள்  மேட்ரிக்ஸ் LED A6, 35  TDI  என்ஜின் பொருத்தப்பட்டு வெளியானது. இப்போது அதே மேட்ரிக்ஸ் LED தொழில்நுட்பத்துடன் 35  TFSI மாடலும் வெளியாகியுள்ளது.

டீசல் மாடலைப் போல் அல்லாமல் பெட்ரோல் மாடலில் என்ஜின் தொழில்நுட்பத்திலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த முறை முந்தைய 2லிட்டருக்கு பதிலாக  சற்று சிறிய 1.8  லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய  A6 35 TFSI  பெட்ரோல் மாடல் 12.7  சதவிகிதம் கூடுதல் மைலேஜ் தரும் என்றும் என்ஜின் திறன்  5 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் ஆடி நிறுவனம் கூறுகிறது. மேலும் எனர்ஜி ரெகவரி அமைப்புடன்  கூடிய தானியங்கி ஸ்டார்ட்/ ஸ்டாப் தொழில்நுட்பம் இந்த வாகனத்தின் செயல்திறனை மேலும் அதிகரிக்க உதவுகிறது.

நாங்கள் ஓட்டி பார்த்தோம்: ஆடி A6 மேட்ரிக்ஸ் முதல் டிரைவ்    

ஜோ கிங், தலைவர்,ஆடி இந்தியா, இந்த காரின் அறிமுக விழாவில் பேசியதாவது, “ 'வோர்ஸ்பிரன்க் டர்ஷ் டெக்னிக்' என்ற எங்களது தத்துவத்திற்கு செயல் வடிவம்  கொடுக்கும் வண்ணம் எங்களது ஆடி A6 மேட்ரிக்ஸ் காரின் அறிமுகம் வெற்றிகரமாக சில தினங்களுக்கு முன் அமைந்தது. இந்த புதிய A6  35  TFSI  காரின் அறிமுகம் எக்ஸ்யிகுடிவ் செடான் பிரிவில் எங்கள் வெற்றியை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளது. இந்த புதிய 1.8  லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் முந்தைய மாடலை விட 200cc  குறைவு தான் என்றாலும் சக்தி மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் ஒரு தனித்துவமான கலவையாக இந்த இஞ்சின்  திகழும்.  மேலும் இந்த புதிய 1.8  லிட்டர் TFSI  என்ஜின் 12.7  சதவிகிதம் கூடுதல் மைலேஜ் தருவது மட்டுமன்றி  என்ஜின் திறன்  5 சதவிகிதம்  வரை  அதிகரிக்கப்பட்டிருக்கும்".  

இன்ஜினைப் பொறுத்தவரை நாம் முன்பு சொன்னதைப் போல் 1.8  லிட்டர் பெட்ரோல் மோட்டார் பொருத்தப்பட்டு  அசாத்தியமான 190bhp  சக்தியை வெளியிடுவது மட்டுமின்றி லிட்டருக்கு  15.26 கி.மீ. மைலேஜ் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7 - வேக எஸ் - ட்ரானிக் ட்ரேன்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்போர்ட், ஸ்போர்ட் மற்றும் டைனாமிக் என்று தேவைக்கு ஏற்ப மோட் மாற்றங்களை செய்துக்கொள்ள உதவியாக அடேப்டிவ் ஏயர் சஸ்பென்ஷன் உடன் கூடிய ஆடி டிரைவ் செலெக்ட் என்ற தொழில்நுட்ப வசதி இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.  LED - முகப்பு விளக்குகள்,  பின்புற விளக்குகள், இன்டிகேட்டர், ஆடி சிறப்பு ஒற்றை ப்ரேம் கிரில், நேர்த்தியாக்கப்பட்டுள்ள பம்பர்கள் என்ற ஏராளமான கூடுதல் வெளிப்புற சிறப்பம்சங்களையும் காண முடிகிறது. உட்புறத்திலும் இந்த புதிய A6  35  TFSI காரில் பல சேர்க்கப்பட்டுள்ளன. இருக்கைகளில் மிக உயரிய மிலானோ தோலினால் ஆன கவர் போடப்பட்டுள்ளது. இயற்கை பழுப்பு நிறத்தில் படு நேர்த்தியாக உட்புறம் அலங்கரிக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி அதி நவீன மாடுலார் இந்போடைன்மென்ட் அமைப்பையும் காண முடிகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஆடி ஏ6 2015-2019

Read Full News
×
We need your சிட்டி to customize your experience