எஸ்யுவி வாகன பிரிவில் AMT தொழில்நுட்பம் வேகமாக பிரபலமடைந்து வருகிறது.
published on நவ 16, 2015 01:01 pm by sumit for மஹிந்திரா டியூவி 3ஓஓ 2015-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் : வாகன ஓட்டுனர்கள் மத்தியில் இந்த நவீன AMT தொழில்நுட்பம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்றே தோன்றுகிறது. துவக்கத்தில் பிரபலமாக உள்ள ப்ரீமியம் செடான் பிரிவு கார்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் AMT தொழில்நுட்பம் பின்னர் ஹேட்ச்பேக் பிரிவிலும் நுழையத் தொடங்கியது. இப்போது இந்த AMT தொழில்நுட்பம் சமீபத்தில் அறிமுகமாமான மகீந்திரா நிறுவனத்தின் TUV 300 SUV வாகனங்களில் இந்த AMT தொழில்நுட்பத்துடன் கூடிய மாடலும் அறிமுகமாகியுள்ளன. வாடிக்கையாளர்கள் எந்த வித தயக்கமும் இன்றி AMT வசதியுடன் கூடிய SUV வாகனங்களை புக் செய்கின்றனர். இதற்கு இந்த TUV 300 வாகனங்களே சாட்சியாகும். மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளபடி, புக்கிங் செய்யப்பட்டTUV 300 வாகனங்களில் 50% மேல் தானியங்கி AMT தொழில்நுட்ப அம்சம் இந்த வாகனங்களின் AMT வேரியன்ட்கள் தான் என்பது இங்கே கவனத்தில் கொள்ள தக்கது.
அறிமுகமான இரண்டு மாதத்திற்குள் காம்பேக்ட் SUV பிரிவைச் சேர்ந்த மஹிந்திரா நிறுவனத்தின் TUV 300 12,000 வாகனங்கள் புக்கிங் ஆகியுள்ளன. இந்த வாகனங்களின் AMT வேரியன்ட்களுக்கு கிடைத்துள்ள பெரிய வரவேற்பின் காரணமாக இந்த வாகனங்களை புக்கிங் செய்து விட்டு காத்திருக்கும் காலம் அதிகரித்துள்ளது. தற்போது மாதத்திற்கு 5,000 TUV வாகனங்கள் தயாராவதாகவும், ஏற்றுமதி தொடங்கும் வரை இதே எண்ணிக்கை தொடரும் என்றும் டாக்டர். கோயங்கா கூறியுள்ளார். ஏற்றுமதிக்கென்று பிரத்தியேகமாக மேம்படுத்தப்பட்ட மாடலை இந்நிறுவனம் உற்பத்தி செய்ய தொடங்கி உள்ளது. அதில் 4 × 4 அமைப்பும் இணைக்கப்பட்டிருக்கும் என்றும் யூகிக்கப்படுகிறது. மேலும் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் முறையே 85 PS மற்றும் 82 PS சக்தியையும் .230 nm அளவு டார்க்கையும் மேனுவல் மற்றும் தானியங்கி மாடல்களில் வெளியிடுகிறது. மேனுவல் வேரியன்ட்கள் ரூ.8 . 48 லட்சம் ( டாப் - எண்டு மாடல் ) என்ற விலையிலும், AMT வேரியன்ட்கள் ரூ. 8.6 – 9.2 லட்சங்கள் என்ற விலையை கொண்ட T6 + மற்றும் T8 + ட்ரிம்களில் கிடைகின்றன.
தொடர்புடைய செய்தி :
0 out of 0 found this helpful