மாருதி நிறுவனம் ஓணம் லிமிடட் எடிஷன் ஆல்டோ 800 கார்களை அறிமுகப்படுத்தியது.
nabeel ஆல் ஆகஸ்ட் 18, 2015 12:41 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு பிறகு மாருதி நிறுவனமும் எதிர் வரும் பண்டிகை காலத்தில் தங்களது ஆல்டோ800 கார்களின் சிறப்பு பதிப்பை வெளியிட்டு ஓணம் கொண்டாட்டங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுடன் கை கோர்த்து உள்ளது. ஆல்டோ 800 ஓணம் லிமிடட் எடிஷன் கார்களை அறிமுகப்படுத்தி ஒரே நாளில் சுமார் 3,000 கார்களை பல்வேறு பிரிவுகளுக்கு அனுப்பி உள்ளது. அந்த 3,000 கார்களில் 1,000 கார்கள் ஆல்டோ 800 ஆகும். இந்த கார்கள் மலையாள வருடத்தின் முதல் மாதமான 'சிங்கம்' மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்காக அனுப்பப் பட்டுள்ளதாக மாருதி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் தென்னிந்திய பகுதியின் கமர்ஷியல் பிஸினஸ் ஹெட் திரு. ராம் சுரேஷ் அகெல்லா பின்வருமாறு கூறினார்.” கேரளா எங்களுக்கு மிக முக்கியமான சந்தை அதிலும் ஆல்டோ 800 அதிக அளவில் விற்பனை ஆகும் பகுதி இது",
ஓணம் சிறப்பு சலுகையாக 15 சிறப்பு அம்சங்களை குறைந்த விலையில் அளிக்கவிருக்கிறோம். இந்த ஓணம் லிமிடட் எடிஷன் ஆல்டோ 800 கார்கள் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்யும் என்று உறுதியாக நம்புகிறோம்". என்று ஒரு செய்தி வெளியீட்டில் கூறியுள்ளார். இந்த ஓணம் லிமிடட் எடிஷன் ஆல்டோ 800 கார்கள் 15 சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது. பின்புற பார்கிங் சென்சார் , ச்பீகருடன் கூடிய மியூசிக் சிஸ்டம், பவர் கார் சார்ஜர், ஓணம் பண்டிகையை உணர்த்தும் கிராபிக்ஸ் மற்றும் ஸ்டிக்கர்கள், எம்ப்ராய்டரி செய்யப்பட்ட குஷன்கள், டிஸைன்களுடன் கூடிய சீட் கவர்கள் என இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.
இந்த அத்தனை சிறப்பம்சங்களும் ரூ.17, 350 க்கு வாடிகையாலர்களுக்கு வழங்கப்படுகிறது. இது வழக்கமான விலையை விட 26 % குறைவானதாகும்.
ஏற்கனவே அதிகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் இந்த ஆல்டோ 800 கார்கள் இந்த சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்ட பின் விற்பனை உச்சத்தை தொடும் என்று மாருதி நிறுவனத்தினர் எதிர்பார்கின்றனர். கடந்த வாரம் இதே போல் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தினர் தங்களது போலோ மற்றும் வெண்டோ கார்களுக்கு கோல்டன் ஆபர் என்ற பெயரில் ஏராளமான சலுகைகளை வெளியிட்டிருந்தனர்.