ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்ட Toyota மற்றும் Lexus கார்கள்
டொயோட்டா ஏற்கனவே உள்ள பிக்கப் டிரக்கின் புதிய பதிப்பையும், லெக்ஸஸ் இரண்டு கான்செப்ட் கார்களையும் காட்சிப்படுத்தியது.
டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிக்கு வைத்த கார்களின் விவரங்களை இங்கே பார்க்கலாம். டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் காரின் பிளாக் பதிப்பை காட்சிப்படுத்தியது. இந்தியாவில் அர்பன் க்ரூஸர் BEV கான்செப்ட்டையும் அறிமுகப்படுத்தியது. டொயோட்டாவின் சொகுசு பிராண்டான லெக்ஸஸ் இரண்டு புதிய கான்செப்ட்களை காட்சிப்படுத்தியது. ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் டொயோட்டா மற்றும் லெக்ஸஸ் ஆகியவை காட்சிக்கு வைத்த அனைத்து மாடல்களையும் பார்க்கலாம்.
டொயோட்டா ஹைலக்ஸ் பிளாக் பதிப்பு
டொயோட்டா ஹைலக்ஸ் பிளாக் எடிஷன் கிளப்பில் நுழைந்தது. இது ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் டொயோட்டாவின் பெவிலியனில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. புதிய பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடு தவிர பிளாக் அலாய் வீல்கள், ORVM -கள், டோர் ஹேண்டில்கள் மற்றும் கிரில் ஆகியவற்றை கொண்டுள்ளது. பின்புறம் பெட் ஹேண்டில் மற்றும் பம்பர் ஆகியவற்றில் சில குரோம் எலமென்ட்கள் இன்னும் உள்ளன. கேபின் மற்றும் பவர்டிரெய்ன் புதிதாக எதையும் பெறவில்லை. டொயோட்டா ஹைலக்ஸ் பிளாக் எடிஷனின் விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
மேலும் பார்க்க: ஆட்டோ எக்ஸ்போ 2025 -வில் எம்ஜி நிறுவனம் காட்சிக்கு வைத்த வாகனங்களின் விவரங்கள்
டொயோட்டா அர்பன் க்ரூஸர் BEV கான்செப்ட்
மாருதி இ விட்டாராவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பான டொயோட்டா அர்பன் க்ரூஸர் BEV கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தபடுத்தியது. EV ஆனது இ விட்டாராவை போலவே இருக்கும் அதே வேளையில் முன்பக்கம் போன்ற இரண்டு மாடல்களையும் வேறுபடுத்தி காட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் BEV விலை ரூ.18 லட்சத்தில் இருந்து தொடங்கலாம்.
லெக்ஸஸ் ROV கான்செப்ட்
லெக்ஸஸ் ரீகிரியேஷனல் ஆஃப் -ஹைவே வெஹிகிள் (ROV) கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்டது. ROV -ன் வடிவமைப்பு பெரிய சக்கரங்களுடன் கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. மேலும் இதில் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு விஷயம் 1-லிட்டர் ஹைட்ரஜனில் இயங்கும் இன்ஜின் ஆகும். இயந்திர ரீதியாக பார்க்கப் போனால் ROV ஆனது பின்புற சக்கரங்களில் நீண்ட பயணத்துக்கான சஸ்பென்ஷன் உள்ளது. இது ஆஃப்ரோடிங் செய்யும் போது மென்மையான பயணத்தை அனுமதிக்கிறது.
லெக்ஸஸ் LF-ZC கான்செப்ட்
LF-ZC கான்செப்ட் ஜப்பானிய மொபிலிட்டி ஷோவில் முதன்முதலில் அறிமுகமானது. இப்போது அது ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சாய்வான ரூஃப் மற்றும் பின்புறம் கனெக்டட் டெயில்லேம்ப்களை கொண்ட ஏரோடைனமிக் வடிவமைப்பு உள்ளது. மல்டி ஸ்கிரீன்கள் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் செட்டப் உடன் கூடிய F1 காரை போன்ற வடிவமைப்பைக் கொண்ட ஒரு மினிமலிஸ்டிக் ஸ்டீயரிங் உள்ளது.
மேலும் பார்க்க: ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து கஸ்டம் கார்களின் விவரங்கள்
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.