ஆட்டோ எக்ஸ்போ 2025 -வில் எம்ஜி நிறுவனம் காட்சிக்கு வைத்த வாகனங்களின் விவரங்கள்
எம்ஜி majestor க்காக ஜனவரி 20, 2025 09:12 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 52 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஒரு எலக்ட்ரிக் MPV, ஃபிளாக்ஷிப் எஸ்யூவி மற்றும் புதிய பவர்டிரெய்ன் ஆப்ஷனுடன் கூடிய எஸ்யூவி உட்பட 3 புதிய கார்களை MG காட்சிப்படுத்தியது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் 6 கார்களை காட்சிக்கு வைத்ததன் மூலமாக எம்ஜி நிறுவனம் கவனத்தை ஈர்த்தது. ஆறு கார்களில் இரண்டு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் மற்றும் கார் தயாரிப்பாளரின் பிரீமியம் ஷோரூமான 'எம்ஜி செலக்ட்' மூலம் விற்பனை செய்யப்படும். ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் எம்ஜி -யால் காட்சிப்படுத்தப்பட்ட 6 கார்களையும் சுருக்கமாகப் பார்ப்போம்.
எம்ஜி மெஜெஸ்டர்
ஒரு புதிய முழு அளவிலான எஸ்யூவி எம்ஜி மெஜெஸ்டர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இது கார் தயாரிப்பாளரின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி ஆக இருக்கும். மேலும் இது எம்ஜி குளோஸ்டர் உடன் விற்பனையில் இருக்கும். பாக்ஸியான வடிவமைப்பு, ஒரு பெரிய கிரில், LED DRL -கள், செங்குத்தான ஹெட்லைட்கள், 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் கனெக்டட் டெயில் லைட்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. உட்புறம் மற்ற விவரங்களை எம்ஜி நிறுவனம் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் இது டூயல் ஸ்கிரீன்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்களை பெறலாம். இது க்ளோஸ்டரின் அதே இன்ஜின் ஆப்ஷன்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 46 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி சைபர்ஸ்டர்
எம்ஜியின் மிகவும் சக்திவாய்ந்த எலக்ட்ரிக் ரோட்ஸ்டர் ஆன எம்ஜி சைபர்ஸ்டர் இவி -யும் இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. இதுவும் பிரீமியம் எம்ஜி செலக்ட் அவுட்லெட்டுகள் மூலம் விற்கப்பட உள்ளது. இது சிஸர் டோர்ஸ், ரீட்ராக்டபிள் ரூஃப் மற்றும் 20-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றைப் கொண்டுளது. இது டேஷ்போர்டில் 3 ஸ்கிரீன்கள், ஏசி கன்ட்ரோல்களுக்காக தனி ஸ்கிரீன், அட்ஜெஸ்ட்டபிள் இருக்கைகள் மற்றும் 8-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டத்துடன் வருகிறது. இது 510 PS மற்றும் 725 Nm அவுட்புட்டை கொடுக்கும் டூயல்-மோட்டார் அமைப்புடன் கனெக்டட் 77 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. மேலும் இது WLTP- கிளைம்டு 443 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது.
புதிய MG ஆஸ்டர் (ZS HEV)
MG காட்சிக்கு வைத்த மற்றொரு புதிய மாடல் ZS HEV ஆகும். இது எம்ஜி ஆஸ்டரின் புதிய தலைமுறை வெர்ஷன் ஆகும். இது 2024 ஆண்டில் உலகளவில் காட்சிப்படுத்தப்பட்டது. இப்போது பெரிய கார் கண்காட்சியில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இது எல்இடி ஹெட்லைட்கள், கனெக்டட் எல்இடி டிஆர்எல்கள், பெரிய கிரில் மற்றும் ரேப்பரவுண்ட் டெயில் லைட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. உலகளாவிய-ஸ்பெக் மாடல் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளை பெறுகிறது. எவ்வாறாயினும் ஹைப்ரிட் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 196 PS மற்றும் 465 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கும்.
மேலும் படிக்க: ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து கஸ்டம் கார்களும்
எம்ஜி M9
எம்ஜி -யின் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் எம்பிவி எம்ஜி M9 காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் வெளிப்படுத்தப்பட்டது. இது 6- மற்றும் 7-இருக்கை அமைப்பில் வழங்கப்படும் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் சிங்கிள்-பேன் யூனிட், மல்டி-ஜோன் ஆட்டோ ஏசி மற்றும் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும். இந்தியா-ஸ்பெக் M9 -ன் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் குளோபல்-ஸ்பெக் மாடல் 90 kWh பேட்டரி பேக்குடன் 430 கி.மீ ரேஞ்சை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி 7 டிராபி
சர்வதேச அளவில் விற்கப்படும் எம்ஜி 7 டிராபி செடான் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. இது LED ஹெட்லைட்கள், 19-இன்ச் அலாய் வீல்கள், கனெக்டட் LED டெயில் லைட்ஸ் மற்றும் டெயில்கேட் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் ஆகியவற்றுடன் வருகிறது. டேஷ்போர்டில் டூயல் ஸ்கிரீன் செட்டப், ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஸ்டீயரிங் வீலில் சூப்பர்ஸ்போர்ட் பட்டன் ஆகியவற்றுடன் உட்புறங்களும் ஸ்போர்ட்டியாக உள்ளன. சர்வதேச அளவில், இது 265 PS மற்றும் 405 Nm அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் இதன் விலை ரூ.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்படலாம்.
iM 5
சீனாவில் MG பிராண்டை நிர்வகிக்கும் SAIC குழுமத்தின் ஒரு அங்கமான iM மோட்டார்ஸ் iM 5 காரை அறிமுகம் செய்தது. இது ஸ்லீக்கரான ஹெட்லைட்கள், கர்வ்டு டிஸைன், எல்இடி டெயில் லைட் பார் மற்றும் கஸ்டமைஸ்டு செய்திகளுக்காக பின்புறத்தில் ஒரு பிக்சலேட்டட் ஸ்கிரீன் உடன் ஏரோடைனமிக்ஸ் தோற்றம் கொண்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. உட்புறமும் யோக்-ஸ்டைல் ஸ்டீயரிங் வீல், பனோரமிக் 26.3-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் EV -யின் ஆகியவை உள்ளன. இந்த செடான் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பதை எம்ஜி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த MG தயாரிப்புகளில் எது உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.