• English
  • Login / Register

மாருதி எஸ் கிராஸில் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 6 விஷயங்கள்

published on ஆகஸ்ட் 01, 2015 03:07 pm by manish for மாருதி எஸ்-கிராஸ் 2017-2020

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:எஸ்எக்ஸ்4-ன் அடிசுவடுகளை பின்பற்றி, இந்திய நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சுசுகி நிறுவனம் ஒரு சர்வதேச தயாரிப்பை நம் நாட்டிற்கு கொண்டு வர உள்ளது. சர்வதேச அளவில் மகத்தான வெற்றியை பெற்றதை தொடர்ந்து சுசுகி எஸ்-கிராஸ், இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது. சுசுகி எஸ் கிராஸை பார்ப்பவர்களில் சிலர், இது உற்பத்தி நிறுத்தப்பட்ட எஸ்எக்ஸ்4-யை போன்றே உள்ளதே என கூறக் கூடும். ஏனெனில் இது எஸ்எக்ஸ்-4ன் பிளாட்பாமை தொடர்ந்து வருகிறது. மேலும் பல சர்வதேச சந்தைகளில் இது “எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்” என்றே வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் எஸ்எக்ஸ்4 வெற்றி அடைய முடியாமல் போனதை தொடர்ந்து, பெயரில் எஸ் கிராஸ் உடன் இருந்த முன்பகுதியை மாருதி நீக்கியுள்ளது. எஸ்எக்ஸ்4யை அடிப்படையாக கொண்ட எஸ் கிராஸ், கிரவுண்ட் கிளியரன்ஸ் விஷயத்தில் சிறப்பான மதிப்பை பெறுகிறது. மேலும் ஒரு கிராஸ்ஓவர் வாகனமாக, பல வாக்குறுதிகளை இந்த கார் அளிக்கிறது.

1. கிரண்ட்

மாருதி எஸ் கிராஸின் படங்களை பார்க்கும் போதே, விரும்பத்தக்க 1.6 லிட்டர் டீசல் என்ஜினின் செயல்பாடுகளை கொண்டிருக்கும் என்பதை அறியலாம். பியட்-டிடம் இருந்து பெற்று கொள்ளப்பட்ட இந்த குறிப்பிட்ட டீசல் என்ஜின், பியட் மல்டிஜெட் டீசல் என்ஜின் குடும்பத்தை சேர்ந்தது. ஐரோப்பிய சந்தையிலும் எஸ்-கிராஸில் இதே என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 3750 ஆர்பிஎம் கொண்டு 118பிஹெச்பியும், 1750ஆர்பிஎம் கொண்டு 320 என்எம் டார்க் சக்தியையும் வெளியிடுகிறது. எஸ்-கிராஸ் ஈர்க்கக் கூடிய பவர்-பிளாட்டை கொண்டிருப்பதால், இந்திய சந்தையில் ஏற்கனவே வெற்றி நடை போட்டு வரும் கம்பேக்ட் எஸ்யூவி-களுக்கு எதிராக இது போட்டியிட வாய்ப்புள்ளது.

2. பல்வேறு என்ஜின் வகைகள் 

இந்த கார் வேறு என்ஜின் மாதிரிகளை கொண்டும் கிடைக்கிறது. 1.4-லிட்டர் 92 பிஹெச்பி பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் 90 பிஹெச்பி டீசல் ஆகியவை சுசுகியின் சியஸை போல மற்ற மாடல்களைனயும் இயக்குகின்றன. இதே செயல்பாடு புதிய எஸ் கிராஸிலும் காணப்படுகிறது. இந்த அமைப்பை முழுமையாக கொண்டுள்ள பவர்-பிளான்ட்கள் மற்ற சுசுகி மாடல்களில் பெரும் வெற்றியை பெற்று தந்துள்ளது. இந்த சிறப்பை கொண்டு வர சற்று அதிகமாக செலவானாலும், சியஸை விட இந்த கிராஸ்ஓவரின் மொத்த எடை சுமார் 200 கிலோ வரை அதிகமாக உள்ளது. ஏனெனில் இது பழைய மற்றும் கனமான பிளாட்பாமை பயன்படுத்துகிறது. குறிப்பாக 1.6 லிட்டர் டீசல் வகை, 1305 கிலோ எடை கொண்டுள்ளது. இந்த அதிகபட்சமான காரின் எடை, எடை-இழுவை சக்தி விகிதத்தையும், செயல்திறனையும் பாதிக்கலாம்.

3. கட்டமைப்பு

ரினால்ட்டிற்கு போட்டியான ஏடபில்யூடி சிஸ்டத்தை சுசுகி உருவாக்கி உள்ளதாக சில வதந்திகள் பரவி உள்ளன. சர்வதேச சந்தையில் அறிமுகமாகியுள்ள இந்த காரில் ஏடபில்யூடி சிஸ்டம் காணப்படுவதால், இந்தியாவிலும் அதே போன்றே அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. சுசுகிக்கு உள்ள முக்கிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், அதன் போட்டியாளர்களின் தர நிர்ணயத்திற்கு ஏற்ப இந்த கார் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த காரின்முதல் அறிமுகத்தின் போது ஏடபில்யூடி சிஸ்டம் இணைக்கப்பட்டு இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியா விட்டாலும்  படிப்படியாக ஏடபில்யூடி உட்பட  இன்னும் பல சிறப்பம்சங்களை சேர்த்து மாடல்களை  அறிமுகப்படுத்தும்.

4. மணிகள் மற்றும் விசில்கள்

சியஸ் கேஜெட்டுகளின் அடையாளம் இருக்கும் பட்சத்தில், உபகரணங்களின் பயன்பாட்டில் அதன் போட்டியாளர்களுக்கு நிகராக சுசுகி கட்டாயம் நிலைநிற்காது என்பதை புரிந்து கொள்ளலாம். டச்ஸ்கிரீன் மல்டிமீடியா மற்றும் நெவிகேஷன் சிஸ்டம், பின்புற பார்க்கிங் கேமரா, தானியங்கி பருவநிலை கட்டுபாட்டு அமைப்பு, லெதர் சீட்ஸ் மற்றும் என்ஜின் ஸ்டாட் / ஸ்டாப் பட்டன் ஆகிய சிறப்பு அம்சங்கள் புதிய மாருதி எஸ்-கிராஸில் இடம் பெற்று இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. பாராமீட்டர்கள்

எஸ் கிராஸில் ஏடபில்யூடி சிஸ்டத்தை கொண்டிருந்தால் கூட எல்லா சாலை பகுதிகளுக்கும் ஏற்றது என்று கூற முடியாத வகையில், அதன் அம்சங்கள் மிகவும் குறுகிய விகிதத்தில் உள்ளன. இந்த காரின் போட்டியாளரான ரினால்ட் டஸ்டர், அதிகபட்ச கிரவுண்ட் கிளியரன்ஸ் பயன்படுத்தி, சவால் மிகுந்த சாலைகளிலும் துணிவுமிக்க ஸசஸ்பென்சன் அளித்து முன்னேறுகிறது. இந்த கார் மென்மையான சாலை விரும்பி என்பதால், அதிக கரடுமுரடான பாதைகளில் பயன்படுத்துவதை சிலர் தவிர்க்கலாம்.

6. விலை

போட்டியை பொறுத்த வரை, ஈக்கோஸ்போர்ட்டின் விலையை விட சுசுகி எஸ் கிராஸ் அதிகமாக இருக்கலாம். ஆனால் விலையை சற்று குறைத்தால் மட்டுமே, ரினால்ட் டஸ்டர் மற்றும் நிஸ்ஸான் டிர்ரானோ ஆகியவற்றை விட மாருதியால் விலை குறைவாக அளிக்க முடியும். டஸ்டர் பிரபலமடைந்ததை தொடர்ந்து, அதற்கு விலை அதிகமாக நிர்ணயித்துவிட்டதாக ரினால்ட் நிறுவனம் கடந்த காலத்தில் ஒப்புக் கொண்டது. போட்டியை கருத்தில் கொண்டு, நுகர்வோரிடம் பிரபலமடையும் வரை, மாருதி போட்டிக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்கலாம். தீபாவளியை முன்னிட்டு, மாருதி தனது புதிய பிரிமியம் ஹாட்ச்பேக் மற்றும் அதன் காரியங்களை குறித்து எஸ் கிராஸில் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. தயாரிப்பு செலவுகளை குறைக்க இந்த நடவடிக்கையை மாருதி மேற்கொள்ளலாம்.

was this article helpful ?

Write your Comment on Maruti எஸ்-கிராஸ் 2017-2020

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience