389 வோல்க்ஸ்வேகன் போலோக்களுக்கு மறுஅழைப்பு: ‘டீசல்கேட்’ காரணமல்ல, ஹேண்டுபிரேக் குறைபாடு தான் காரணம் என்கிறது அந்நிறுவனம்
published on அக்டோபர் 12, 2015 10:31 am by manish for வோல்க்ஸ்வேகன் போலோ 2015-2019
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
சமீபகால ‘டீசல்கேட்’ சர்ச்சையை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள எல்லா டீலர்ஷிப்களிலும், போலோ ஹேட்ச்பேக்கின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு, நேற்று வோல்க்ஸ்வேகன் குழுவினர் உத்தரவை வெளியிட்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ‘டீசல்கேட்’ சர்ச்சையை மையப்படுத்தி பல வதந்திகளும் இணையதளத்தில் வந்தன. இந்நிலையில் இதை முழுமையாக மறுத்துள்ள அந்நிறுவனம், அந்த சர்ச்சைக்கும் இந்த மறுஅழைப்பிற்கும் இடையே, எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது. திறனற்ற ஹேண்டுபிரேக்குகளை கொண்டிருப்பது தான், இந்த மறுஅழைப்பிற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாராலும் உதவ முடியாத வகையில், தற்செயலாக இந்த மறுஅழைப்பிற்கான நேரம் அமைந்துள்ளதை பாருங்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 389 யூனிட்களை, வோல்க்ஸ்வேகன் திரும்ப அழைக்கிறது.
இதையும் படியுங்கள்: ஒப்பீடு: அபார்த் புண்டோ இவோ vs ஃபோர்டு ஃபிகோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT
இந்த அறிவிப்பின்படி, 2015 செப்டம்பரில் உருவாக்கப்பட்ட ஒரு தொகுதியில் தான் இந்த பாதிக்கப்பட்ட கார்கள் இடம் பெற்றுள்ளன. செப்டம்பரில் தயாரிக்கப்பட்ட இந்த ஹேண்டுபிரேக்குகளை கொண்ட ஏறக்குறைய 389 கார்கள் இதுவரை விற்பனையாகி உள்ளது. ஆனால் மீதமுள்ளவை விற்பனையாகவில்லை என்றும், சில சூழ்நிலைகளில் அதிலுள்ள கேபிள் ரிடென்ஷன் லிவர்கள் முறிந்து போக வாய்ப்புள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: வோல்க்ஸ்வேகன் குழுவின் சீரமைக்கப்பட்ட அமைப்பின் புதிய CEO-வாக மத்தியாஸ் முல்லர் நியமனம்
இதையடுத்து குறிப்பிட்ட கார்களின் உரிமையாளர்களை, டீலர்ஷிப்கள் தொடர்பு கொள்ள துவங்கியுள்ளன. மேலும் இந்த பழுது பார்க்கும் பணிக்கு, ஏறக்குறைய ஒரு மணிநேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பாதிக்கப்படாத மற்ற தொகுதியில் உள்ள கார்களின் விற்பனையை, வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தொடர்கிறது. பாதிக்கப்பட்ட மாடல்களுக்கான பழுது நீக்கும் பணி இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. பழுது நீக்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்ட கார்கள் கூட விற்பனைக்காக அனுப்பப்படும்.
இதையும் படியுங்கள்: வோல்க்ஸ்வேகனின் நெருக்கடி: யூகங்களின் மத்தியில் மார்டின் வின்டர்காம் ராஜினாமா செய்தார்
சமீபகால ‘டீசல்கேட்’ படுதோல்விக்கு பிறகு, வோல்க்ஸ்வேகனின் பொதுமக்களுடனான உறவை வலுப்படுத்த இது உதவும் என்று தோன்றவில்லை. இதற்கு பதிலாக, ஒரு சமாதான பலியாக அந்நிறுவனத்தின் கோல்ப் GTI-யை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் பரிந்துரை ஆகும்.
இதையும் படியுங்கள்: #2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் புதிய டிகுவானை, வோல்க்ஸ்வேகன் காட்சிக்கு வைக்கிறது