• English
    • Login / Register

    YRA என்ற பலேனோவை பற்றிய 3 முக்கியமான அம்சங்கள்

    மாருதி வைஆர்ஏ க்காக ஆகஸ்ட் 31, 2015 02:45 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 13 Views
    • 4 கருத்துகள்
    • ஒரு கருத்தை எழுதுக

    மாருதி நிறுவத்தின் அற்புதமான புதிய படைப்புகளை அறிமுகப்படுத்தும் நேரம் நெருங்கி வரும் வேளையில், கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் புதிய குதூகலமான செய்திகளை கேள்விப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். இந்நிறுவனத்தினர், தங்கள் S க்ராஸ் SX4 காரின் வெற்றியைப் போல விழா காணாத மாடல்களின் பெயர்களை தொகுத்தனர். அவற்றில், பெரிய அளவு வெற்றியைக் காணாத மாருதி பலேனோவை, தற்போது YRA என்று பெயரிட்டு வெளியிட உள்ளனர். இதன் மூலம், தன்னுடைய நிறுவத்தின் அடையாளத்தை மேன்மைபடுத்த மாருதி எத்தனிக்கிறது.

    புதிய உயர்தர நெக்ஸா விநியோகிஸ்தர்களின் மூலம் புதிய விட்டாரா பிரேஸ்ஸா காருடன் இணைந்து, YRA கார் வாகன சந்தையில் விற்பனைக்கு வரும். அநேகமாக, இங்கிலாந்தின் 2016 ஆம் ஆண்டு கோடை காலத்தில், இந்த கார் முதன்முறையாக வெளியிடப்படும் என்று தெரிகிறது. அதன் பின், இந்தியாவிலும், அதே நேரத்திலேயே அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, YRA காரைப் பற்றிய 3 முக்கிய அம்சங்களை, நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.

    வெளித் தோற்றம்:

    தரமான எடை குறைப்பு தொழில்நுட்பங்களைப் பின்பற்றி, இதன் அளவு மற்றும் எடை சான்றுகள் கச்சிதமாக காம்பாக்ட் ரக கார்களின் நிலையான அளவுகளை ஒத்திருப்பதற்கு, காரின் எடையை குறைக்க கடுமையான முயற்சிகள் எடுத்துள்ளனர். மேலும், DRL –கள், பளபளப்பான முன் விளக்குகள், மிதப்பது போல உள்ள விதான வரிகள் (ரூஃப் லைன்) மற்றும் பின்புறத்தில் LED விளக்குகள் இந்த காரில் பொருத்தப்பட்டு மெருகேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள K வரிசை மற்றும் மல்டி-ஜெட்/DDiS டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு, பலேனோ மாற்றப்பட்டுள்ளது.

    உட்புறத் தோற்றம்

    YRA காரின் உட்புறத் தோற்றமானது, பகட்டாகவும், அதிநவீனமாகவும், விசாலமாகவும், மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டதாகவும் இருக்கும். சமீபத்தில் வெளியான S க்ராஸ் காரில் உள்ள, அனைவரையும் கவர்ந்த அம்ஸங்களான 7 அங்குல தொடு திரை (டச் ஸ்கிரீன்) இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு, வேகத்தைக் கட்டுப்படுத்தும் சீர் வேக கருவி (க்ரூயிஸ் கண்ட்ரோல்) மற்றும் பல விதமான அம்ஸங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.

    நுட்பங்கள்

    சுசூக்கி நிறுவனத்தின் தயாரிப்பான 1.0 லிட்டர் நேரடியாக டர்போ சார்ஜ் செய்யப்படும் பூஸ்டர்-ஜெட் பெட்ரோல் இஞ்ஜினை மாருதி இந்த காரில் பொருத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய இஞ்ஜின், இந்த காரை செயல்திறன் மிக்கதாகவும், எரிபொருள் சிக்கனம் மிகுந்ததாகவும் உயர்த்தும்.

    was this article helpful ?

    Write your Comment on Maruti வைஆர்ஏ

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience