இந்தியாவில் வெளியானது 2025 Audi RS Q8 Performance கார்
4-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜினுடன் ஆடி RS Q8 பெர்ஃபாமன்ஸ் வருகிறது. இது 640 PS மற்றும் 850 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
-
பிளாக் கிரில், LED ஹெட்லைட்கள் மற்றும் கஸ்டமைஸபிள் லைட்டிங் பேட்டர்ன்களுடன் OLED டெயில்லைட்கள் உள்ளன.
-
லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் லெதரால் ஸ்டீயரிங் வீல் உடன் ஸ்போர்ட்டியான சீட்களுடன் பிளாக் நிறத்தில் இன்ட்டீரியர் உள்ளது.
-
12.3-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, டச் ஸ்கிரீன் மற்றும் டிஸ்பிளே பேனலுடன் கூடிய 4-ஜோன் ஆட்டோ ஏசி ஆகியவை உள்ளன.
-
பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், ADAS மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
இது ஆஸ்ட்டின் மார்ட்டின் DBX மற்றும் லம்போர்கினி உருஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.
ஆடி -யின் மிகவும் சக்தி வாய்ந்த எஸ்யூவி-யான RS Q8 பெர்ஃபாமன்ஸ் இந்தியாவில் ஒரு ஃபேஸ்லிஃப்டை அப்டேட்டை பெற்றுள்ளது. இதன் விலை ரூ. 2.49 கோடியிலிருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). இது வெளிப்புற மற்றும் உட்புறத்திற்கான நுட்பமான அப்டேட்களுடன் வருகிறது மற்றும் 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜினை கொண்டுள்ளது. இது 0-100 கி.மீ வேகத்தை 3 வினாடிகளுக்குள் எட்டும். இந்த காரை பற்றிய அனைத்தையும் பார்ப்போம்:
வெளிப்புறம்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஆடி S Q8 காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருந்தாலும் 2025 மாடல் ஹனி கோம்ப் மெஷ் கிரில்லுடன் பிளாக்-அவுட் கிரில் உடன் வருகிறது. LED ஹெட்லைட்கள் லேசர் LED லைட்கள் ஹையர் பீம்களாக வேலை செய்வதோடு பிளாக் கலரிலும் உள்ளான். LED DRL -கள் 5 கஸ்டமைஸ்டபிள் சிக்னேச்சர் வடிவத்தை கொண்டுள்ளன.
இது 23-இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது. இது கான்ட்ராஸ்ட் ரெட் காலிப்பர்களை கொண்டுள்ளது. எக்ஸ்ட்டீரியர் ரியர்வியூ கண்ணாடிகளும் (ORVMs) பிளாக்டு அவுட் ஆக உள்ளன.
பின்புறத்தில் இது முதல் முறையாக OLED லைட்களுடன் வருகிறது. இது ஹெட்லைட்களை போலவே கஸ்டமைஸபிள் லைட் சிக்னேச்சர்களை கொண்டுள்ளது. இது ட்வின்-டிப் எக்ஸாஸ்டுடன் கூடிய பிளாக் கலர் டிஃப்பியூசருடன் வருகிறது. இது கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் பின்புற வைப்பர் ஆகியவற்றைப் பெறுகிறது.
இன்ட்டீரியர்
உள்ளே ஆடி RS Q8 இந்த எஸ்யூவியின் ஸ்போர்ட்டித் தன்மையை காட்டும் வகையில் ரெட் கலர் ஆக்ஸென்ட்களுடன் பிளாக் கலர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. சீட்கள் மற்றும் ஸ்டீயரிங் சக்கரங்களில் லெதர் ரேப்பிங் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கியர் செலக்டர் லீவர், சென்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் டோர் பேனல்களில் மைக்ரோஃபைபர் மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது கான்ட்ராஸ்ட் ஸ்டிச் கொண்ட ஸ்போர்ட்ஸ் சீட்கள் உள்ளன. மற்றும் வழக்கமான Q8 எஸ்யூவி -யில் இருந்து இதை வேறுபடுத்தி காட்டும் வகையில் இருக்கை பின்புறம் 'RS' எம்போஸிங் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e ஆகியற்றுக்கு முதல் நாள் கிடைத்த முன்பதிவுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
வசதிகளை பொறுத்தவரையில் ஆடி RS Q8 ஆனது 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது ஆர்பிஎம் மற்றும் கியர்களை மாற்றுவதற்கான உகந்த நேரத்தைக் குறிக்க தொடர்ந்து சிவப்பு நிறத்தில் ஒளிரும். மேலும், ஆடி எஸ்யூவி ஆனது மிகப்பெரிய டச் ஸ்கிரீன், 23-ஸ்பீக்கர் பேங் ஓலுஃப்சென் சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 4-ஜோன் ஆட்டோ ஏசி கன்ட்ரோல்களுக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பவர்டு டெயில்கேட் ஆகியவற்றுடன் வருகிறது.
பாதுகாப்புக்காக இது மல்டி ஏர்பேக்ஸ், ஆக்டிவ் ரோல் ஸ்டெபிலைசேஷன், ரியர் ஸ்போர்ட் டிஃபெரன்ஷியல், 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் நைட் விஷன் அசிஸ்டன்ட் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளுடன் வருகிறது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
ஆடி RS Q8 ஆனது 4-லிட்டர் V8 பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. அதன் விரிவான விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
4 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் வி8 இன்ஜின் |
பவர் |
640 PS |
டார்க் |
850 Nm |
டிரான்ஸ்மிஷன் |
8-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் |
டிரைவ்டிரெய்ன் |
ஆல்-வீல் டிரைவ் (AWD) |
ஆடி RS Q8 ஆனது 0-100 கி.மீ வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டுகிறது. மேலும் இது அதிகபட்சமாக 305 கி.மீ வேகத்தை மட்டுமே எட்ட கூடியதாக இருக்கும்.
போட்டியாளர்கள்
இந்தியாவில் இதற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை என்றாலும் ஆடி RS Q8 ஆனது ஆஸ்டன் மார்ட்டின் DBX மற்றும் லம்போர்கினி உருஸ் ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.