புதிய வேரியன்ட்களுடன் அறிமுகமானது 2024 Tata Altroz கார், Altroz Racer -லிருந்து பெறப்பட்ட கூடுதல் வசதிகளை கொண்டுள்ளது
modified on ஜூன் 10, 2024 06:04 pm by dipan for டாடா ஆல்டரோஸ்
- 28 Views
- ஒரு கர ுத்தை எழுதுக
மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட புதிய பெட்ரோல் இன்ஜின் வேரியன்ட்கள் இப்போது 9 லட்சத்தில் இருந்து கவர்ச்சிகரமான அறிமுக விxலையில் கிடைக்கின்றன.
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது வழக்கமான டாடா ஆல்ட்ரோஸின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிமுகத்துடன் இணைந்து, டாடா வழக்கமான மாடலின் இரண்டு புதிய வேரியன்ட்களை வெளியிட்டது: XZ LUX மற்றும் XZ+S LUX, ஒவ்வொன்றும் ரேசரிடமிருந்து பெறப்பட்ட கூடுதல் வசதிகளுடன் வருகின்றன. கூடுதலாக ஆல்ட்ரோஸ் XZ+ OS வேரியன்ட் மற்றும் அதன் விலையையும் மேம்படுத்தியுள்ளது.
புதிய வேரியன்ட்கள் மற்றும் விலை
வழக்கமான டாடா ஆல்ட்ரோஸ் விலை ரூ. 6.65 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. விரிவான விலை அறிக்கைக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம், இந்த புதிய மாடல்களுக்கான மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் வேரியன்ட்களின் விலை விவரங்கள்:
வேரியன்ட்கள் |
விலை |
XZ LUX (புதியது) |
9 லட்சம் ரூபாய் |
XZ+S LUX (புதியது) |
9.65 லட்சம் ரூபாய் |
XZ+OS (அப்கிரேட் செய்யப்பட்டது) |
9.99 லட்சம் ரூபாய் |
(விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்-க்கானவை, பான் இந்தியா)
மேம்படுத்தப்பட்ட வசதிகள்
புதிய மற்றும் அப்கிரேட் செய்யப்பட்ட வேரியன்ட்கள் டிரைவரின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது, அவற்றை பற்றி மேலும் அறிந்துகொள்வோம்:
-
XZ LUX: XZ வேரியன்ட்டை மேம்படுத்துகிறது 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வைஃபை வழியாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மேலும் தற்போதுள்ள அனைத்து அம்சங்களுடன் கூடுதலாக 360 டிகிரி கேமராவும் இந்தக் காரில் உள்ளது.
-
XZ+S LUX: 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா மற்றும் 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், வைஃபை வழியாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றைக் கொண்டு, தற்போதுள்ள அனைத்து அம்சங்களுடன் XZ+S வேரியன்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது.
-
XZ+OS: XZ+S LUX வேரியன்ட்டின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் ஆகியவற்றுடன், சிறப்பான டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது.
இன்ஜின் ஆப்ஷன்கள்
புதிய வேரியன்ட்கள் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுக்கு இடையே ஒரு தேர்வை வழங்குகின்றன: 1.2-லிட்டர் பெட்ரோல் (88 PS/115 Nm), 1.2-லிட்டர் பெட்ரோல்-CNG (73.5 PS/103 Nm), மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (90 PS/ 200 Nm). கூடுதலாக, இந்த வேரியன்ட்கள் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCT) ஆப்ஷனை வழங்குகின்றன.
போட்டியாளர்கள்
ஹூண்டாய் i20, மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா கார்களுடன் டாடா அல்ட்ரோஸ் போட்டியிடும்.
மேலும் படிக்க: டாடா ஆல்ட்ரோஸின் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful