2024 Nissan X-Trail ஜூலையில் எதிர்பார்க்கப்படும் வெளியீட்டிற்கு முன்னதாக, காரின் டீசர் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது
published on ஜூலை 03, 2024 07:15 pm by dipan for நிசான் எக்ஸ்-டிரையல்
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த டீஸர்கள் இந்த வரவிருக்கும் எஸ்யூவி -யின் ஹெட்லைட்கள், முன்பக்க கிரில், அலாய் வீல்கள் மற்றும் டெயில் லைட்ஸ் ஆகிய விவரங்களை காட்டுகின்றன.
-
இந்தியாவில் 2024 நிஸான் X-Trail காரின் டீஸர் அதிகாரப்பூர்வமாக மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
-
புதிய டீஸர் இந்த புதிய எஸ்யூவி -யின் சில முக்கிய டிஸைன் எலமென்ட்களை காட்டுகிறது.
-
12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் கொண்ட சர்வதேச-ஸ்பெக் மாடலை போலவே உட்புறங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் 12V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படும்.
-
2024 எக்ஸ்-டிரெயில் எஸ்யூவி -யின் விலை ரூ. 40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம்.
இந்திய சந்தைக்கான நிஸானின் புதிய காராக நான்காவது தலைமுறை நிஸான் எக்ஸ்-டிரெயில் எஸ்யூவி இருக்கும் என்பது ஏற்கனெனவே தெரிந்த ஒன்று. ஜப்பானிய கார் தயாரிப்பாளர் இப்போது இந்த வரவிருக்கும் புதிய எஸ்யூவியின் மற்றொரு டீசரை வெளியிட்டுள்ளது.
நிஸான் இந்தியா (@nissan_india) ஷேர் செய்த ஒரு பதிவு
டீசரில் நாம் பார்த்த விவரங்கள் இங்கே:
டீசரில் காட்டப்பட்ட விவரங்கள்?
நிஸான் X-Trail காரின் சமீபத்திய டீஸர் எஸ்யூவி -யின் முக்கிய வெளிப்புற டிஸைன் எலமென்ட்களான ஸ்பிளிட்-ஸ்டைல் LED ஹெட்லைட்கள் மற்றும் குரோம் ஸ்லேட்டுகள் கொண்ட U- வடிவ கிரில் மற்றும் அதன் இருபுறமும் மற்றும் கீழ் விளிம்புகளிலும் ஒரு குரோம் ஸ்ட்ரிப் போன்றவற்றைக் காட்டியது.
இது முழு அளவிலான எஸ்யூவி -யின் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் நவீன கார்களில் காணப்படுவது போல் கனெக்டட் வடிவமைப்பு இல்லாத LED டெயில்லைட்டுகளையும் காட்டுகிறது.
உட்புறம் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் ஆகிய விவரங்கள் இன்னும் டீஸர் செய்யப்படவில்லை. இருப்பினும் அவை சர்வதேச காரை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
எதிர்பார்க்கப்படும் இன்ட்டீரியர், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
நிஸான் எக்ஸ்-டிரெயில் டூயல்-டோன் பிளாக் மற்றும் டான் இன்டீரியர் ஆப்ஷனை லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் கொண்டிருக்கும். டேஷ்போர்டில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் 10.8 இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகிய இரண்டு 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் (டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு மற்றொன்று) இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வசதிகளில் 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஒரு பனோரமிக் சன்ரூஃப், மெமரி ஃபங்ஷன் கொண்ட ஹீட்டட் மற்றும் பவர்டு முன் இருக்கைகள், 10-ஸ்பீக்கர் பிரீமியம் போஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஒரு இயங்கும் டெயில்கேட் ஆகியவை அடங்கும்.
பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -கள் (ADAS) தொகுப்பு ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், ஃபிரன்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும்.
இன்ஜின் மற்றும் பவர்டிரெய்ன்
உலகளவில் நிஸான் எக்ஸ்-டிரெயில் 12V டெக்னாலஜியை பெறும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது. இது 2 வீல் டிரைவ் (2WD) மற்றும் 4 வீல் டிரைவ் (4WD) ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் விவரங்கள் |
நிஸான் எக்ஸ்-டிரெயில் |
|
இன்ஜின் |
12V தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
|
டிரைவ்டிரெய்ன் |
2WD |
4WD |
பவர் |
204 PS |
213 PS |
டார்க் |
330 Nm |
495 Nm |
டிரான்ஸ்மிஷன் |
8-ஸ்பீடு CVT ஆட்டோமெட்டிக் |
8-ஸ்பீடு CVT ஆட்டோமெட்டிக் |
இந்திய மாடலுக்கான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். போட்டியார்களை வைத்து பார்க்கையில் நிஸான் இந்த எஸ்யூவி -யை 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களில் இந்தியாவிற்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
புதிய நிஸான் X-Trail இந்தியாவில் ஜூலை 2024 -ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ 40 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம். இது டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், ஸ்கோடா கோடியாக், மற்றும் ஜீப் மெரிடியன் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
வாகன உலகில் நடப்பவை பற்றி உடனடி அறிவிப்புகள் வேண்டுமா? கார்தேகோ வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.