• English
  • Login / Register

இந்தியாவில் 2024 Nissan X-Trail காருக்கான முன்பதிவுகள் தொடக்கம், கார் விரைவில் வெளியிடப்படவுள்ளது

published on ஜூலை 26, 2024 04:53 pm by samarth for நிசான் எக்ஸ்-டிரையல்

  • 86 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய X-டிரெயில் கார் ஆனது மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியை கொண்ட 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உடன் கிடைக்கும்.

2024 Nissan X-Trail Bookings Open

  • கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு நிஸான் X-டிரெயில்  இந்தியாவுக்குத் திரும்புகிறது. இப்போது நான்காவது ஜெனரேஷன் வெர்ஷன் விற்பனையில் உள்ளது.

  • நிஸான் X-டிரெயிலை ரூ. 1 லட்சத்திற்கு முன்பதிவு செய்யலாம்.

  • இது ஸ்பிளிட்-ஹெட்லைட்கள், LED DRL -கள் மற்றும் 20-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  • ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 8-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப் ஆகியவை காரில் கிடைக்கும் வசதிகள் ஆக இருக்கும்.

  • இது சிவிடி கியர்பாக்ஸ் உடன் கனெக்ட் செய்யப்பட்ட ஒரே ஒரு 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (163 PS/ 300 Nm) மூலம் இந்த கார் கிடைக்கும்.

  • எஸ்யூவி ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இதன் விலை ரூ. 40 லட்சத்திலிருந்து (X-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 நிஸான் X-டிரெயில் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக (CBU) இந்தியாவுக்குத் திரும்பவுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி இது வெளியிடப்படலாம் என என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான நிஸான் இப்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயன்முறையில் மூன்று வரிசை எஸ்யூவி -க்கான முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் எஸ்யூவி -யை ரூ.1 லட்சத்திற்கு முன்பதிவு செய்யலாம். இந்த காரை வாங்குவது பற்றி நீங்கள் பரிசீலிக்கிறீர்கள் என்றால் நான்காவது தலைமுறை நிஸான் X-டிரெயில் காரில் என்ன கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்:

வெளிப்புறம்

Nissan X-Trail Front

இந்திய-ஸ்பெக் புதிய-ஜென் X-டிரெயில் அதன் வடிவமைப்பின் அடிப்படையில் அதன் உலகளாவிய-ஸ்பெக் மாடலைப் போலவே உள்ளது. இது ஸ்பிளிட்ட-ஹெட்லைட், LED DRLகள் மற்றும் குரோம் சரவுண்ட் கொண்ட "V" வடிவ கிரில் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் X-டிரெயில் 20-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் தடிமனான பாடி கிளாடிங் உள்ளது. பின்புறத்தில் ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்ஸ் மற்றும் பெரிய ஸ்கிட் பிளேட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

கேபின் மற்றும் வசதிகள் 

Nissan X-Trail Interior
Nissan X-Trail Infotainment System

கேபினுக்குள் இந்தியா-ஸ்பெக் X-டிரெயிலுக்கு ஆல் பிளாக் கேபின் தீம் மற்றும் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 12.3-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

7 ஏர்பேக்குகள், ஆட்டோ ஹோல்ட் கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ள. 

மேலும் பார்க்க: 2024 நிஸான் X-டிரெயில் மூன்று நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது

பவர்டிரெய்ன் 

Nissan X-Trail Powertrain

2024 இந்தியா-ஸ்பெக் நிஸான் X-டிரெயில் 12V மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜி கொண்ட ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனுடன் வழங்கப்படும் மற்றும் ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD) செட்டப்பில் மட்டுமே இது கிடைக்கும். பவர்டிரெய்னின் விரிவான விவரங்கள் இங்கே உள்ளன: 

விவரங்கள்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

163 PS

டார்க்

300 Nm

டிரான்ஸ்மிஷன்

CVT

விலை மற்றும் போட்டியாளர்கள்

2024 நிஸான் X-டிரெயில் விலை ரூ. 40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரிடியன், ஸ்கோடா கோடியாக், மற்றும் எம்ஜி குளோஸ்டர் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Nissan எக்ஸ்-டிரையல்

1 கருத்தை
1
S
senthil arun kumar
Jul 26, 2024, 8:02:21 PM

It will be powered by a single 1.5-litre turbo-petrol engine means single cylinder??? Please be clear about the technical specifications.

Read More...
    பதில்
    Write a Reply
    Read Full News

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience