• English
  • Login / Register

2024 MG Astor அறிமுகம்: முன்பை விட குறைவான விலை மற்றும் கூடுதல் தொழில்நுட்பம் வசதிகளை கொண்டுள்ளது

published on ஜனவரி 12, 2024 10:07 pm by shreyash for எம்ஜி ஆஸ்டர்

  • 1K Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய பேஸ்-ஸ்பெக் 'ஸ்பிரின்ட்' வேரியன்ட்டின் மூலம், MG ஆஸ்டர் இந்திய கார் மார்க்கெட்டில் விலை குறைவான காம்பாக்ட் எஸ்யூவி ஆக மாறியுள்ளது. இதன் விலை ரூ.9.98 லட்சத்தில் தொடங்குகின்றது.

2024 MG Astor

  • எஸ்யூவி -க்கான 2024 அப்டேட்களில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆட்டோ-டிம்மிங் IRVM போன்ற அம்சங்கள் உள்ளன.

  • 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் சாஃப்ட்வேர் அப்டேட்டை பெற்றுள்ளது, இப்போது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  • இன்னும் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்.

  • ஆஸ்டரின் விலை இப்போது ரூ.9.98 லட்சம் முதல் ரூ.17.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது.

2021 ஆண்டில் இந்தியாவில் எம்ஜி ஆஸ்டர் தனிப்பட்ட AI உதவியாளர் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்களை கொண்ட பிரிவின் முதல் சிறிய எஸ்யூவி -யாக முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது 2024 ஆம் ஆண்டில், எம்ஜி ஆஸ்டருக்கு புதிய வசதிகளால் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் முழு வேரியன்ட் வரிசையும் சீரமைக்கப்பட்டுள்ளது. புதிய என்ட்ரில் லெவல் ஸ்பிரின்ட் வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டதால், ஆஸ்டரின் ஆரம்ப விலையும் ரூ.9.98 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) குறைந்துள்ளது.

புதிய அப்டேட்களை பற்றி பார்ப்பதற்கு முன், எம்ஜி ஆஸ்டரின் புதுப்பிக்கப்பட்ட வேரியன்ட் வாரியான விலையை பற்றிபார்ப்போம்.

வேரியன்ட்

விலை

பெட்ரோல் மேனுவல்

ஸ்பிரின்ட்

ரூ.9.98 லட்சம்

ஷைன்

ரூ.11.68 லட்சம்

செலக்ட்

ரூ.12.98 லட்சம்

ஷார்ப் ப்ரோ

ரூ.14.41 லட்சம்

பெட்ரோல் ஆட்டோமெட்டிக் (CVT)

செலக்ட்

ரூ.13.98 லட்சம்

ஷார்ப் ப்ரோ

ரூ.15.68 லட்சம்

சாவ்வி புரோ (வித் ஐவரி இன்ட்டீரியர்)

ரூ.16.58 லட்சம்

சாவ்வி புரோ (வித் சங்ரியா இன்ட்டீரியர்)

ரூ.16.68 லட்சம்

டர்போ-பெட்ரோல் ஆட்டோமெட்டிக்

சாவ்வி ப்ரோ

ரூ.17.90 லட்சம்

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (பான் -இந்தியா ) -வுக்கான விலை ஆகும்

குறிப்பு: எம்ஜி ஆஸ்டரின் டூயல்-டோன் எக்ஸ்ட்டீரியர் ஷேட்களுக்கு வாடிக்கையாளர்கள் ரூ.20,000 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

MG ஆனது ஆஸ்டரின் முழு வேரியன்ட் வரிசையையும் புதுப்பித்துள்ளது, முன்பு வழங்கப்பட்ட ஸ்டைல் வேரியன்ட்டுக்கு பதிலாக மிகவும் மலிவு விலையில் ஸ்பிரின்ட் வேரியன்ட் உள்ளது. ஆஸ்டர் இப்போது முன்பை விட ரூ. 84,000 குறைவாக தொடங்குகிறது ஆகவே இது இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் சிறிய எஸ்யூவி ஆக மாறியுள்ளது. மேலும், எஸ்யூ -வியின் சூப்பர் மற்றும் ஸ்மார்ட் வேரியன்ட்களுக்குப் பதிலாக புதிய ஷைன் மற்றும் செலக்ட் வேரியன்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அதே சமயம் ஷார்ப் மற்றும் சாவ்வி டிரிம்களில் ‘ப்ரோ’ என்ற பெயர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது, இது இப்போது ஆஸ்டர் முன்பை விட அதிக கூடுதல் வசதிகளை கொண்டது என்பதைக் குறிக்கிறது.

முன்னதாக, ஆஸ்டரின் டாப்-ஸ்பெக் டர்போ-பெட்ரோல் சாவ்வி வேரியன்ட்டின் விலை ரூ. 18.68 லட்சமாக இருந்தது, இப்போது புதுப்பிக்கப்பட்ட சாவ்வி ப்ரோ டிரிம் ரூ. 17.90 லட்சமாக உள்ளது, இது முன்பை விட ரூ.78,000 குறைவாகும்.

இதையும் பார்க்கவும்: புதிய வசதிகள் மற்றும் ADAS உடன் Kia Sonet ஃபேஸ்லிப்ட் வெளியிடப்பட்டது. விலை ரூ.7.99 லட்சத்தில் தொடங்குகிறது

புதிய அப்டேட்கள்

MG Astor Interior

MG ஆஸ்டரின் 2024 அப்டேட்களில்  வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் ஆட்டோ-டிம்மிங் IRVM போன்ற புதிய அம்சங்கள் உள்ளன. 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இப்போது MG எஸ்யூவி -யின் அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டாக கிடைக்கும்,மற்றும் Smart 2.0 UI ஆக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. வானிலை, செய்திகள், கால்குலேட்டர் மற்றும் பலவற்றிற்கான வாய்ஸ் கமென்ட் -களுடன் கூடிய ஜியோ வாய்ஸ் ரெகனனைசேஷன் அமைப்பு போன்ற கனெக்ட்டட் வசதிகளை இது வழங்குகிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இப்போது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை சப்போர்ட் செய்கின்றது.

ஆஸ்டரில் உள்ள மற்ற அம்சங்களில் 6-வே பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கை, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை அடங்கும். 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் கிளைம்ப் மற்றும் டிசென்ட் கன்ட்ரோல், ஹீட்டட் ORVM -கள், 360-டிகிரி கேமரா , எமர்ஜென்சி பிரேக்கிங், மற்றும் லேன்-கீப்பிங்/டிபார்ச்சர் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

 பவர்டிரெயினில் எந்த மாற்றங்களும் இல்லை

MG Astor engine

ஆஸ்டரின் பவர்டிரெய்ன் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை எம்ஜி மாற்றவில்லை. இது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (110 PS / 144 Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது, மற்றும் 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (140 PS / 220 Nm) ) 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள்

எம்ஜி ஆஸ்டர் விலை இப்போது ரூ.9.98 லட்சம் முதல் ரூ.17.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுடன் போட்டியிடுகின்றது.

மேலும் படிக்க: எம்ஜி ஆஸ்டர்  ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on M ஜி ஆஸ்டர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience