சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2024 Mahindra XUV400 சோதனையின் போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது

rohit ஆல் நவ 30, 2023 07:24 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
43 Views

இந்த கார் ஃபேஸ்லிப்டட் மஹிந்திரா XUV300 போன்ற வடிவமைப்பு அப்டேட்களை கொண்டிருக்கும். இதில் ஸ்பிளிட் ஹெட்லைட்கள் மற்றும் புதிய ஃபாங் வடிவ LED DRL -கள் அடங்கும்.

  • மஹிந்திரா 2023 -ம் ஆண்டின் தொடக்கத்தில் XUV400 -ஐ தனது முதல் மின்சார எஸ்யூவி - யாக அறிமுகப்படுத்தியது.

  • ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலில் புதிய அலாய் வீல்கள் மற்றும் இணைக்கப்பட்ட LED டெயில்லைட்கள் கிடைக்கும்.

  • கேபின் அப்டேட்களில் புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் பெரிய டிஸ்பிளேக்கள் இருக்கலாம்.

  • பேட்டரி பேக்குகள் அப்படியே இருக்கும் ஆனால் மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச் -ஐ பெறலாம்.

  • 2024 -ன் இரண்டாம் பாதியில் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா XUV400 மஹிந்திராவின் முதல் நீண்ட தூர மின்சார எஸ்யூவியாக 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) சமமான - மஹிந்திரா XUV300 காரானது வரும் 2024 ஆண்டில் ஒரு மிட்லைஃப் அப்டேட்டை பெறவுள்ளது. மஹிந்திரா ஒரு இவி -யை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. அத்துடன், அதன் சோதனை காரும் சாலையில் சோதனை செய்யப்படும் போது தென்பட்டுள்ளது.

என்ன வித்தியாசம் தெரிகிறது ?

ஸ்பை போட்டோக்களில் உள்ள மாடலில் நீங்கள் கவனிக்கும் முதல் விஷயங்களில் ஒன்று, மஹிந்திரா EV மாடல்களுக்கு குறிப்பிட்ட காப்பர் எலமென்ட்களை தக்கவைத்துள்ள புதிய வடிவிலான முன்பக்கம் ஆகும். இது இப்போது அதே ஸ்பிளிட் கிரில் அமைப்பு, ஃபாங் வடிவ LED DRL மற்றும் ஸ்பிலிட் ஹெட்லைட்களை கொண்டுள்ளது. ஃபேஸ்லிப்டட் XUV300 சோதனை காரில் கூட இவை அனைத்தையும் பார்க்க முடிகிறது.. மஹிந்திராவின் பார்ன் எலக்ட்ரிக் (BE) வரம்பின் EV -களில் இருந்து இந்த வடிவமைப்பு ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

சோதனைக் கார் முழுமையாக மறைக்கப்பட்டிருந்ததால், அதன் பக்கவாட்டில் தெரியும் ஒரே குறிப்பிடத்தக்க வித்தியாசம் புதிய அலாய் வீல்கள் மட்டுமே. 2024 XUV400 -ன் பின்புறத்தை பற்றிய ஸ்பை ஷாட் கிடைக்கவில்லை. ஆனால் கனெக்ட்டட் LED டெயில்லைட்கள் உட்பட XUV300 போன்ற அதே அப்டேட்கள் இதிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கேபின் மற்றும் அம்ச புதுப்பிப்புகள்

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XUV400 -ன் இன்டீரியரில் எந்தப் படமும் இல்லை என்றாலும், மஹிந்திரா புதிய டேஷ்போர்டு வடிவமைப்புடன் கேபினை அப்டேட் செய்யப்பட்ட நிலையில் கொடுக்கப்படலாம். இது புதிய இருக்கை அப்ஹோல்ஸ்டரி மற்றும் பெரிய டிஸ்பிளேவையும் பெற வாய்ப்புள்ளது. அம்சங்களைப் பொறுத்தவரை, புதுப்பிக்கப்பட்ட XUV400 ஆனது, 2024 மஹிந்திரா XUV300 -ன் அதே அம்ச புதுப்பிப்புகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவை அடங்கும். தற்போதுள்ள சிங்கிள்-பேன் சன்ரூஃப், ஆட்டோ ஏசி மற்றும் கனெக்டட் கார் டெக் போன்றவற்றைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

மஹிந்திரா நிறுவனம் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எலக்ட்ரிக் எஸ்யூவியை வழங்கலாம்.

இதையும் சரிபார்க்கவும்: தோனியின் கேரேஜில் சேர்ந்த தனித்துவமான Mercedes-AMG G 63 எஸ்யூவி

பேட்டரி மற்றும் ரேஞ்ச் பற்றிய விவரம் ?

புதிய மஹிந்திரா XUV400 தற்போதைய மாடலின் அதே பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் (34.5 kWh மற்றும் 39.4 kWh) தொடரும் என்றாலும், இது சற்று மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச் உடன் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம். இப்போதைக்கு, XUV400 -ன் கோரப்பட்ட வரம்பு முறையே 375 கிமீ மற்றும் 456 கிமீ ஆகும். இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களும் ஒரே 150 PS/310 Nm மின்சார மோட்டாரை பெறுகின்றன.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மஹிந்திரா XUV400 2024 -ல் வர உள்ளது, இது ஃபேஸ்லிஃப்ட்டட் XUV300 அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வருடத்தின் இரண்டாம் பாதியில் வரக்கூடும். ரூ.15.99 லட்சம் முதல் ரூ.19.39 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விற்கப்படும் தற்போதைய மாடலை விட இது சிறிய விலை உயர்வுடன் வரலாம். இது டாடா நெக்ஸான் EV உடன் போட்டியை தொடரும். மேலும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மற்றும் விலை குறைவாக உள்ள MG ZS EV ஆகியவற்றுக்கு ஒரு மாற்றாகவும் இருக்கும்.

பட ஆதாரம்

மேலும் படிக்க: XUV400 EV ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Mahindra எக்ஸ்யூவி400 இவி

மேலும் ஆராயுங்கள் on மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை