ரூ. 67.90 லட்சம் விலையில் வெளியானது 2024 Land Rover Discovery Sport… இப்போது கூடுதல் அம்சங்களுடன் வருகின்றது
published on ஜனவரி 16, 2024 09:37 pm by shreyash for லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்
- 179 Views
- ஒரு கருத்தை எழுதுக
என்ட்ரி லெவல் லேண்ட் ரோவர் சொகுசு எஸ்யூவி -யின் விலை ரூ.3.5 லட்சம் வரை குறைந்துள்ளது.
ஜனவரியில் MY24 அப்டேட்களின் வரிசையில் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரும் இணைகின்றது. இந்தியாவில் ரூ 67.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான கர்வ்டு டிஸ்பிளே மற்றும் புதிய டிரைவ் மோட் செலக்டர் ஆகியவை இந்த புதிய அப்டேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. லேண்ட் ரோவர் இந்த சொகுசு எஸ்யூவி -யின் விலையையும் ரூ.3.5 லட்சம் வரை குறைத்துள்ளது. மேலும் விவரங்களுக்குச் பார்க்கும் முன், 2024 டிஸ்கவரி ஸ்போர்ட்டின் விலை விவரங்கள் இங்கே:
வேரியன்ட் |
விலை |
டைனமிக் SE பெட்ரோல் |
ரூ.67.90 லட்சம் |
டைனமிக் SE டீசல் |
ரூ.67.90 லட்சம் |
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (பான் இந்தியா) -வுக்கான விலை ஆகும்
2024 டிஸ்கவரி ஸ்போர்ட் -க்கான அப்டேட்கள்
லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்டின் வெளிப்புறத்தில் மாற்றங்கள் குறைவாகவே உள்ளன. கிரில், லோயர் பாடி சில்ஸ், லோயர் பம்ப்பர்கள் மற்றும் டிஸ்கவரி பேட்ஜ் ஆகியவை இப்போது பளபளப்பான பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. எஸ்யூவி இப்போது புதிய வடிவிலான 19-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. இறுதியாக, இது இப்போது ஒரு புதிய வெரிசைன் ப்ளூ பெயிண்ட் ஸ்கீமை பெறுகிறது.
இதையும் பார்க்கவும்: இந்த ஜனவரியில் மஹிந்திரா எஸ்யூவிகள் ரூ.57,000 வரை விலை உயர்ந்துள்ளன
2024 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்டின் சிறப்பம்சமாக, ரேஞ்ச் ரோவர் வேலரில் சமீபத்தில் காணப்பட்ட புதிய 11.4-இன்ச் கர்வ்டு கிளாஸ் பிவி ப்ரோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் புதுப்பிக்கப்பட்ட டேஷ்போர்டு அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளேவையும் சப்போர்ட் செய்கிறது. அப்டேட் செய்யப்பட்ட எஸ்யூவி -யானது லேண்ட் ரோவர் "ஓக் ஷேடோ" என்ற புதிய டிரைவ் மோட் செலக்டரையும், புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலையும் பெறுகிறது.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
அப்டேட் செய்யப்பட்ட டிஸ்கவரி ஸ்போர்ட்டில் உள்ள மற்ற அம்சங்களில் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, PM2.5 ஏர் ஃபில்டர் மற்றும் தெளிவான கிரவுண்ட் வியூ அம்சத்துடன் கூடிய 360-டிகிரி கேமரா (காரின் பானட்டின் கீழ் உள்ளவற்றைப் பொருத்திய கேமராக்களின் மூலமாக எஸ்யூவி -யை சுற்றியும் திரையில் பார்க்க முடியும்) ஆகியவை அடங்கும். 7-சீட்டர் லேண்ட் ரோவர் எஸ்யூவியில் 12-வே டிரைவர் மற்றும் 10-வே கோ-டிரைவரின் எலக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட்டபிள் மெமரி ஃபங்ஷன், பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் பவர்டு டெயில்கேட் ஆகியவையும் உள்ளன.
பல ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் டிசெட்ன்ட் கன்ட்ரோல், ரோல் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஆட்டோ ஹை பீம் அசிஸ்ட் மற்றும் எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட் ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் பார்க்கவும்: Mercedes-Benz 2024 இல் 12 க்கும் மேற்பட்ட புதிய மாடல்களை இந்தியாவிற்கு கொண்டு வரவுள்ளது
பவர்டிரெய்னில் மாற்றம் இல்லை
லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் முன்பு இருந்த அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (249 PS / 365 Nm), மற்றும் இன்ஜெனியம் 2-லிட்டர் டீசல் இன்ஜின் (204 PS / 430 Nm). இரண்டு யூனிட்களும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளன, இது நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை வழங்குகிறது.
போட்டியாளர்கள்
இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரானது Mercedes-Benz GLC, ஆடி Q5, மற்றும் BMW X3 ஆகிய கார்களுடன் போட்டியிடுகின்றது.
மேலும் படிக்க: லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக்