2024 Hyundai Creta நைட் எடிஷன் வெளியிடப்பட்டது
published on செப் 04, 2024 07:11 pm by shreyash for ஹூண்டாய் கிரெட்டா
- 45 Views
- ஒரு கருத்தை எழுதுக
கிரெட்டாவின் நைட் எடிஷன் ஆல் பிளாக் கலர் கேபின் தீம் மற்றும் வெளிப்புறத்தில் பிளாக் டிஸைன் எலமென்ட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
-
ஆல் பிளாக் கிரில், பிளாக்-அவுட் அலாய் வீல்கள் மற்றும் ஸ்கிட் பிளேட்டுகள் ஆகியவை உள்ளன.
-
உள்ளே கான்ட்ராஸ்ட் பிராஸ் இன்செர்ட்களுடன் ஆல் பிளாக் கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.
-
1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கும்.
-
2024 கிரெட்டா நைட் எடிஷனின் விலை ரூ.14.51 லட்சம் முதல் ரூ.20.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா -வின் நைட் எடிஷன் இப்போது விற்பனைக்கு திரும்பியுள்ளது. இப்போது ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் கிடைக்கிறது. எப்போதும் போலவே இந்த காரில் ஸ்போர்ட்டியர் பிளாக் டிசைன் எலமென்ட்கள் மற்றும் ஆல் பிளாக் இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. கிரெட்டா நைட் எடிஷன் 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன், மிட்-ஸ்பெக் S(O) மற்றும் டாப்-ஸ்பெக் SX (O) வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களை பார்க்கும் முன்னர் கிரெட்டாவின் இந்த பிளாக் பதிப்பின் வேரியன்ட் வாரியான விலை விவரங்களை பார்ப்போம்.
விலை
வேரியன்ட் |
வழக்கமான விலை |
நைட் எடிஷன் விலை |
வித்தியாசம் |
1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
|||
S(O) MT |
ரூ.14.36 லட்சம் |
ரூ.14.51 லட்சம் |
+ ரூ.15,000 |
S (O) CVT |
ரூ.15.86 லட்சம் |
ரூ.16.01 லட்சம் |
+ ரூ.15,000 |
SX (O) MT |
ரூ.17.27 லட்சம் |
ரூ.17.42 லட்சம் |
+ ரூ.15,000 |
SX (O) CVT |
ரூ.18.73 லட்சம் |
ரூ.18.88 லட்சம் |
+ ரூ.15,000 |
1.5 லிட்டர் டீசல் |
|||
S(O) MT |
ரூ.15.93 லட்சம் |
ரூ.16.08 லட்சம் |
+ ரூ.15,000 |
S (O) AT |
ரூ.17.43 லட்சம் |
ரூ.17.58 லட்சம் |
+ ரூ.15,000 |
SX (O) MT |
ரூ.18.85 லட்சம் |
ரூ.19 லட்சம் |
+ ரூ.15,000 |
SX (O) AT |
ரூ.20 லட்சம் |
ரூ.20.15 லட்சம் |
+ ரூ.15,000 |
விலை விவரங்களும் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
2024 கிரெட்டாவின் அனைத்து நைட் எடிஷன் வேரியன்ட்களும் வழக்கமான வேரியன்ட்களை விட விலை ரூ.15,000 கூடுதலாக வருகின்றன.
வெளியில் உள்ள பிளாக் டீடெயில்கள்
ஹூண்டாய் கிரெட்டாவின் நைட் எடிஷனில் அதன் ஸ்போர்ட்டி தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் நிறைய பிளாக் டிஸைன் எலமென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புறம் முழுவதும் பிளாக் நிற கிரில் மற்றும் ஸ்கிட் பிளேட் ஆகியவை மேட் பிளாக் ஹூண்டாய் லோகோ ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் கிரெட்டா நைட் எடிஷனில் பிளாக்-அவுட் 17-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ரெட் பிரேக் காலிப்பர்கள் மற்றும் பிளாக் ரூஃப் ரெயில்கள் ஆகியவற்றை பார்க்க முடிகிறது. பின்புறத்தில் ஸ்கிட் பிளேட் மற்றும் ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவை பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் டெயில்கேட் லோகோக்களுக்கு மேட் பிளாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளன. எளிதாக அடையாளம் காண டெயில்கேட்டில் நைட் எடிஷன் பேட்ஜும் உள்ளது.
பிளாக் கலர் எக்ஸ்ட்டீரியர் ஷேடு தவிர கிரெட்டா நைட் எடிஷன் டைட்டன் கிரே மேட்டிலும் ரூ. 5,000 கூடுதல் விலையில் கிடைக்கிறது. மேலும் ரூ.15,000 கூடுதல் செலுத்தினால் டூயல்-டோன் ஃபினிஷ் கிடைக்கும்.
மேலும் பார்க்க: டூயல் CNG சிலிண்டர்களுடன் Hyundai Aura E வேரியன்ட் அறிமுகம்
ஆல் பிளாக் கேபின் தீம்
டேஷ்போர்டு அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் கிரெட்டா நைட் பதிப்பானது டாஷ்போர்டிலும் சென்டர் கன்சோலை சுற்றியும் கான்ட்ராஸ்ட் பிராஸ் இன்செர்ட்கள் உடன் ஆல் பிளாக் உட்புற தீமை பெறுகிறது. இருக்கைகள், டிரான்ஸ்மிஷன் லீவர் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவை பிளாக் நிற லெதரெட்டில் கொடுக்கப்பட்டுள்ளன, மேலும் அவை பிராஸ் பைப்பிங் மற்றும் ஸ்டிச்சிங் ஆகியவற்றைப் பெறுகின்றன. கிரெட்டாவின் இந்த பிளாக் பதிப்பில் உள்ள மற்றொரு வரவேற்கத்தக்க மாற்றம் மெட்டல் பெடல்கள் ஆகும்.
வசதிகளில் மாற்றங்கள் இல்லை
ஹூண்டாய் கிரெட்டா நைட் பதிப்பில் கூடுதல் வசதிகள் எதுவும் இல்லை. அதன் வசதிகளின் பட்டியலில் டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று டிரைவர் டிஸ்பிளேவுக்காக), டூயல் ஜோன் ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை அடங்கும்.
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்ட லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள்கிடைக்கும்
கிரெட்டா நைட் எடிஷன் 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கிறது. விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
115 PS |
116 PS |
டார்க் |
144 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, CVT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
இது 160 PS 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படவில்லை. இருப்பினும் வாடிக்கையாளர்கள் கிரெட்டா N லைன் வடிவத்தில் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் ஸ்போர்ட்டியர் தோற்றமுடைய கிரெட்டாவை தேர்வு செய்யலாம்.
விலை & போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டாவின் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.20.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கும். கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலிவேட், மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful