2015 LA ஆட்டோ ஷோவில் 2017 எலாண்ட்ரா காட்சிப்படுத்தப்பட்டது
published on நவ 20, 2015 02:11 pm by nabeel for ஹூண்டாய் எலென்ட்ரா 2015-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
தற்போது நடந்து கொண்டிருக்கும் 2015 லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில், அமெரிக்க வாகன சந்தைக்கான 2017 எலாண்ட்ரா காரை ஹுண்டாய் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. எப்போதும் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் ஹுண்டாயின் சிறந்த மாடல்களின் ஆறாவது ஜெனரேஷன் எலாண்ட்ரா மாடல் ஆகும். அநேகமாக, 2017 -ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க சந்தையில் இது விற்பனைக்கு வந்துவிடும். 2016 –ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், இந்த கார் இந்திய சந்தையில் களமிறக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
தென் கொரியாவில், ஆவாந்தே என்ற பெயரில் எலாண்ட்ரா கார் வெளியிடப்பட்டது. இப்போதும், அந்த பெயரிலேயே விற்பனை ஆகிறது. ஒரு சில தோற்ற வேறுபாடுகள் இருந்தாலும், பெரும்பாலும் இரண்டு மாடல்களும் ஒன்றாகவே உள்ளன. அடிப்படை ஸ்பெஷல் எடிஷன் மற்றும் லிமிடெட் மாடல்களில், எப்போதும் உள்ள தரமான 2.0 லிட்டர் MPI அட்கின்சன் 4 சிலிண்டர் இஞ்ஜினை இந்நிறுவனம் பொருத்தியுள்ளது. அதிகபட்சமாக 147 hp சக்தியை 6200 rpm –மிலும்; 179 Nm டார்க்கை 4500 rpm –மிலும், இந்த இஞ்ஜின் உற்பத்தி செய்கிறது. எலாண்ட்ரா எக்கோ மாடலில் பொருத்தப்பட்டுள்ள புத்தம் புதிய 1.4 லிட்டர் கப்பா டர்போ சார்ஜ்ட் GDI 4 சிலிண்டர் இஞ்ஜின், 2016 –ஆம் ஆண்டின் வசந்த காலத்திற்கு பிறகு சந்தையில் கிடைக்கும். எலாண்ட்ரா எக்கோவில் வரும் இஞ்ஜின், 128 hp சக்தியை 5500 rpm –மிலும் மற்றும் மிகுதியான 211.5 Nm என்ற அளவில் டார்க்கை மிகக் குறைவான 1400 – 3700 rpm –மில் உற்பத்தி செய்கிறது. எக்கோ ஷிப்ட் 7 ஸ்பீட் இரட்டை கிளட்ச் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட இந்த இஞ்ஜின், எலாண்ட்ரா எக்கோ மாடலுக்கு 14 km/l என்ற அளவில் மைலேஜ்ஜை பெற்றுத் தரும் என்று ஹுண்டாய் நிறுவனம் உறுதியாகக் கூறுகிறது.
அமெரிக்காவிற்காக வடிவமைக்கப்பட்ட எலாண்ட்ராவின் முன்புறத்தில் குரோமிய வேலைப்பாடுகளுடன் வரும் பெரிய கிரில் மற்றும் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள ஆங்குலர் DRLகள், இதன் நேர்த்தியை அதிகப்படுத்துகின்றன. இந்த காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் இதன் ஏரோடைனமிக்ஸை மேம்படுத்துகின்றது. நளினமான வளைவுடன் வரும் ஃபுளூயிடிக் டிசைன் திட்டத்தை ஹுண்டாய் நிறுவனம், இந்த காரில் உபயோகிக்கவில்லை என்றாலும், ஒரு புதிய வடிவமைப்பு டிசைனை இந்த மாடலில் கையாண்டுள்ளது. C வடிவத்தில் உள்ள பனி விளக்குகள் மற்றும் அறுங்கோண வடிவில் உள்ள க்ரோம் கிரில்லும் இந்த காரின் தோற்றத்தை மிகவும் வசீகரமாக்குகின்றன. பின்புற விளக்குகள் மற்றும் பூட் பகுதியும் ஒரு சில மாற்றங்களைப் பெற்று, இந்த காருக்கு நேர்த்தியான தோற்றத்தைத் தந்து, இதன் ஏரோடைனமிக்ஸையும் மேம்படுத்துகின்றன. பல விதமான தொழில்நுட்பங்களை இணைத்து, ஹுண்டாய் நிறுவனம் இதன் உட்புறத்தை செம்மைப்படுத்தி உள்ளது. உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள, மேம்பட்ட 8.0 அங்குல நேவிகேஷன் அமைப்புடன் வரும் மேம்படுத்தப்பட்ட டச்ஸ்கிரீன் திரையில் கூடுதல் தெளிவுடன் படங்கள் தெரிகின்றன. மேலும், இதன் டச் அண்ட் டிராக் கண்ட்ரோல் அமைப்பை மேம்படுத்த டச் சென்ஸிட்டிவிடி அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை நேரத்திலும் பிரகாசமாகவும் தெளிவாகவும் தெரியும் திரை பொருத்தப்பட்டுள்ளது. மேலும், வரைபடத்தையும் இசை விவரங்களையும் ஒரு சேரக் காண்பிக்கும் ஸ்ப்லிட் ஸ்கிரீன் டிஸ்ப்ளே போன்ற பலவிதமான தொழில்நுபங்கள் நெடிய பயணத்தை கூட எளிதாகவும் இனிமையாகவும் மாற்ற வல்லதாக இருக்கின்றன. கூடுதல் வசதிக்காகவும், அதிக கனெக்டிவிடிக்காகவும், எலாண்ட்ராவில் உள்ள நேவிகேஷன் அமைப்பில், ஏற்கனவே லோட் செய்யப்பட்ட ஆப்கள், வாய்ஸ் கண்ட்ரோல் செயல்பாடுகள், மற்றும் உயர்தர சிரியஸ் XM அம்சங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக, 8 ஸ்பீக்கர்களுடன் சென்டர் ஸ்பீக்கர் மற்றும் சப்வூஃபர் இணைக்கப்பட்ட உயர்தர இன்பினிட்டி ஆடியோ சிஸ்டம் எலாண்ட்ராவில் பொருத்தப்பட்டுள்ளது.
ஹயுண்டாய் பற்றி மேலும் :
0 out of 0 found this helpful