Maruti e Vitara பேஸ் வேரியன்ட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் விஷயங்கள்
இணையத்தில் வெளியான தகவல்களின்படி மாருதி இ விட்டாரா டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் மாருதி நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் காரான மாருதி இ விட்டாரா -வை காட்சிப்படுத்தியது. இந்த காரின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அதன் வேரியன்ட் தொடர்பான சில விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா என மூன்று வேரியன்ட்களில் வழங்கலாம் என்று தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வெளியான தகவல்கள் உண்மை என்றால், மாருதி EV பேஸ்-ஸ்பெக் டெல்டா டிரிம் ஆனது நிறைய வசதிகளை கொண்டிருக்கும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் இங்கே:
வெளிப்புறம்
பேஸ் டெல்டா வேரியன்ட் LED DRL -கள் மற்றும் LED டெயில் லைட்கள், LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்களுடன் வரலாம். ஆனால் ஃபாக் லைட்கள் இருக்க வாய்ப்பில்லை. இது 18-இன்ச் ஏரோடைனமிக் வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள், ரூஃப் ஃபிட்டட் ஸ்பாய்லர் மற்றும் ORVM -களில் ஒருங்கிணைக்கப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். எனவே வெளிப்புறம் இதன் டாப் வேரியன்ட் உடன் ஒப்பிடும் போது பெரிய மாற்றமில்லாமல் இருக்கும்.
இன்ட்டீரியர், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
வெளியான தகவலின்படி டெல்டா வேரியன்ட் பிளாக் மற்றும் பிரவுன் தீம் உடன் ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் வரலாம். ஆனால் முன் மற்றும் பின் பயணிகளுக்கு சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்டுடன் வரலாம். இது ரிக்ளைனிங் மற்றும் ஸ்லைடிங் பின் இருக்கைகள் மற்றும் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்களுடன் அதே 2-ஸ்போக் ஸ்டீயரிங்கை கொண்டுள்ளது.
இது ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 10.1 இன்ச் டச்ஸ்கிரீன், பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி, பல வண்ண சுற்றுப்புற விளக்குகள், டே/நைட் ஐஆர்விஎம் மற்றும் பல மொபைல் சார்ஜிங் ஆப்ஷன்களுடன் வரலாம். இருப்பினும் டெல்டா வேரியன்ட் பனோரமிக் கிளாஸ் ரூஃப், வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற அம்சங்களை இழக்க வாய்ப்புள்ளது - அநேகமாக உயர்தர வேரியன்ட்களுக்கு மட்டுமே.
டெல்டா வேரியன்ட் -ல் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ESC, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், TPMS, ஒரு எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இருப்பினும் 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பம் போன்ற வசதிகள் கொடுக்கப்பட வாய்ப்பில்லை.
மேலும் படிக்க: Hyundai Creta Electric மற்றும் Maruti e Vitara: முக்கிய விவரங்கள் ஒப்பீடு
பேட்டரி பேக், எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் கிளைம்டு ரேஞ்ச்
வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன் கிடைக்குமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் இ விட்டாரா இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறும் என்று மாருதி உறுதிப்படுத்தியுள்ளது. அதன் விவரங்கள் இங்கே:
பேட்டரி பேக் |
49 kWh |
61 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
1 |
பவர் |
144 Ps |
174 Ps |
டார்க் |
192.5 Nm |
192.5 Nm |
கிளைம்டு ரேஞ்ச் |
அறிவிக்கப்பட வேண்டும் |
500 கி.மீ -க்கு மேல் |
டிரைவ்டிரெய்ன் |
ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD) |
மாருதி இ விட்டாரா முன்-வீல்-டிரைவ் செட்டப் உடன் மட்டுமே வழங்கப்படும். பேஸ் மாடல் சிறிய பேட்டரி பேக்குடன் மட்டும் வரலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி இ விட்டாரா காரின் விலை ரூ. 17 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், டாடா கர்வ் EV, MG ZS EV மற்றும் மஹிந்திரா பிஇ 6 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.