• English
  • Login / Register

புதிய கவர்ச்சிகரமான வோல்வோ பெட்ரோல் இஞ்ஜின் S-60 T6 சிறப்பம்சங்கள்

வோல்வோ எஸ்60 2015-2020 க்காக ஜூலை 13, 2015 05:40 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஒரு சில காலமாக தேக்கமுற்ற  நிலையில்  இருந்த வோல்வோ மீண்டும் புத்துயிர் பெற்று 2015ல் பற்பல அறிமுகங்களை செய்துள்ளது. V40 கிராஸ் கண்ட்ரி T4, புதிய xc 90 மற்றும் V40 ஹாட்ச் அறிமுக வரிசையில், நான்காவதாக தனது S-60 T6-ஐ வோல்வோ அறிமுகப்படுத்துகிறது.

வோல்வோ இந்தியா நிறுவனம் ஜுலை 3 2015 அன்று பெட்ரோலில் இயங்ககூடிய சிறிய சொகுசு ரக சேடன் S-60  கார்-ஐ மறுஅறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் முதலில் அறிமுகபடுத்தியபோது 6சிலிண்டர் மோட்டார் பொருத்தபட்ட ஏ.டபீள்யு.டி தொழில்நுட்பத்தில் S-60 உலா வந்தது. ஆனால் அதன்பின், மேம்படுத்தப்பட்ட வகையில் இதன் பெட்ரோல் இஞ்ஜின் மாற்றபட்டு D5, D4 என்ற டீசல் இஞ்ஜின் பொருத்தி விற்பனைக்கு வந்தது. ஜூலை 3 முதல், நேரடி உட் செலுத்தும் டர்போசார்ஜ்ட நான்கு சிலிண்டர் பெட்ரோல் இஞ்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது.  

வால்வோ S-60  T6-இன் தனிச்சிறப்புகள்:

  • இதன் நேரடி உட்செலுத்தல் நான்கு சிலிண்டர் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 306 ஹெச்பி செயல் திறன் அதிகபட்ச 400 முறுக்குவிசையை உற்பத்தி செய்கிறது.
  • பழைய பெட்ரோல் வகை AWD தொழில்நுட்பம் போலல்லாமல், புதிய S-60  T6 வோல்வோ மோட்டார்,  எட்டு மடங்கு அதிக உந்து சக்தியை  தானியங்கி செயல்திறன் மூலம் முன் சக்கரத்திற்கு அனுப்புகிறது.
  • புதிய மோட்டார் கொண்ட இவ்வாகனம் 100kmph  வேகத்தை தொட வெறும் 5.9 வினாடியே எடுத்துக்கொள்கிறது. மேலும்,  அதன் அதிக வேகம் 230 kmph வரை செல்கிறது.

இது தவிர,  தற்போது இந்தியாவில் விற்பனைக்கு உள்ள S-60 டீசல் மாடலை  ஒத்ததாகவே பெட்ரோல் மாடலும் உள்ளது. பெட்ரோல் மாடல் S-60 கார் எல்.இ.டி. – டி.ஆர். எல்லுடன்  கூடிய வளைக்கும் தன்மை கொண்ட முகப்பு விளக்குகளையும், எல்.இ.டி பின்புற விளக்குகளையும்  கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது. உட்புற தோற்றதில் 7 அங்குல இன்போடெயின்மென்ட் அமைப்புடன் அனைத்தும் இலக்கமுறை மயமாக்கபட்டுள்ளன. மேலும்,  வோல்வோ S-60 , சந்தையில் உலா வரும் மெர்சிடிஸ் பென்ஸ் சி 200 பெட்ரோல் மற்றும் பி.எம்.டபிள்யூ 328i ஆகிய தரமான கார்களுடன்  போட்டியிட தயாராகவுள்ளது.

was this article helpful ?

Write your Comment on Volvo எஸ்60 2015-2020

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience