பாருங்கள்: Kia Carnival மற்றும் Kia Carnival ஹை-லிமோசின் இடையேயான வேறுபாடுகள் என்ன ?
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் உலகளவில் கார்னிவல் ஹை-லிமோசின் வேரியன்ட் அறிமுகமானது. ஆனால் இந்தியாவில் அதன் அறிமுகத்திற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.
நாங்கள் ஏற்கனவே கியா பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ல் காட்சிப்படுத்தப்பட்ட கார்களின் விவரங்களை பற்றி ஒரு கட்டுரையை கொடுத்துள்ளோம். காட்சிப்படுத்தப்பட்ட மாடல்களில் தனித்து நிற்கும் ஒரு மாடல் கியா கார்னிவல் ஆகும். காரணம் இது புதிய ஹை-லிமோசின் வேரியன்ட்டை உலகளவில் அறிமுகப்படுத்தியது. இது வழக்கமான மாடலில் இருந்து நிறைய வித்தியாசங்களைக் கொண்டுள்ளது. கார்தேக்கோ -வின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய ரீலில், இந்த வேறுபாடுகள் அனைத்தையும் விரிவாகக் விளக்கியுள்ளோம்.
A post shared by CarDekho India (@cardekhoindia)
கார்னிவல் ஹை-லிமோசின் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்
கியா கார்னிவல் ஹை-லிமோசைன் ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் உலகளவில் அறிமுகமானது. வழக்கமான கார்னிவல் போன்ற அதே உடல் பாணியுடன். ஆனால் பம்ப்-அப் கூரை உள்ளது. இந்த ரூஃப் ஆனது MPV உடன் ஒரு ரூஃபில் பொருள்களை கொண்டு செல்வதற்காக ஒரு பெட்டி கொடுக்கப்பட்டுள்ளது போன்ற தோற்றத்தை கொடுக்கலாம். ஆனால் இந்த அமைப்பு உள்ளே அதிக ஹெட்ரூமை கொடுக்கிறது.
அதன் உள்ளே ஆறு சீட்கள் நடுவரிசையில் கேப்டன் சீட்கள் உள்ளன. ஃபுளோர் பிரஷ்டு செய்யப்பட்ட அலுமினியம் எலமென்ட்கள் மற்றும் மரப் பொருட்களால் ஆனது. முன் இருக்கையில் சிற்றுண்டி மற்றும் காபி ஆகியவற்றை வைக்க ஒரு டிரே உள்ளது.
இரண்டாவது வரிசை இருக்கைகளும் புதியவையாக உள்ளன. அங்கு அவை அதிக லெக் இடத்தை விடுவிக்க கடைசி வரிசை வரை சரியலாம். இந்த இருக்கைகள் எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டபிள் பேக்ரெஸ்ட்கள், எக்ஸ்டென்டட் கால் சப்போர்ட் மற்றும் தொடைக்கான ஆதரவு ஆகியவற்றை சிறப்பாக கொடுக்கக்கூடியவை. பயணத்தின் போது திரைப்படங்களைப் பார்க்க கூரையில் பொருத்தப்பட்ட திரையும் உள்ளது.
கூரையில் ஒரு லைட் பொருத்தப்பட்டுள்ளது, தேவைக்கேற்ப அதன் பிரகாசத்தை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். இது ஸ்டார்லைட் ஹெட்லைனர் ரூஃப் லைட்கள் உள்ளன. இதன் நிறத்தை தேவைக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம்.
டேஷ்போர்டில் டூயல் ஸ்கிரீன் செட்டப், பவர்டு முன் இருக்கைகள் மற்றும் 11-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) உள்ளிட்ட பிற வசதிகள் வழக்கமான கார்னிவலில் இருந்து கடன் வாங்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக 8 ஏர்பேக்குகள், நான்கு டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.
மேலும் படிக்க: பிப்ரவரி அறிமுகத்திற்கு முன்னதாக டீலர்ஷிப்களை வந்தடைந்தது Kia Syros
கியா கார்னிவல் ஹை-லிமோசின்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா கார்னிவல் ஹை-லிமோசின் வழக்கமான கார்னிவலை விட சற்று கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான கார்னிவல் தற்போது ரூ.63.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எந்த நேரடி போட்டியாளரும் இல்லை என்றாலும் எம்ஜி எம்9 எலக்ட்ரிக் MPV மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.