இந்திய தயாரிப்பான VW வெண்டோ மாடல் - லத்தீன் NCAP சோதனையில் பாதுகாப்பு தரத்திற்கு 5 ஸ்டார் ரேட்டிங் பெறுகின்றது (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
published on நவ 18, 2015 02:41 pm by manish for வோல்க்ஸ்வேகன் வென்டோ 2015-2019
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
சமீபத்தில் நடந்த ‘டீசல் கேட்’ மோசடியில் ஜெர்மன் வாகன தயாரிப்பாளரான வோக்ஸ்வேகன் நிறுவனம் பேரடி வாங்கி இருந்தாலும், தற்போது சற்றே நல்ல பெயர் எடுத்துள்ளது. இந்தியாவில் தயாராகி லத்தீன் நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும், வோக்ஸ்வேகன் வெண்டோ காரின் தரத்துக்கு NCAP 5 ஸ்டார் ரேட்டிங் அளித்துள்ளனர். NCAP ப்ரோக்ராம், கார்களுக்கான பாதுகாப்பு மற்றும் விபத்து சோதனைகளைச் செய்து, அதன் தரத்திற்கேற்றார் போல ஒன்றிலிருந்து ஐந்து வரை மதிப்பெண் தருகிறது (1 என்பது மிகக் குறைந்த மதிப்பீடு). வெண்டோவின் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, முன்புறத்தில் இரட்டை ஏர் பேக்கள்; பிரி-டென்ஷனருடன் இணைந்த முன்புற சீட் பெல்ட்; ABS, ISOFIX ஆன்கோரஜேஸ் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகிய அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன.
NCAP சோதனைகளில், பெரியவர்களின் பாதுகாப்பு தரத்தில் 17 மதிப்பெண்ணுக்கு 14.73 என்ற அளவிலும்; குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 49 மதிப்பெண்ணுக்கு 34.16 என்ற மதிப்பெண்ணும் வெண்டோ மாடல் பெற்றுள்ளது. சதவிகித அடிப்படையில் பார்க்கும் போது, பெரியவர்களின் பாதுகாப்பு பிரிவில் 5 ஸ்டார் ரேட்டிங்கையும், குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 3 ஸ்டார் அந்தஸ்தையும் இந்த கார் பெற்றுள்ளது. 5 நட்சத்திர அந்தஸ்து என்பது காரின் பக்கவாட்டில் பாதுகாப்பு பார்கள் பொருத்தப்பட்டு இருந்தால் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதுவும், அந்த பார்கள் உயர்தர பாதுகாப்பு தரத்துடன் இருந்தால் மட்டுமே இத்தகைய அந்தஸ்தைப் பெற முடியும். நம்பகமான பாதுகாப்பு தன்மைக்கான வெற்றி தவிர, வெண்டோ காரின் நிலையான, நேர்த்தியான, வலுவான வடிவமைப்புக்கான தரத்திற்கும் ஒரு தனிச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
இந்திய வோக்ஸ்வேகன் வெண்டோவின் இஞ்ஜின் அமைப்புகளைக் குறித்து இப்போது பார்க்கலாம். இந்த காரில், மூன்று விதமான இஞ்ஜின் ஆப்ஷங்கள் உள்ளன. அதாவது, 1.6 லிட்டர் MPI பெட்ரோல்; 1.5 லிட்டர் TDI டீசல் இஞ்ஜின்; மற்றும் 1.2 லிட்டர் TSI பெட்ரோல் இஞ்ஜின் ஆகிய மூன்றில் இருந்து, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்றத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். மூன்று இஞ்ஜின்களும் ஒரே விதமாக 103.5 bhp என்ற அளவில், சக்தியை உற்பத்தி செய்கின்றன. ஆனால், டார்க் உற்பத்தி அளவு மாறுபடுகிறது. 1.6 லிட்டர் மாடல் இருப்பதிலேயே அதிகமான 153 Nm என்ற அளவில் டார்க்கை உற்பத்தி செய்கின்றது. ஆனால், 1.5 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் மாடல்கள் 250 Nm மற்றும் 175 Nm என்ற அளவில், முறையே டார்கை உற்பத்தி செய்கின்றன.
கிராஷ் டெஸ்ட் வீடியோவைப் பாருங்கள்
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful