சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Volvo XC90 ஃபேஸ்லிஃப்ட் மார்ச் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது!

வோல்வோ எக்ஸ்சி90 2025 க்காக பிப்ரவரி 12, 2025 05:48 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

வோல்வோ XC90 அதன் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினை தக்கவைத்துக்கொள்ளும். அதே சமயம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலுடன் பிளக்-இன் ஹைப்ரிட் ஆப்ஷனும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ரீ டிசைன் செய்யப்பட்ட ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்டுகளுடன் புதிய பம்பர்களும் XC90 -ல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • கேபினில் இது 11.2 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் வரக்கூடும்.

  • பிற அம்சங்களைப் பொறுத்தவரை இதில் 12.3 இன்ச் டிரைவரின் டிஸ்ப்ளே, 4-ஜோன் ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை கொடுக்கப்படலாம்.

  • பாதுகாப்புக்காக இது பல ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற வசதிகளை பெறக்கூடும்.

  • வோல்வோ XC90-யின் விலை ரூ. 1.05 கோடியிலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).

வோல்வோ XC90 -ன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் மார்ச் 4, 2025 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட்களை போலவே வோல்வோவின் முதன்மை எஸ்யூவி உள்ளேயும் வெளியேயும் சில நுட்பமான டிசைன் மாற்றங்கள் செய்யப்படும். அதே சமயம் தொழில்நுட்ப விவரங்கள் தற்போதைய மாடலில் உள்ளது போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 2025 வோல்வோ XC90 வழங்கக்கூடிய வசதிகளை பற்றிய அனைத்து விவரங்களும் பின்வருமாறு:

வெளிப்புறம்

2025 வோல்வோ XC90 -ன் ஒட்டுமொத்த சில்ஹவுட்டானது தற்போதைய மாடலில் இருந்து பெரும்பாலும் மாறாமல் இருக்கும். மேலும் அப்டேட் சாய்ந்த வடிவத்தில் அமைக்கப்பட்ட குரோம் எலமென்ட்களை கொண்ட புதிய கிரில் கொடுக்கப்படலாம். கூடுதலாக இது நவீனமயமாக்கப்பட்ட தோர்ஸ்-ஹேமர் வடிவ LED DRL-களுடன் கூடிய நேர்த்தியான LED ஹெட்லைட்களைக் கொண்டிருக்கும். பம்பரில் அதன் கவர்ச்சிகரமான தோற்றத்தை மேம்படுத்த நுட்பமான மாற்றங்களுடன் வரக்கூடும்.

ப்ரொஃபைலில் வரவிருக்கும் XC90 வழக்கமான புல்-டைப் டோர் ஹேன்டில்கள் காரின் கலருடன் பொருத்தப்பட்ட வெளிப்புற ரியர்வியூ மிரர்கள் (ORVM-கள்) மற்றும் சில்வர் ரூஃப் ரெயில்களை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும். கூடுதலாக இது புதுப்பிக்கப்பட்ட டூயல் டோன் அலாய் வீல்களுடன் பொருத்தப்பட்டிருக்கும். இது தற்போதைய மாடலின் 21-இன்ச் வீல்களை போலவே இருக்கும்.

பின்புறத்தில் இது நுட்பமாக ரீ டிசைன் செய்யப்பட்ட பம்பரை கொண்டிருக்கும். அதன் குறுக்கே கிடைமட்ட ஸ்ட்ரிப்பை இது கொண்டுள்ளது. மேலும் இது சற்று அப்டேட் செய்யப்பட்ட LED டெயில் லைட் எலமென்ட்களும் இருக்கும்.

உட்புறம்

கேபின் அமைப்பை பொறுத்தவரை மேம்படுத்தப்பட்ட வோல்வோ XC90 தற்போதைய மாடலைப் போலவே அதன் குறைந்தபட்ச டிசைன் மற்றும் 7 சீட்டர் கொண்ட அமைப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டூயல் டோன் தீம் மற்றும் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். இருப்பினும், ஒரு முக்கிய வேறுபாடு கேபின் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் விரிவான பயன்பாடாக இருக்கலாம்.

மேலும் படிக்க: விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களுக்கான இறக்குமதி விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

இப்போதைய-ஸ்பெக் XC90 போலவே, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலும் பல சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கும். இதில் 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 11.2-இன்ச் ஃப்ரீஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் மற்றும் பிரீமியம் 19-ஸ்பீக்கர் போவர்ஸ் வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற சிறப்பம்சங்களில் கலர் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), காற்றோட்டம் மற்றும் மசாஜ் செயல்பாடுகளுடன் கூடிய பவர்டு சீட்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை பயணிகளுக்கான ஏசி வென்ட்களுடன் ஃபோர்-ஜோன் ஆட்டோ ஏசி ஆகியவை 2025 XC90 எஸ்யூவி-யின் அம்சப் பட்டியலில் அடங்கும்.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, 2025 வோல்வோ XC90 பல ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா அமைப்பு, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற செயல்பாடுகளுடன் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் (ADAS) போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும். கூடுதலாக, இது பார்க் அசிஸ்ட் செயல்பாடுகளுடன் ஃப்ரண்ட், ரியர் மற்றும் சைட் பார்க்கிங் சென்சார்களையும் பெறக்கூடும்.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

குளோபல்-ஸ்பெக் 2025 வோல்வோ XC90 இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது, அதன் விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

48V மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் கூடிய 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

பிளக்-இன்-ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் கூடிய 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

பவர்

250 PS

455 PS

டார்க்

360 Nm

709 Nm

டிரான்ஸ்மிஷன்

8-ஸ்பீட் AT

8-ஸ்பீட் AT

டிரைவ்டிரெயின்

AWD*

AWD

*AWD = ஆல்-வீல்-டிரைவ்

இந்தியன்-ஸ்பெக் வோல்வோ XC90 தற்போது மைல்ட்-ஹைப்ரிட் இன்ஜினுடன் வருகிறது, மேலும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களைத் தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதன் இறுதி இன்ஜின் ஆப்ஷன்கள் குறித்து வோல்வோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

இப்போதைய-ஸ்பெக் வால்வோ XC90 -ன் விலை ரூ.1.01 கோடி ஆக உள்ளது, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலின் விலை ரூ.1.05 கோடியில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மெர்சிடிஸ் பென்ஸ் GLE, BMW X5, ஆடி Q7 மற்றும் லெக்சஸ் RX ஆகியவற்றுடன் போட்டியிடும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Volvo எக்ஸ்சி90 2025

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.44.90 - 55.90 லட்சம்*
Rs.75.80 - 77.80 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை