வோல்வோ, தனது S60 T6 பெட்ரோல் வகையை மீண்டும் ரூ. 42 லட்சத்திற்கு அறிமுகம் செய்கிறது
published on ஜூலை 28, 2015 12:03 pm by khan mohd. for வோல்வோ எஸ்60 2015-2020
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
தற்போதைய வாகன சந்தையில், அனைத்து கார் நிறுவனங்களும் தீவிரமாக புதுப்புது வகை கார்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வோல்வோ இந்தியா தனது சமீபத்திய சொகுசு வகை சேடன் S60- காரின் பெட்ரோல் வடிவாக்கத்தை மீண்டும் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. இந்த பெட்ரோல் வகையானது மிகவும் உயர்தரமான வரிசைகளில் மட்டுமே வரும். இதன் விலை ரூ.42 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ஷோரூம் விலை, நியூ டெல்லி)
சில நாட்கள் முன்பு வரை, வோல்வோவின் D5 மற்றும் D4 டீசல் இயந்திர வகைகள் மட்டுமே சந்தையில் இருந்தன. தற்பொழுதைய வோல்வோ பெட்ரோல் S60 செடான் வாகனமானது, நேரடி உட்செலுத்தல் நான்கு சிலிண்டர் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இயந்திரம் மூலம் தன்னுடைய முழு சக்தியையும் பெறுகிறது. இவ்வியந்திரம், 304 bhp செயல் திறனையும் மற்றும் அதிகபட்சமாக 400 முறுக்குவிசையையும் தருகிறது.
அடுத்தாக, புதிய வோல்வோவின் S60 வடிவமைப்பைப் பற்றி பேசும்பொழுது, S60-ன் டீசல் வடிவத்தையே ஒத்து உள்ளதை நாம் நிச்சயமாக மறுக்கமுடியாது. அதுபோலவே, இதன் செயல்திறன்மிக்க திருப்பும் தன்மையுடைய முன்புற LED DRL முகப்பு விளக்குகளும், பின்புற LED விளக்குகளும் டீசல் வகை கார்களைப்போலவே உள்ளது.
வோல்வோ நிறுவனம், உட்புற வடிவமைப்பையும் டீசல் ரக கார்களைப் போலவே நிறுவி உள்ளது, இதில் 7 அங்குல இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பும், முழுமையான டிஜிட்டல் மயமாக்கப் பட்டதையும் உள்ளடங்கும். இது தவிர, S60 பெட்ரோல் மாடல் பல தரப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மிகச் சிறந்த D5 டீசல் வகையைப் ஒத்து உள்ளது.
வோல்வோ S60 வகைக் கார்கள், T6 மெர்சிடிஸ் பென்ஸ் C200 பெட்ரோல் மற்றும் BMW 328i மாடல்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.