சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

தன்னுடைய XC90 SUV வாகனங்களுக்கு 266  முன் பதிவை பெற்றுள்ளது வோல்வோ நிறுவனம்

வோல்வோ எக்ஸ்சி 90 க்காக செப் 08, 2015 11:14 am அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

ஜெய்பூர்: கடந்த மே மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வோல்வோ XC90 266 ப்ரீ - ஆர்டர்களை பெற்றுள்ளது . இந்த ஸ்வீடன் கார் தயாரிப்பாளர்கள் ரூ. 64.9 லட்சம்( எக்ஸ் - ஷோரூம், மும்பை, ப்ரீ - ஆக்ட்ராய்) என்ற விலைக்கு இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். வாகனங்கள் இந்த மாதம் முதல் விநியோகிக்கப்படும். இந்த வாகனம் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் இரண்டு மாடல்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதில் அடிப்படை மொமன்டம் மாடல் ரூ. 64.9 லட்சம் என்ற விலைக்கும் அடுத்த அதிக விலை மாடலான இன்ஸ்க்ரிப்ஷன் ரூ. 77.9 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த XC90 வாகனத்தைப் பற்றி மேலும் சொல்ல வேண்டுமெனில் இந்த வாகனம் வோல்வோ நிறுவனத்தின் புத்தம் புதிய SPA ( ஸ்கேலபள் பிளாட்பார்ம் ஆர்கிடெக்சர்) என்ற தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் முந்தைய மாடலை ஒப்பிடுகையில் மிக குறைந்த எடை உள்ளதாக இருக்கிறது. இந்த 2015 XC90 2.0 லிட்டர், நான்கு சிலிண்டருடன் இரட்டை - டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகிறது.இந்த என்ஜின் 4,250 rpm சுழற்சியில் 225 hp என்ற அளவிற்கு குதிரை சக்தியையும், 1750 - 2500 rpm சுழற்சியில் 470 nm என்ற அளவுக்கு உந்து சக்தியையும் வெளியிடவல்லது. 8 - வேக தானியங்கி கியர் அமைப்பின் உதவியுடன் AWD சிஸ்டம் மூலம் வாகனத்தின் நான்கு சக்கரத்திற்கும் வெளியாகும் சக்தி கடத்தப்பட்டு வாகனத்தை சீறி பாய வைக்கிறது.

சமீபத்தில் இந்த 2015 வோல்வோ XC90 வாகனம் கடுமையான 2015 euro NCAP விபத்து சோதனைகளை அனாயாசமாக கடந்து 5 நட்சத்திரங்களையும் ( முழு மதிப்பெண்) பெற்று கம்பீரமாக வெளிவந்தது. மேலும் euro NCAP அமைப்பின் தன்னிச்சையான அவசர ப்ரேகிங் சோதனையில் (AEB நகர்புறம் இன்டர்அர்பன்) முழுமையான வெற்றி பெற்ற உலகிலேயே ஒரே வாகனம் இந்த XC90 வாகனம் தான் என்ற பெருமையையும் தட்டி சென்றது.

Share via

Write your Comment on Volvo எக்ஸ்சி 90

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை