வோல்க்ஸ்வேகன் நிறுவனம் கேரளாவில் தனது போலோ மற்றும் வெண்டோ கார்களுக்கு தங்கமான சலுகைகளை வாரி வழங்குகிறது.
nabeel ஆல் ஆகஸ்ட் 14, 2015 02:02 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தென்னிந்திய வாடிக்கையாளர்களிடம் மிகுந்த கருணையுடன் நடந்து கொள்கிறது என்றே சொல்ல வேண்டும். ஓணம் கொண்டாட்டங்களுக்கு கேரள மாநிலம் உற்சாகத்துடன் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தனது போலோ மற்றும் புதிய வெண்டோ கார்கள் மீது அற்புதமான தங்க நாணய சலுகையை அறிவித்துள்ளது.இதன்படி ஒவ்வொரு போலோ அல்லது புதிய வெண்டோ கார்களை புக்கிங் செய்யும் போது ஒரு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. தங்க நாணயத்துடன் சேர்ந்து வேறு பல கவர்சிகரமான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ள்ன. கண்டிப்பாக கேரள மாநிலத்தில் மட்டுமே இந்த சலுகைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அனைத்து டீலர்கள் மூலமும் வழங்கப்படுகிறது.
இந்த 'தங்கமான சலுகை' (கோல்டன் ஆபர்ஸ்) மூலம் புதிய கார் வாங்க வழங்கப்படும் கடனிலும் சிறப்பு சலுகைகள் மற்றும் வேறு சில சலுகைகளும் இருக்கும் என்று அறியப்படுகிறது. மேலும் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் மூன்று வருட இலவச வாகன காப்பீடு, அதில் மூன்றாவது வருடம் வரை நீடிக்கப்பட்ட இலவச உத்தரவாதம் (வாரண்டி) மற்றும் மூன்று வருடத்திற்கான ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (ஆனுவல் மெயின்டனன்ஸ் காண்ட்ராக்ட்) ஆகியவையும் வழங்கப்படுகிறது. வெண்டோ கார்களை வாங்கும் போது எக்ஸ்சேன்ஜ் போனஸ் ரூ.20,000 மற்றும் லாயல்டி போனஸ் 20,000 மும் வழங்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போலோ ஜிடிஐ கார்கள் கண்ணில் தென்பட்டது. எந்த அறிவிப்பும் இது வரையில் இல்லை.
கேரளாவின் பாரம்பரியமிக்க விவசாய பின்னணியை நினைவூட்டும் விதமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. விஷ்ணுவின் வாமன அவதாரம் முடிவு பெற்றதை குறிக்கும் விதமாகவும் மலையாளிகளினால் தங்களது புராண காலத்து மன்னராக போற்றப்படும் மகாபலி மன்னனை வரவேற்கும் முகமாகவும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. திரு.கமல் பாசு, தலைவர் மார்கெடிங் மற்றும் மக்கள் தொடர்பு பிரிவு, வோல்க்ஸ்வேகன் பயணிகள் கார்கள், வோல்க்ஸ்வேகன் குழுமம் சேல்ஸ் இந்திய பிரைவேட் லிமிடட். இந்த சலுகைகள் பற்றி பின் வருமாறு கூறினார். “ ஓணம் பொதுவாக சுபிக்க்ஷங்கள் பெருகுவதற்கும் நல்ல காரியங்கள் தொடங்குவதற்கும் ஏற்ற தினமாக பல காலமாக நம்பப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை காலத்தில் எங்களுடைய தங்கமான சலுகை மூலமாக வாடிக்கையாளருடன் சேர்ந்து நாங்களும் பங்கு கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.” வோல்க்ஸ்வேகன் போலோ தற்போது ரூ. 5.3 – 8.5 லட்சம் என்ற விலையிலும் மற்றும் வெண்டோ 7.8 – 11.9 என்ற விலைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.