• English
  • Login / Register

நவம்பரில் வோல்க்ஸ்வேகன் போலோ கார்களின் விற்பனை பாதியாக குறைந்தது

வோல்க்ஸ்வேகன் போலோ 2015-2019 க்காக டிசம்பர் 14, 2015 05:04 pm அன்று akshit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டெல்லி : இதுவரை கண்டிராத மிகப்பெரிய எமிஷன் ஊழலில் இருந்து ஒரு வழியாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் மீண்டு விட்டது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது, உலகம் முழுதும் இருந்து பல்வேறு விற்பனை புள்ளி விவரங்கள் இந்நிறுவனத்தின் வாகனங்கள் பெரும் விற்பனை வீழ்ச்சியை கண்டு வரும் தகவலை வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு தந்து பிரச்னையில் இருந்து மீண்டு விட்டது போன்ற மாயையை உடைத்திருக்கிறது.

இந்த ஜெர்மன் கார் தயாரிப்பாளரின் இந்திய பிரிவு , தங்களது மிக பிரபலமானதும் , அதிக விற்பனையாவதுமான போலோ கார்களின் விற்பனை கடந்த நவம்பரில், அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 42 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. 2000 திற்கும் கூடுதலான போலோ கார்கள் அக்டோபரில் விற்பனையானது. ஆனால் நவம்பரில் இந்த எண்ணிக்கை 1169 கார்களாக குறைந்தது. இது 42 சதவிகித வீழ்ச்சியாகும்.

மாதத்துக்கு மாதம் ஒப்பிடாமல் ஆண்டு ஒப்பீட்டை பார்த்தாலும் 2014 நவம்பரில் 2843 போலோ கார்கள் விற்பனையாகி இருந்தது . ஆனால் இந்த நவம்பர் 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 59 சதவிகித வீழ்ச்சியாகும். இந்த விற்பனை சரிவுக்கு டீசல் ஊழல் மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்த பிரிவில் அதிகரித்து வரும் போட்டியும் இந்த விற்பனை சரிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

வெகு சமீபத்தில் , எமிஷன் விதிமுறைகளில் தவறு நடந்திருப்பதை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஒப்புக் கொண்ட இந்நிறுவனம், தங்களது உலகம் முழுக்க விற்பனையான சுமார் 11 மில்லியன் கார்களில் குறைபாடுள்ள கருவி பொருத்தப்பட்டுள்ளதை ஏற்றுக் கொண்டது. இதன் காரணமாக வோல்க்ஸ்வேகன் இந்தியா 1.2-லிட்டர் , 1.5-லிட்டர் , 1.6-லிட்டர், மற்றும் 2.0-லிட்டர் EA 189 டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட சுமார் 3,23, 700 கார்களை திரும்ப பெற்றுக்கொண்டது. இதில் 1,98,500 வோல்க்ஸ்வேகன் கார்கள் மட்டுமே அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. EA 189 என்ஜின் பொருத்தப்பட்ட ஸ்கோடா மற்றும் ஆடி கார்களும் முறையே 88,700 மற்றும் 36,500 கார்களும் திரும்ப பெறப்பட்டன.

இந்த EA 189 என்ஜின் அனுமதிக்க பட்ட அளவை விட 40 மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைட் வாயுவை வெளியிட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தகவல் மூலம்: SIAM

இதையும் படியுங்கள்

was this article helpful ?

Write your Comment on Volkswagen போலோ 2015-2019

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 இவி
    எம்ஜி 4 இவி
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf8
    vinfast vf8
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience