வோல்க்ஸ்வேகன் போலோ GTI-வின் உணர்வை இங்கே பெறுங்கள்!
published on பிப்ரவரி 17, 2016 02:31 pm by அபிஜித்
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் வோல்க்ஸ்வேகனின் பிரபல ஹேட்ச்பேக்கான போலோ, ஒரு புதிய அவதாரத்தில் தனது அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளது. போலோ GTI என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பதிப்பு, 3 டோர்களை கொண்ட ஹேட்ச்பேக்காக இருந்து, நம் நாட்டின் சாலைகளில் ஓரிரு முறை வேவுப் பார்க்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு இவ்வாகனத்தை இந்தாண்டின் இறுதியில் கொண்டு வரலாம் என்று ஜெர்மன் தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். பெரும்பாலும் இதன் விலை ரூ.17 லட்சத்தை கடந்தே நிர்ணயிக்கப்படலாம். இந்த அதிக விலைக்கு ஏற்ப, தனக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த தரத்தை GTI-யில் காண முடியும்.
இதன் தோற்றத்தை குறித்து பார்க்கும் போது, இரண்டு டோர்களை மட்டுமே கொண்ட ஒரு பொருத்தமற்ற ஹாட்ஹேட்ச்சாகவோ அல்லது 4 டோர்களை கொண்டிருக்கும் தரமான போலோ அல்லது போலோ GT போலவோ இல்லை. முன்புறத்தில் உள்ள கிரிலில் ஒரு சிவப்பு அடிக்கோட்டை பெற்று, இருபுறமும் உள்ள ஹெட்லெம்ப்களை இது ஊடுருவிச் செல்வதாக அமைந்துள்ளது. பம்பரின் தாழ்வான பகுதியில் ஒரு நுட்பமான ஸ்ப்லிட்டரை கொண்டு அதன் நோக்கம் வெளிப்படுத்தப்படுகிறது. பக்கவாட்டு பகுதிக்கு செல்லும் போது, நீண்ட ஒற்றை டோரை கொண்டிருப்பது சற்று குறைத்து மதிப்பிடுவதாக அமைந்தாலும், அது ஒரு நேர்த்தியான தோற்றத்தை அளிக்கிறது. தரமான போலோ GT உடன் ஒப்பிடும் போது, ஒரு தாழ்வான நிலையுடன் கூடிய டைமண்டு கட் அலாய்கள் இருப்பதை காணலாம். முன்புறம் மற்றும் பின்புற ஸ்போக்ஸ்களின் இடைவெளியின் ஊடே அமைதியாக செல்லும் சிவப்பு பிரேக் காலிபர்களை எளிதாக கண்டறிய முடிகிறது. காரின் பின்பகுதியில் உள்ள பாதி-பம்பரின் ஒரு டிஃப்பியூஸரை தொடர்ந்து, சிறிய பக்கவாட்டு ஸ்கர்ட்கள் உள்ளன. ஒரு தரமான காரை போலவே, இதன் பின்பகுதியும் சுத்தமாக உள்ளது. ஆனால் இதில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் வகையில், இங்குள்ள GTI பேட்ஜ் ஒன்று போதுமானதாக உள்ளது.
இந்த காருக்கு ஆற்றலை அளிக்கும் ஒரு 1.8 TFSi பெட்ரோல் மோட்டார் மூலம் 192 PS என்ற சிறப்பான ஆற்றலும், 250 Nm முடுக்குவிசையும் பெறப்படுகிறது. இந்த ஆற்றலானது முன்பக்க வீல்லுக்கு, ஒரு 7-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் மூலம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
இந்த காரின் உட்புறத்தில், தரமான அப்ஹோல்டரியை கொண்டுள்ளது. முன்காலத்தில் இருந்தே போலோ (தற்போது ஐரோப்பிய சந்தைகளில் உள்ளவை) கார்களில் காணப்படுவது போல, லேதர் மற்றும் நெய்யப்பட்ட துணி ஆகியவை சேர்த்து தைக்கப்பட்டு தோற்றம் அளிக்கிறது. சென்ட்ரல் கன்சோலில் ஒரு 6.5-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை ஆதரிக்கப்படுகின்றன.
மேலும் வாசிக்க : வோல்க்ஸ்வேகன் உலக அளவில் 3.7% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
0 out of 0 found this helpful