• English
  • Login / Register

வோல்க்ஸ்வேகன் உலக அளவில் 3.7% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

modified on பிப்ரவரி 15, 2016 12:59 pm by sumit

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Volkswagen has recorded an increase in global sales by 3.7% in January

வோல்க்ஸ்வேகன்   உலக அளவில்  3.7% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.  கடந்த ஜனவரி மாதத்தில்  உலகம் முழுமையிலும்  847,800  வாகனங்களை இந்நிறுவனம்  விற்பனை செய்துள்ளது.  டீசல் கேட் விவகாரத்தில் இருந்து இந்நிறுவனம் மெதுவாக ஆனால் சீராக மீண்டு வருவதையே இது காட்டுகிறது.  சமீபத்தில் நியமிக்கப்பட்ட வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைவர் திரு. மத்தியாஸ் முல்லர் ,  “வருட துவக்கத்தில் சர்வதேச சந்தைகளில் ஏறுமுகம் மற்றும் இறங்குமுகம் என்று இரண்டும் கலந்த ஒரு குழப்பமான நிலையே நிலவுகிறது " என்று கூறியுள்ளார். 

 வர்த்தக சூழல் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை.   பிரேசில் மற்றும் ரஷியாவில் நிலைமை மிக நெருக்கடியாக உள்ளது என்றும் முல்லர் கூறியுள்ளார்.  அமெரிக்க டாலருக்கு நிகரான பிரேசில் நாட்டு பணத்தின் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்து  உள்ளது. இதன் காரணமாக இந்த தென் அமெரிக்க நாட்டில் 39% விற்பனை குறைந்துள்ளது.  சமீபத்தில் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் மிகப்பெரிய எமிஷன் ஊழலில் சிக்கி இருந்த சமயத்தில் 7% விற்பனை வீழ்ச்சியை அமெரிக்க (யூ.எஸ்) சந்தையில் சந்திக்க நேரிட்டது.   உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் ஒன்றான  அமெரிக்காவில்  , இந்த ஊழல் காரணமாக இந்நிறுவனத்தின் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன..  இதற்காக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் $20  பில்லியன் டாலர்  வரை அபராதம் செலுத்த வேண்டி உள்ளது.  இந்த மோசடி சம்பவம் முதலில் வெடித்த போது கடந்த நவம்பரில் 15. 3% விற்பனை சரிவு ஏற்பட்டது. எனினும் அதை சாமர்த்தியமாக  சமாளித்து அடுத்த மாதத்திலேயே இந்த சரிவை 2% என்ற அளவுக்கு வோல்க்ஸ்வேகன்  குறைத்து விட்டது. 

Volkswagen Vento

வோல்க்ஸ்வேகன் வாகனங்கள் மட்டும் 2.8%   விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.  அதிலும் குறிப்பிடத்தக்க வகையில்  தங்களது மிகப்பெரிய சந்தையான சீனாவில் 14% விற்பனை வளர்ச்சியை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.  உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவில் 400,100  வாகனங்களை வோல்க்ஸ்வேகன் விற்பனை செய்துள்ளது.  இந்தியாவிலும் 8% விற்பனை வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.   இந்நிறுவனம் தங்களது போலோ மற்றும் வெண்டோ கார்களில் புதிதாக சேர்த்துள்ள சிறப்பம்சங்களும் இந்த விற்பனை வளர்சிக்க் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.    

மேலும் வாசிக்க : 2016 ஆட்டோ எக்ஸ்போவில் DRL-கள் உடன் கூடிய 2016 வோல்க்ஸ்வேகன் வென்டோ காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    Rs.2.30 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வோல்வோ எக்ஸ்சி90 2025
    வோல்வோ எக்ஸ்சி90 2025
    Rs.1.05 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience