2016 ஆட்டோ எக்ஸ்போவில் DRL-கள் உடன் கூடிய 2016 வோல்க்ஸ்வேகன் வென்டோ காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
published on பிப்ரவரி 09, 2016 02:58 pm by raunak for வோல்க்ஸ்வேகன் வென்டோ 2015-2019
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆட்டோ எக்ஸ்போவிற்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாகவே, புதுப்பிக்கப்பட்ட போலோ மற்றும் வென்டோ ஆகியவற்றை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள காரில், மாற்றி அமைக்கப்பட்ட ஹெட்லெம்ப்கள் உடன் கூடிய டேடைம் ரன்னிங் LED-க்கள் காணப்படுகின்றன. அதே நேரத்தில், இந்த மேம்படுத்தப்பட்ட ஹெட்லெம்ப்களை குறித்த எந்த காரியமும், ஜெர்மன் நாட்டு வாகன தயாரிப்பாளர் தரப்பில், அதன் அறிமுகத்தின் போது அறிவிக்கப்படவில்லை. போலோ மற்றும் அடுத்துவரவுள்ள கச்சிதமான சேடனான அமினோவிற்கும் இடையே, இதை வேறுபடுத்தி சிறந்ததாக காட்டும் வகையில், ஒருவேளை 2016 வென்டோவில், இதை அறிமுகப்படுத்த வோல்க்ஸ்வேகன் நினைத்திருக்கலாம். இது உண்மையாகும் பட்சத்தில், வென்டோ தனித்தன்மையோடு காட்சியளிப்பதோடு, ஜெட்டா மற்றும் அடுத்துவரவுள்ள பாஸ்அட் (கீழே உள்ள படத்தை பார்க்கவும்) ஆகியவற்றின் வரிசையில் இணைந்து கொள்ளும். உயர்வரிசையை சேர்ந்த ட்ரிமில் மட்டுமே இந்த ஹெட்லைட் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என்று தெரிகிறது. இல்லாவிட்டால், இது ஒரு தேர்விற்குரியதாகவும் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதை தவிர, செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்து அம்சங்களையும் வென்டோ பெற்றுள்ளது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். மேலும் இந்த புதிய யூனிட்டில் உள்ள மிரர் லிங்க் கனேக்ட்டிவிட்டி மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்கிரீனை, டச்ஸ்கிரீனுக்குள் கொண்டுவர உதவுகிறது. இதில் ஆட்டோ-டிம்மிங் இன்டீரியர் ரேர்வ்யூ மிரர் உடன் கூட ரெயின்-சென்ஸிங் வைப்பர்களும் அளிக்கப்படுகிறது.
வென்டோவின் இயந்திரவியலில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது 1.6-லிட்டர் இயல்பான உள்ளிழுப்பு தன்மையுள்ள மற்றும் 1.2-லிட்டர் TSi பெட்ரோல் உடன் கூட 1.5-லிட்டர் TDi ஆகியவற்றை பயன்படுத்தி இயங்க உள்ளது. டிரான்ஸ்மிஷனை பொறுத்த வரை, அதே 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு இரட்டை-கிளெச் DSG கியர்பாக்ஸ் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க வோல்க்ஸ்வேகன் இந்தியா 8 சதவிகித விற்பனை வளர்ச்சியை ஜனவரி 2016ல் பதிவு செய்துள்ளது
0 out of 0 found this helpful