இந்தியாவிற்கு வருகிறது Volkswagen Golf GTI… பிரீ புக்கிங் தொடங்கியது
published on பிப்ரவரி 05, 2025 09:37 pm by shreyash for வோல்க்ஸ்வேகன் கோல்ப் ஜிடிஐ
- 9 Views
- ஒரு கருத்தை எழுதுக
இணையத்தில் வெளியான தகவல்களின்படி கோல்ஃப் GTI கார் முழு இறக்குமதியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறைவான எண்ணிக்கையிலான யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.
-
தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் வாடிக்கையாளர்கள் கோல்ஃப் GTI -யை முன்பதிவு செய்யலாம்.
-
எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி கோல்ட் வெறும் 250 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.
-
இது மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், 18 அல்லது 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் டூயல் எக்ஸாஸ்ட் செட்டப் உடன் ஆக்ரோஷமான மற்றும் மிரட்டலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
-
இது மெட்டாலிக் பெடல்கள் மற்றும் GTI லோகோவுடன் கூடிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் ஆல்-பிளாக் கேபின் தீம் இருக்கும்.
-
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 245 PS மற்றும் 370 Nm ஐ வரை அவுட்புட்டை கொடுக்கிறது.
-
விலை ரூ.52 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஆர்வலர்களின் கனவு விரைவில் நனவாகவுள்ளது. ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் GTI ஹாட் பேக்கை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. கோல்ஃப் GTI முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும், இந்தியாவில் 250 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். மேலும் சில ஃபோக்ஸ்வேகன் டீலர்ஷிப்புகளில் கோல்ஃப் GTI -க்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
கோல்ஃப் GTI வடிவமைப்பு
கோல்ஃப் GTI ஒரு ஹாட் ஹேட்ச்பேக் ஆக, முதல் பார்வையில் இருந்தே ஒரு ஸ்போர்ட்டி மற்றும் ஆக்ரோஷமான அதிர்வை காட்டுகிறது. இருப்பினும் அது ஃபோக்ஸ்வேகன் வடிவமைப்பை இன்னும் பராமரிக்கிறது. இது மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், மையத்தில் 'VW' லோகோ -வை கொண்ட ஒரு நேர்த்தியான கிரில் மற்றும் தேன்கூடு வடிவத்திலான மெஷ் உடன் முன்பக்க பம்பரை கொண்டுள்ளது. 18-இன்ச் 'ரிச்மண்ட்' அலாய் வீல்கள் (விரும்பினால் 19-இன்ச் செட்), ஸ்போர்ட்டி டிஃப்பியூசர் மற்றும் பின்புறத்தில் டூயல் எக்ஸாஸ்ட் செட்டப் ஆகியவற்றால் அதன் ஆக்ரோஷமான தோற்றம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. கிரில், ஃபெண்டர் மற்றும் டெயில் கேட் ஆகியவற்றில் அதன் ‘GTI’ பேட்ஜ் இருப்பதால் ஸ்போர்டியர் ஹேட்ச்பேக்காக தனித்து நிற்கிறது.
கேபின் மற்றும் வசதிகள்
கோல்ஃப் GTI ஆல் பிளாக் கேபின் தீம், அடுக்கு டேஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் ஸ்போர்ட்டி இருக்கைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது மெட்டாலிக் பெடல்கள் மற்றும் ‘GTI’ பேட்ஜுடன் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலையும் பெறுகிறது. GTI-குறிப்பிட்ட ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 12.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகிய வசதிகள் உள்ளன.
245 PS பவர் கொண்ட ஒரு இன்ஜின்
இந்த காரில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 245 PS மற்றும் 370 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது வெறும் 5.9 வினாடிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்டும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கோல்ஃப் GTI முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட காராக இந்தியாவுக்கு கொண்டு வரப்படலாம். இதன் விலை ரூ. 52 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கோல்ஃப் GTI மினி கூப்பர் எஸ் போன்றவற்றுடன் போட்டியிடும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.