வோல்க்ஸ்வேகன் பீட்டில் சிற்றேடு, இணையதளத்தில் கசிந்தது
வோல்க்ஸ்வேகன் பீட்டில் க்காக நவ 18, 2015 02:40 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
புதிய வோல்க்ஸ்வேகன் பீட்டில் யூனிட்களின் உறுதியளிப்பு நோக்கங்களுக்காக சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பிறகு, இந்த கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட தயாராக உள்ளது என்பது தெளிவாகி உள்ளது. சமீபத்தில் இந்த காரின் அதிகாரபூர்வமான படங்களை அந்நிறுவனம் வெளியிட்ட நிலையில், இந்த புதிய வோல்க்ஸ்வேகன் பீட்டில் காரின் தயாரிப்பு சிற்றேடு இணையதளத்தில் கசிந்துள்ளது. இந்த சிற்றேடு மூலம் காரின் சிறப்பு அம்சங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை குறித்த முக்கிய நுண்ணறிவை பெற முடிகிறது. அடால்ப் ஹிட்லர் கட்டுமானம் செய்து, டாக்டர் ஃபெர்டினாண்ட் போர்ஸ் வடிவமைத்த ஒரிஜினல் பீப்பில்’ஸ் காரான பழைய ரேட்ரோவின் ஸ்டைலை, இந்த புதிய வோல்க்ஸ்வேகன் பீட்டில் கார் கொண்டுள்ளது.
இந்த புதிய வோல்க்ஸ்வேகன் பீட்டில் காரில், LED DRL-கள் உடன் கூடிய பை-ஸினான் ஹெட்லெம்ப்கள், புதிய அலாய் வீல்கள், ஸ்பாய்லர், பம்பர்கள் மற்றும் டெயில்லைட் கிளெஸ்டர் ஆகியவை உட்பட பல மேம்பாடுகளை பெற்றுள்ளது. உட்புறத்தின் முன்பக்கத்தில், ஒரு இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் 8 ஸ்பீக்கர்கள், AUX, USB இணைப்பு மற்றும் ப்ளூடூத், பனோராமிக் சன்ரூஃப், ஒரு புதிய ஸ்டீயரிங் வீல், இரட்டை-ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, மடக்கும் தன்மை கொண்ட பின்புற சீட்கள் மற்றும் ஆட்டோ டிம்மிங் இன்ட்டீரியர் லைட்கள் ஆகியவற்றை இந்த கார் கொண்டுள்ளது.
மேலும் இந்த காரில், ABS உடன் EBD, பக்கவாட்டு ஏர்பேக்கள், ASR, ESC, EDL, EDTC, ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், பிரேக் பேடு வியர் இன்டிகேட்டர், ஆட்டோமேட்டிக் ஹெட்லெம்ப்கள், க்ரூஸ் கன்ட்ரோல், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்ஸர்கள் ஆகியவை உட்பட அதிகளவிலான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
இந்தியாவிற்கான காரில், அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்த்தால், ஒரு 1.4-லிட்டர் TSI டர்போசார்ஜ்டு பெட்ரோல் மோட்டாரை கொண்டிருக்கும். இது ஒரு 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் உடன் இணைந்து செயலாற்றும் போது, 147PS ஆற்றலை வெளியிடும் திறனை பெறுகிறது. மினி கூப்பர் S-க்கு போட்டியாக வரவுள்ள இந்த காருக்கு, ஏறக்குறைய ரூ.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்