இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது படம்பிடிக்கப்பட்டுள்ள VinFast VF e34 கார், Hyundai Creta EV -க்கு போட்டியாக இருக்குமா ?
published on ஜூன் 25, 2024 02:22 pm by samarth for vinfast vf e34
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்பை ஷாட்கள் எலக்ட்ரிக் எஸ்யூவியின் வெளிப்புறம் எப்படி இருக்கும் என்பதை காட்டுகின்றன. LED லைட்டிங் செட்டப் மற்றும் LED DRL -களையும் பார்க்க முடிகிறது.
-
வின்ஃபாஸ்ட் பிராண்ட் 2025 ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சர்வதேச அளவில் இது 10 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் பின்புற ஸ்கிரீன் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவற்றைப் பெறுகிறது.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் மற்றும் ADAS ஆகியவை உள்ளன.
-
சர்வதேச அளவில் இது 41.9 kWh பேட்டரி பேக்குடன் வழங்கப்படுகிறது. 318 கி.மீ (NEDC) ரேஞ்சை கொண்டுள்ளது.
-
விலை ரூ.25 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் கடந்த 2017 -ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு வியட்நாமிய வாகன உற்பத்தியாளர் ஆகும். இது வியட்நாமில் பல EV -களை விற்பனை செய்து வருகிறது. மேலும் விற்பனையை வேறு சில நாடுகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இப்போது வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து வின்ஃபாஸ்ட் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் தனது முதல் ஆலையை நிறுவுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்போது முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் VF e34 எலெக்ட்ரிக் எஸ்யூவி -யின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. எலெக்ட்ரிக் எஸ்யூவி -யின் இந்த ஸ்பை ஷாட்களை பற்றி இங்கே பார்ப்போம்.
வெளிப்புறம்
சோதனை செய்யப்பட்டு வரும் கார் குளோபல்-ஸ்பெக் மாடலின் அதே வடிவமைப்பை கொண்டிருந்தது. இதில் நேர்த்தியான LED DRL -கள் மற்றும் LED லைட்டிங் செட்டப் ஆகியவை அடங்கும். கவனிக்கப்பட்ட பிற வெளிப்புற விவரங்களில் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களுக்கான முன் பம்பரில் பொருத்தப்பட்ட ரேடார் (ADAS) மற்றும் ஒரு பெரிய பின்புற பம்பர் ஆகியவை அடங்கும்.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
ஸ்பை படங்களின் சமீபத்திய தொகுப்பு உட்புறத்தின் எந்தப் பார்வையையும் தரவில்லை என்றாலும் கூட குளோபல்-ஸ்பெக் காரை போலவே இது கேபின் செட்டப்பை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குளோபல்-ஸ்பெக் VF e34 ஆல் கிரே கேபின் தீம் மற்றும் வெர்டிகலாக கொடுக்கப்பட்ட 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டுடன் வருகிறது. சென்ட்ரல் ஏசி வென்ட்கள் இல்லை. டாஷ்போர்டின் பயணிகள் பக்கத்தில் எக்ஸ்டென்ட் செய்யப்பட்ட வென்ட் பேனல் உள்ளது.
இது டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, கீலெஸ் என்ட்ரி, 6-ஸ்பீக்கர் செட்டப், ஆட்டோமேட்டிக் ஏசி, 6-வே மேனுவல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் மற்றும் 7 இன்ச் ரியர் ஸ்கிரீன் ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புக்காக குளோபல்-ஸ்பெக் மாடலில் 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ADAS வசதிகளுடன் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரியர் கிராஸ்-ட்ராஃபிக் அலர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
மேலும் படிக்க: வின்ஃபாஸ்ட் இந்திய சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது, அதன் பிராண்ட் மற்றும் கார்களை அறிந்து கொள்ளுங்கள்
பவர்டிரெய்ன்
VF e34 பின்வரும் பவர்டிரெய்ன் ஆப்ஷனுடன் உலகளவில் கிடைக்கிறது:
பேட்டரி பேக் |
41.9 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
பவர் |
150 PS |
டார்க் |
242 Nm |
கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் (WLTP) |
318 கி.மீ (NEDC) |
இந்த எஸ்யூவி 3 டிரைவ் மோடுகளை வழங்குகிறது: இகோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட். DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி, வின்ஃபாஸ்ட் VF e34 காரை 27 நிமிடங்களில் 10 முதல் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.
விலை, போட்டியாளர்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் வெளியீடு
வின்ஃபாஸ்ட் VF e34 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 25 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது நேரடியாக வரவிருக்கும் மாருதி eVX மற்றும் இந்த ஹூண்டாய் கிரெட்டா EV ஆகிய கார்களுடன் போட்டியிடும்
இந்தியா -வுக்கான வின்ஃபாஸ்டின் திட்டங்கள்
இந்தியாவில் வியட்நாமிய-பிராண்ட் வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலையில் உள்ளூர் தயாரிப்பை தொடங்குவதற்கு முன் மாடல்களை முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட்களாக (CBUs) இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் VF7, VF8, மற்றும் VF6 ஆகிய மாடல்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன
மேலும் வாகனங்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடருங்கள்.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆன்ரோடு விலை