• English
  • Login / Register

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் அறிமுகம் செய்யப்பட்டது VinFast VF e34

published on ஜனவரி 18, 2025 09:40 pm by dipan for vinfast vf e34

  • 18 Views
  • ஒரு கருத்தை எழுதுக

VF e34 எஸ்யூவி ஒரே ஒரு-மோட்டார் செட்டப் மற்றும் 277 கி.மீ ரேஞ்ச் உடன் வருகிறது.

  • கனெக்டட் LED DRL -கள் மற்றும் டெயில் லைட்ஸ் மற்றும் வெளியே 18-இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • உள்ளே இது வெர்டிகலாக உள்ள டச் ஸ்கிரீன் உடன் கிரே ஸ்கிரீனும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • மற்ற வசதிகளில் 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், TPMS மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன.

  • இது 41.9 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இது 150 PS எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • விலை ரூ.17 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியட்நாமை சேர்ந்த கார் தயாரிப்பாளரான வின்ஃபாஸ்ட் தற்போது நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் தொடர்ச்சியாக நிறைய கார்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் வின்ஃபாஸ்ட் VF e34 எலக்ட்ரிக் எஸ்யூவி -யும் ஒன்று. இது ஒரே ஒரு மோட்டார் அமைப்பு மற்றும் 277 கி.மீ கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது. இருப்பினும் EV இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா இல்லையா என்பதை கார் தயாரிப்பாளர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

வெளிப்புறம்

VinFast VF e34

மற்ற வின்ஃபாஸ்ட் கார்களை போலவே VF e34 ஆனது V வடிவ கனெக்டட் LED DRL -களுடன் வருகிறது. மையத்தில் வின்ஃபாஸ்ட் லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. DRL -களுக்கு கீழே எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், பிளாங்க்-ஆஃப் கிரில் மற்றும் குரோம் கார்னிஷ்கள் பம்பரின் கீழ் பகுதியில் பிளாக் கலர் ஏர் இன்டேக்குகள் ஆகியவை உள்ளன. 

பக்கவாட்டில் டோர் மற்றும் வீல் ஆர்ச்களில் பிளாக் கிளாடிங், 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் ஜன்னல்களில் குரோம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

VinFast VF e34

இது ரேப்பரவுண்ட் எல்இடி டெயில் லைட்டுகளுடன் வருகிறது. முன்பக்கமாக DRL போன்ற வடிவமைப்பைக் கொண்ட LED ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. EV -யின் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்ட, பின்புற பம்பர் பிளாக் கலரில் உள்ளது.

உள்துறை

உள்ளே VF e34 ஆனது கிரே கலர் தீம் மற்றும் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை கொண்டுள்ளது மற்றும் சென்டர் கன்சோல் வெர்டிகலான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வரை நீட்டிக்கப்பட்டு ஒரு கிளாஸி பிளாக் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. சென்டர் கன்சோலில் கப்ஹோல்டர்கள், ரோட்டரி டிரைவ் மோட் செலக்டர் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உள்ளது. டாஷ்போர்டில் பிரஷ் செய்யப்பட்ட அலுமினிய எலமென்ட்களுடன் கூடிய நேர்த்தியான ஏசி வென்ட்களும் இடம்பெற்றுள்ளன.

இருக்கைகள் கிரே கலர் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி மற்றும் அனைத்து இருக்கைகளும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்களுடன் வருகின்றன.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

வசதிகளைப் பொறுத்தவரையில் வின்ஃபாஸ்ட் VF e34 ஆனது 10-இன்ச் டச் ஸ்கிரீன், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டபிள் வெளிப்புற ரியர்வியூ மிரர்ஸ் (ORVM-கள்), ஆட்டோ ஏசி, 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பின்புற சென்டர் கன்சோலில் 7-இன்ச் ஸ்கிரீன் உடன் வருகிறது. 

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

குளோபல்-ஸ்பெக் வின்ஃபாஸ்ட் VF e34 ஒரே ஒரு பேட்டரி பேக் ஆப்ஷன் உடன் வருகிறது. அதன் விரிவான விவரங்கள் இங்கே:

பேட்டரி பேக்

41.9 kWh

எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை

1

பவர்

150 PS

டார்க்

242 Nm

கிளைம்டு ரேஞ்ச்

277 கி.மீ (NEDC)

டிரைவ்டிரெய்ன்

ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD)

*NEDC = தேசிய பொருளாதார மேம்பாட்டு கவுன்சில்

ஒரு DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 27 நிமிடங்களில் 10-70 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யலாம். EV ஆனது இகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவ் மோடுகள் உள்ளன.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

VinFast VF e34

இந்தியாவில் VF e34 அறிமுகப்படுத்தப்படுமா இல்லையா என்பதை வின்ஃபாஸ்ட் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இது ஒரு வேளை அறிமுகப்படுத்தப்பட்டால் இதன் விலை ரூ. 17 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம். இது ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், MG ZS EV, டாடா கர்வ்வ் EV மற்றும் வரவிருக்கும் மாருதி இ விட்டாரா ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on VinFast vf e34

explore மேலும் on vinfast vf e34

  • vinfast vf e34

    51 விமர்சனம்இந்த காரை மதிப்பிடு
    Rs.25 Lakh* Estimated Price
    பிப்ரவரி 13, 2026 Expected Launch
    ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
space Image

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • டாடா சாஃபாரி ev
    டாடா சாஃபாரி ev
    Rs.32 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience