விரைவில் அறிமுகமாகவுள்ள மாருதி சுசுகி YBA இந்தியாவில் தென்பட்டது
published on நவ 24, 2015 01:47 pm by raunak for மாருதி வைஆர்ஏ
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட் மற்றும் மஹிந்த்ரா TUV 300 போன்ற கார்களுக்கு நிகரான போட்டியாக, இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய கார் களமிறங்க உள்ளது.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக சோதனையில் உள்ள, விரைவில் வெளிவரவுள்ள மாருதியின் சப்-4m SUV, உளவாளிகளின் கண்களில் சமீபத்தில் தென்பட்டுவிட்டது. அடுத்த பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படும். இந்த காரின் பெயர் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதால், YBA என்ற குறியீட்டுப் பெயரில் இதை அழைக்கிறோம். உலகிலேயே முதல் முதலாக, வேறெங்கும் இல்லாமல் இந்தியாவிலேயே இந்த கார் அறிமுகமாகப் போகிறது. அதன் பின், உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும். YBA கார் மட்டுமல்லாமல், வற்றாத ஜீவ நதி போல மேலும் பலதரப்பட்ட கார்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. சமீபத்தில், S க்ராஸ் மாடல் இந்த கார் தயாரிப்பாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 2016 –ஆம் ஆண்டுக்கான வெளியீடாக அறிமுகப்படுத்த, மாருதி நிறுவனம் விட்டாராவைத் தயார் நிலையில் வைத்துள்ளது. விட்டாரா மாடல் சமீபத்தில் நமது நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, நமது உளவாளிகளின் கண்களில் தென்பட்டுவிட்டது. இவை தவிர, 2016 –ஆம் ஆண்டின் எக்ஸ்போவில் புதிய இக்னிஸ் மாடலும் வெளியிடப்படும் என்று செய்தி வந்துள்ளது.
வெளிப்புறத்தில் பார்க்கும் போது, மாருதி நிறுவனம் 2012 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்ட XA – ஆல்ஃபா கான்செப்ட் காரின் உற்பத்தி பதிப்பைப் போல, YBA காரின் வெளிப்புறத் தோற்றம் உள்ளது. மெக்கானிகல் ரீதியாகப் பார்த்தால், இந்த காருக்கான இஞ்ஜின் ஆப்ஷங்கள் தற்போதைய வகைகளான SHVS இணைந்த 1.3 லிட்டர் DDIS 200 டீசல் மற்றும் 1.2 லிட்டர் VVT பெட்ரோல் இஞ்ஜின்கள் பொருத்தப்பட்டு வரும். ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷங்களைப் பார்க்கும் போது, ஸ்டாண்டர்ட் 5 ஸ்பீட் MT மற்றும் பலீனோவின் CVT போன்றவை YBA மாடலில் வரும் என்று யூகிக்கப்படுகிறது.
YBA –வின் சிறப்பம்ஸங்களைப் பார்த்தால், சுசுகியின் பிரத்தியேகமான 7 அங்குல ஸ்மார்ட் பிளே இன்ஃபோடைன்மெண்ட் பொருத்தப்பட்டு வரும். பலீனோ காரில் உள்ளது போலவே, இந்த காரிலும் ஆப்பிள் CarPlay ஆப் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான கார்களை ரீடைல் செய்வது போலவே, இந்த காரையும் மாருதி நிறுவனம் நெக்ஸா டீலர்ஷிப் வழியாகவே ரீடைல் செய்யும் என்று தெரிகிறது. புதிய பலீனோ மற்றும் S க்ராஸ் கார்களில் வருவதைப் போலவே, YBA –வின் முன்புறத்தில் ஸ்டாண்டர்ட் டூயல் ஏர் பேக்குகளோடு இணைந்து, ABS மற்றும் EBD போன்றவை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமைக்கப்படும் என்று சமீபத்தில் வெளியாகி உள்ள விவரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்