டொயோட்டா இனோவா கிரைஸ்ட்டாவில், நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை!
டொயோட்டா இனோவா கிரிஸ்டா 2016-2020 க்காக பிப்ரவரி 15, 2016 09:38 am அன்று nabeel ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
2016 ஆட்டோ எக்ஸ்போவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்று டொயோட்டா இனோவா கிரைஸ்ட்டா ஆகும். இந்திய மக்களுக்கு ஏற்கனவே பழக்கமானது என்பதால், இந்த வாகன கண்காட்சியில் புதிய இனோவா தான், பலருக்கும் முக்கிய கவர்ச்சிப் பொருளாக உள்ளது. இந்த கார் புதுப்பிக்கப்பட்ட நிலையில் ஒரு டெஸ்க்டாப்பில் தோற்றம் அளிக்கிறது. ஆனால் அதை நாங்கள் நேரடியாக பார்த்த போது, அதன் மீது எப்போதும் இல்லாத ஒரு ஆசை ஏற்பட்டது. இந்த கார், அதன் மதிப்பு மற்றும் அளவு ஆகிய இரண்டிலும் வளர்ச்சியை பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பாளரான டொயோட்டா நிறுவனம், உலகமெங்கும் அதிக பிரபலமானது ஆகும். இந்திய மண்ணில் கூட தனது தாக்கத்தை, அது சிறப்பாக செய்துள்ளது. நம் நாட்டில் டொயோட்டாவிற்கு அதிகளவிலான கார்கள் இல்லாவிட்டாலும், எல்லா முக்கியப் பகுதிகளிலும் ஒரு காரை கட்டாயம் கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் கிடைத்த முதல் மிகப்பெரிய வெற்றி குவாலிஸ் ஆகும். அதுவே பிற்காலத்தில் இனோவா என்று மாற்றம் பெற்றது. புதிய உருவில் வந்தால் மட்டும் தங்களின் அன்பிற்கு பாத்திரமான MPV-யை, இந்தியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தங்களின் குடும்பத்தின் ஒரு தனிப்பட்ட காராக அதை ஏற்றுக் கொண்டனர். இதற்கு முந்தைய 2 தலைமுறைகளையும் கொண்டு இந்தியாவில் வெற்றியை கண்ட இந்த மிகப்பெரிய ஜப்பான் வாகனத் தயாரிப்பாளர், தனது மந்திர வித்தையை இன்னொரு முறை காட்ட தயாராக உள்ளார். எனவே இந்த புதிய இனோவா கிரைஸ்ட்டாவின் மூலம் டொயோட்டா நிறுவனம் காட்ட உள்ள காரியங்களைக் குறித்து காண்போம்.
தோற்றம்
இந்த MPV-யை செதுக்குவதில், டொயோட்டா நிறுவனம் ஒரு சிறப்பான பணியை செய்துள்ளது. வழக்கமான MPV-க்கள் சோர்வாக மற்றும் பார்க்க அழகில்லாமல் தோற்றம் அளிக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் முன்பக்கத்தில் இருந்தாவது இனோவா அழகாகவும், விளிம்புகளுடனும் காட்சி அளிக்கிறது. புதிய ஹெட்லெம்ப் கிளெஸ்டர் நன்றாக காட்சி அளிப்பதோடு, 2-ஸ்லாட் கிரில்லின் விரிவாக்கமாக அமையும் 2 மின்னும் ஸ்ட்ரீப்களுக்கு இடையே அமைந்துள்ளது. பெரியதாக அமைந்த அறுங்கோண வடிவ ஏர் டேம், காரின் கவர்ச்சிகரமான தன்மையை அதிகரிப்பதாக அமைகிறது. பிரஜெக்டர்கள் மற்றும் 4 LED லைட்கள் ஆகியவற்றை நேர்த்தியான ஒரு சதுரமாக அடுக்கப்பட்ட நிலையில், 3 பகுதிகளாக கொண்ட யூனிட்டாக ஹெட்லெம்ப் கிளெஸ்டர் காணப்படுகிறது.
இரண்டு ஸ்லாட்கள் இணையும் இடத்தில் உள்ள கிரிலின் மீது பெரிய டொயோட்டாவின் முத்திரை (இன்சிக்மா) அமைந்துள்ளது. இது, போனட்டின் மீதான தடித்த எல்லைக் கோடுகளுடன் இணைந்து, இந்த காரின் வடிவமைப்பில் ஒரு சிறப்பான போக்கை அளிக்கிறது. பக்கவாட்டு பகுதிக்கு செல்லும் போது, எந்த சந்தேகமுமின்றி இனோவா நீளமாகவே காட்சி அளிக்கிறது. C-பில்லரை நோக்கி அமைந்த கூர்மையான கிளாஸ் லேஅவுட், இனோவாவிற்கு சில தகவமைப்பை அளிக்கிறது. இதை தவிர, அலாய்கள் மட்டுமே அதன் தோற்றத்தை கூட்டுகிறது. மற்ற எல்லா தன்மைகளும், ஒரு வழக்கமான MPV ஆக தான் காட்டுகிறது. விழுங்கப்பட்ட (பூம்மிரங்) உருவில் அமைந்த டெயில் லைட் கிளெஸ்டர், பின்பகுதியின் ஒரு முக்கியமான கவர்ச்சியாக திகழ்கிறது. ரூஃப் ஸ்பாய்லர், ஒட்டுமொத்த பேக்கேஜ் உடன் சேர்ந்து கொள்கிறது.
இந்த காரின் உட்புறத்தில் நிறைய காரியங்கள் உள்ளன. தனது கார்களை ஒரு சாதாரண உட்புற அமைப்பியலை விட, கூடுதலான உபகரணங்களை அளித்து அதன் மதிப்பை உயர்த்துவதோடு டொயோட்டா நின்றுவிடாமல், அதை முழுமையாக உருமாற்றி உள்ளது. காரின் உட்புறம் பட்டு போன்ற தோற்றத்துடன், சந்தைக்கு புதிதாக உள்ளது. மரத்தால் பணித் தீர்க்கப்பட்ட புதிய லேஅவுட் மற்றும் நேவிகேஷன் உடன் கூடிய ஒரு 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
உட்புறம்: புதிய இனோவா, பல அம்சங்களால் நிரம்பியுள்ளது. லேதர் உட்புற அமைப்பு, அம்பியண்ட் லைட்டிங், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உடன் ரேர் ஆட்டோ கூலர், பவர் அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், எளிதாக மூடும் வகையிலான பூட் கேட், நேவிகேஷன் உடன் கூடிய ஒரு 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட், ஸ்மார்ட் என்ட்ரீ மற்றும் பூஸ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்டவை அவற்றில் சில.
வெளிப்புறம்: இனோவா-வில், 17-இன்ச் அலாய் வீல்கள், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஸன் உடன் பின்ச் மற்றும் பவுன்ஸ் கன்ட்ரோல், 3 புதிய கலர்கள் மற்றும் வெளிப்புற அமைப்பில் கிரோம் விண்டோ லைனிங் ஆகியவை உள்ளன.
பாதுகாப்பு மற்றும் பரிணாமங்கள்
முன்பக்க இரட்டை SRS ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உடன் எலக்ட்ரோனிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் மற்றும் பிரேக் அசிஸ்ட் ஆகியவை இனோவா கிரைஸ்ட்டாவின் எல்லா வகைகளிலும் தரமானதாக அளிக்கப்பட்டுள்ளன. புதிய இனோவா 4735mm நீளம் (முந்தைய பதிப்பை விட, இது ஏறக்குறைய 150mm நீளம் அதிகம்), 1795mm உயரம் (முன் மாடலை விட 35mm உயரம் அதிகம்), 1830mm அகலம் (இதன் முன்னோடியை விட 65mm அகலம் அதிகம்). பழைய பதிப்பின் வீல்பேஸ் அளவான 2750mm-யை, இதுவும் பெற்று ஒத்ததாக உள்ளது.
பேக்கேஜ்
ஏற்கனவே கூறியது போல, இந்த பலம் பொருந்திய இனோவா வளர்ந்துள்ளது. இது பெரியது, சிறந்தது, வேகமானது மற்றும் முந்தைய மாடலை விட அதிக பிரிமியம் தன்மை கொண்டதாக உள்ளது. இந்த எல்லா மேம்பாடுகளும், ஒரே விலையில் கிடைக்கிறது. எனவே இனோவாவிற்கு ஏறக்குறைய ரூ.22 லட்சம் என்ற மிக அதிகமான விலை நிர்ணயிக்கப்படலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த கார் அட்டகாசமாக இருந்தாலும், இந்த பயணிகள் MPV-யை ஒரு பிரிமியம் தயாரிப்பாக மக்களால் ஏற்கப்படுமா அல்லது ஏற்படாதா என்பது இந்தியனின் மனநிலையை பொறுத்தே அமையும். மேலும், இனோவா கிரைஸ்ட்டாவின் விரிவான இமேஜ் கேலரியை காணத் தவறாதீர்கள்.