டொயோடா எடியோஸ் க்ராஸ் டைனமிக் விரைவில் அறிமுகமாகிறது.
published on பிப்ரவரி 11, 2016 07:34 pm by manish for டொயோட்டா இடியோஸ் கிராஸ்
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
டொயோடா எடியோஸ் கார்களின் சிறப்பு பதிப்பு ஒன்று 'டைனமிக்' என்ற பெயரில் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த க்ராஸ்ஓவர் ஹேட்ச்பேக் பிரிவு வாகனங்களில் தற்போது உள்ள எடியோஸ் க்ராஸ் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே எஞ்சின்கள் தான் பயன்படுத்தப்பட்டு வரும் என்று தெரிகிறது. ஆனால் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் நிறைய புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டு காரின் தோற்றம் மிகவும் அழகாக மாற்றப்பட்டுள்ளது. கருப்பு நிறம் கொண்ட கதவு கைப்பிடிகள் மற்றும் விங் மிரர்ஸ் ஆகியவை பளிச்சென்று கண்ணில் புலப்படுகிறது.. கருப்பு செருகல்கள் ரூப் ரயிலில் கொடுக்கப்பட்டுள்ளது. . டைனமிக் என்ற பெயர் C - பிள்லரில் பொருத்தப்பட்டுள்ளது. . இரண்டு வகையான வண்ணங்களில் இந்த வாகனம் அறிமுகமாக உள்ளது. இன்பெர்னோ ஆரஞ்சு நிறம் மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த கார் வெளியாக உள்ளது. காரின் உட்புற கேபின் சீலைகள் இரண்டு வண்ண கலவையில் , வெளிப்புற வண்ண தேர்வுக்கு ஏற்றபடி நேர்த்தியாக கொடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
இன்பிர்னோ ஆரஞ்ச் நிற வேரியண்டில் உட்புற சீலைகள் கருப்பு மற்றும் ஆரஞ்ச் வண்ணத்திலும் , வெள்ளை நிற வேரியண்டில் க்ரேஜ் வண்ண நிறத்திலும் சீலைகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதைத் தவிர பார்கிங் சென்சார் , கியர் மாற்றும் பிடியில் குரோம் பூச்சு , பூட்வெல் லைட்டிங் என்று மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த எடியோஸ் க்ராஸ் டைனமிக் கார்களை மேலும் அழகாக்கி காட்டுகிறது. இன்பெர்னோ ஆரஞ்ச் நிற வேரியண்டில் ஆரஞ்சு நிற பூட்வெல் லைட்டும் , வெள்ளை நிற காரில் நீல நிற பூட்வெல் லைட்டும் பொருத்தப்பட்டு இருக்கும் என்றும் தெரிய வருகிறது.
தற்போது புழக்கத்தில் உள்ள எடியோஸ் கார்களில் உள்ள அதே என்ஜின் ஆப்ஷன்கள் இந்த புதிய எடியோஸ் க்ராஸ் டைனமிக் சிறப்பு பதிப்பு கார்களிலும் இருக்கும் என்று தெரிகிறது. 78.90bhp சக்தியை உற்பத்தி செய்யும் 1.2- லிட்டர் என்ஜின் ஆப்ஷன் ஒன்றும் , 88.76 bhp அளவு சக்தியை வெளியிடும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஒன்றும் என இரண்டு வகையான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களை இந்த புதிய காரில் எதிர்பார்க்கலாம்.. 67.06bhp சக்தியை வெளியிடும் 1.4- லிட்டர் D-4D டீசல் என்ஜின் ஆப்ஷன் ஒன்றும் வெளியிடப்படும் என்று தெரிய வருகிறது. 1.5 லிட்டர் TDI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் க்ராஸ் போலோ கார்கள் இந்த புதிய எடியோஸ் க்ராஸ் டைனமிக் கார்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
இதையும் படிக்கவும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் டொயோடா
0 out of 0 found this helpful