• English
  • Login / Register

டஸ்டரில் இல்லாமல் போன 4 முக்கிய அம்சங்கள்; ஆனால் இனி அப்படி இருக்காது!

modified on பிப்ரவரி 06, 2016 04:17 pm by raunak for ரெனால்ட் டஸ்டர் 2016-2019

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கூட்டத்தை தன பக்கம் திரும்ப வைக்கும் சிறப்பு  அம்சங்களோடு,  மிக அதிகமான  மேம்பாடுகளை 2016-ன் புதுப்பிக்கப்பட்ட டஸ்டர் கொண்டுள்ளது!

எக்ஸ்போவில் ஒரு விரிவான மேம்பாடுகளை கொண்ட 2016 டஸ்டரை, ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முதல் கச்சிதமான SUV ஆக விளங்கி, 10 லட்சத்திற்கு அதிகமான விலை கொண்ட இந்த வாகனத்தில் இல்லாத பல காரியங்களையும் இப்போது பெற்றுள்ளது. இது மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்போதைய பதிப்பை விட சற்று அதிக விலையை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பன்மடங்கு பயன் கொண்ட இந்த புதிய டஸ்டரின் போட்டித் தன்மையை அதிகரிக்கும் அந்த 4 அம்சங்கள் எவை என்பதை காண்போம்.

அழகியல் தன்மைகள்

டஸ்டரில் காணப்படும் தடித்த உருவம் மற்றும் SUV-த்தனமான தோற்றத்தை மக்கள் வெகுவாக பாராட்டினர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, இதன் நம்பகமான விற்பனை குறைந்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட டஸ்டரின் மூலம், அதை இன்னும் நேர்த்தியானதாக ரெனால்ட் நிறுவனம் மாற்றியுள்ளது. இதன் புதிய கிரில் மற்றும் நுட்பமான மறுவடிவமைப்பு பெற்ற பம்பர் ஆகியவை சேர்ந்து இதை ஒப்பீட்டில் இளமையாக மாற்றியுள்ளது. அதிலும் டேடைம் ரன்னிங் லைட்களுடன் கூடிய ரீ-அட்ஜெஸ்ட்டு டபுள் பேரல் செட்அப் உடனான ஹெட்லெம்ப்களை, நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

புதிய கன் மேட்டலின் மூலம் பணி தீர்க்கப்பட்ட அலாய்கள் உடன் இயந்திர பரப்புகளில் இது பயணிக்கிறது. ரூஃப் ரெயில்களில் ஒரு ‘டஸ்டர்’ பிராண்டிங்கை பெற்று, தற்போது முன்பக்க ஃபென்டர்களில் இதன் வகை பேட்ஜ் அமைந்துள்ளது. மறுவடிவமைப்பு பெற்ற பின்புற பம்பரை தவிர, LED லைட்டிங் உடன் சேர்ந்து டெயில்லெம்ப்கள் புதிய கிராஃபிக்ஸை அளிக்கிறது. மேலும், இதில் உள்ள புதிய ‘கெய்ன் ஆரஞ்சு’ நிழல் (சேடு), யார் கண்ணில் இருந்தும் தப்பாது.

அதன் வெளிப்புற ஸ்டைலிஸ்டிக் மேம்பாடுகளை தவிர, இதன் கேபின் பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்துள்ளது. இதன் முன்னோடியின் டேஸ்போர்டின் லேஅவுட்டை போல ஒத்துக் காணப்பட்டாலும், சென்டர் கான்சோலை புதுமையாக்கும் வகையில், டஸ்டர் பேட்ஜ் கொண்டுள்ளதோடு மென் தொடு (சாஃப்ட் டேச்) பொருட்கள் ஆகியவை மூலம் கேபின் நேர்த்தியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இதன் உள்புற அமைப்பியலில் ஸ்போர்ட்டியர் அப்ஹோல்டரி மற்றும் கலர் பாலேட்கள் ஆகியவற்றை ரெனால்ட் சேர்த்துள்ளது.

ஓட்டும்திறன் மற்றும் பாதுகாப்பு


இதில் புதிய ‘CMO10’ என்ஜின் அறையை பெற்று, அதன் கட்டமைப்பிற்கு கூடுதல் வலுவை அளிப்பதாக அமையும் என்று ரெனால்ட் தெரிவித்துள்ளது. மேலும் புதிய T4 எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மூலம், டஸ்டரின் ஓட்டும்திறன் (டிரைவ்பிலிட்டி) மேலும் மேம்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது.

இதமான மற்றும் பணிச்சூழலியல் தன்மைகள்

முடிவாக, டஸ்டரில் ஒரு ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் யூனிட்டை பெற்றுள்ளது. ரெனால்ட் மீடியாநேவ் 7-இன்ச் யூனிட் மேம்படுத்தப்பட்டு, ஒரு தேவைப்படும் தேர்வான ஒரு ரிவெர்ஸ் கேமரா உடன் கூடிய வழிகாட்டுதல்களை இப்போது அளிக்கிறது. மேலும் டிரைவரின் விண்டோவில் ஒரு ஆட்டோ அப் / டவுன் அம்சத்தை கொண்டுள்ளது. பணிச்சூழலியல்களுக்கு (இர்கோநோமிக்ஸ்) வரும் போது, எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் ORVM-கள் நாப், டோர் பேட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, இப்போது ORVM-கள் மூலம் சைடு ரிப்பீட்டர்களை பெற்று, அவை தானியங்கி மடக்கு தன்மையை (ஆட்டோ ஃபோல்டபிள்) கொண்டுள்ளது. மற்றவைகளில் இருந்து இதில் ஒரு டிரைவரின் ஆம்ரெஸ்ட் கூட பெற்றுள்ளது.

இயந்திரவியல் மேம்பாடுகள்

2016 டஸ்டரில் இப்போது 110 PS டீசல் மோட்டார் உடன் ஒரு ஆட்டோமேட்டிக் தேர்வையும் கொண்டு, இந்த பிரிவிலேயே க்ரேடாவிற்கு அடுத்தப்படியாக ஒரு AT தேர்வை அளிக்கும் இரண்டாவது கச்சிதமான SUV ஆக இதை மாற்றியுள்ளது. தற்போதைய டஸ்டரில், அதன் 6-ஸ்பீடு மேனுவல் யூனிட்டை அடிப்படையாக கொண்ட, ரெனால்ட் / டாசிகா-வின் ஈசி- R ஆட்டோமேட்டேடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை பெற்றுள்ளது. மற்றவைகளில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதையும் படிக்கவும் : ரெனால்ட் டஸ்டர் பேஸ்லிப்ட் புகைப்பட கேலரி: நிச்சயம் இதை விரும்புவீர்கள் !

was this article helpful ?

Write your Comment on Renault டஸ்டர் 2016-2019

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    Rs.17 - 22.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 57 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience