• login / register

BMW நிறுவனம் M2-வை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கான மூன்று முக்கிய காரணங்கள்

பிஎன்டபில்யூ எம் series க்கு published on அக்டோபர் 16, 2015 12:44 pm by nabeel

  • 6 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

இந்திய மக்களின் விருப்பம், ஒரு குறுகிய கால அளவிற்குள், செயல்திறன் மிகுந்த கார்களின் பிரிவை நோக்கி நகர்ந்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களாக AMG, அபார்த் மற்றும் BMW-ன் M ஆகியவை மூலம் உயர் செயல்திறன் கொண்ட கார்களுக்கு ஏற்ற சந்தையாக இந்தியாவை, உலகின் வாகன உற்பத்தி ஜாம்பவான்களான நிறுவனங்கள் காண்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது. இந்த ரப்பரை புகைக்கும், அனல் பறக்கும், உயர் BHP இயந்திரங்களை குறித்து நாம் பேசும் போது, BMW M பிரிவு மட்டும், அதற்கென ஒரு தனித்தன்மையுடன் திகழ்கிறது. அதிலும் சமீபகால சேர்ப்பான M2-வின் மூலம், ஆரம்பக் கட்டத்தில் இருந்து இதன் மீது பித்து பிடிக்க வைக்கும் நிலையை ஏற்படுத்தி, எல்லோராலும் கென் பிளாக் அல்லது டிராவிஸ் பாஸ்ட்ரானா போல இருக்க முடியாது என்ற BMW நிறுவனத்தின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது. M2-வை BMW நிறுவனம், இந்தியாவிற்கு ஏன் கொண்டு வர வேண்டும் என்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை கீழே காண்போம்.

1. இது ஆரம்ப நிலை செயல்திறன் கொண்ட வாகனம்:

இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இந்த கார் ஏறக்குறைய ரூ.75 – 80 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படலாம். இந்த கார் AMG-களை விட விலை அதிகமாக இருந்தாலும், M2-வில் காணப்படும் செயல்திறன் தொடர்பான இயக்கவியல் மூலம் சந்தையை கைப்பற்ற கூடுதல் வாய்ப்புள்ளது. இந்த கார் 3.0-லிட்டர் என்ஜினை கொண்டு 370 hp ஆற்றலை வெளியிட்டு, M ட்வின்பவர் டர்போ டெக்னாலஜியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காருக்கு 465 Nm முடுக்குவிசை திறனுள்ள நிலையில், ஓவர்பூஸ்ட்டின் கீழ் ஷார்ட் பெர்ஸ்ட் செய்வதன் மூலம் அதை 500 Nm ஆக மேலும் அதிகரித்து கொள்ள முடியும். இவை அனைத்தும் சேர்ந்து தேர்விற்குட்பட்ட 7-ஸ்பீடு M இரட்டை கிளெச் டிரான்ஸ்மிஷன் மற்றும் லன்ச் கன்ட்ரோலின் விளைவாக 4.3 வினாடிகளில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டுகிறது. எலக்ட்ரிக்கலி லிமிடேட் அதிகபட்ச வேகமாக மணிக்கு 250 கி.மீ. வரை செல்கிறது. இது முழுக்க முழுக்க செயல்திறன் மிகுந்த புள்ளிவிபரம் ஆகும். அதே நேரத்தில் இதை ஒரு விளையாட்டுத்தனமான வேகமாக நினைக்க முடியாது. நன்கு அனுபவமுள்ள ஓட்டுநரால் மட்டுமே இதை இயக்க முடியும். ஹார்டுகோர் செயல்திறன் கொண்ட பிளாட்பாமில் உங்கள் ஓட்டுநர் திறமையை காட்ட உதவும் சிறந்த வாகனங்களில் இதுவும் ஒன்றாகும்.

2. மெர்சிடிஸ்-பென்ஸ் CLA-கிளாஸ் 45 AMG-க்கு சரியான சவால்

இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், தற்போதைக்கு அதன் பிரிவில் எந்த போட்டியாளர்களும் இல்லாமல் இருக்கும் ஜெர்மனின் தயாரிப்பான CLA-கிளாஸ் 45 AMG மற்றும் GLA 45 AMG ஆகியவற்றுடன் இந்த கார் போட்டியிடும். AMG-களுடன் ஒப்பிட்டால், இந்த பிம்மர் (BMW) 10 குதிரைகளின் சக்தியை அதிகம் கொண்டு, 2 டோர் ஸ்பீடஸ்டர் மூலம் சிறந்த ஓட்டு இயக்கவியலை பெற முடிகிறது. செயல்திறனை பொருத்த வரை பெரிய அளவில் வேறுபாடு இல்லாத நிலையிலும், மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டுவதில் AMG-யை விட M2 0.3 வினாடிகள் வேகமாக செயல்படுகிறது. எனவே இது M பிரிவின் கீழ் வரும் மற்றொரு வாகனம் என்பது உறுதியாகிறது.

3. இந்தியாவில் M பிராண்ட் சரியான முறையில் காலூன்ற

தற்போது AMG-யினால் இந்திய சந்தை வெள்ளக் காடாக மாறி வருகிறது. இதனோடு நம் நாட்டின் பெட்ரோல் பிரிவு விரும்பிகளை அபார்த் கவர்ந்திழுக்க பார்க்கிறது. இந்த சூழ்நிலையில் மேற்கண்ட பிராண்ட்களுக்கும், இனி அறிமுகம் செய்ய உள்ள மற்ற மாடல்களுக்கும், ஒரு சவாலை ஏற்படுத்தும் வகையில் BMW நிறுவனம், தனது M2-வை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது.

BMW M பிரிவில் உள்ள மற்றவை

BMW X6M மற்றும் X5M முறையே ரூ.1.60 கோடி மற்றும் ரூ.1.55 கோடி என்று அறிமுகம் செய்யப்பட்டது

புதிய BMW M2 கூபே, 4.3 வினாடிகளில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பாய்கிறது

M6 கிரான் கூபே-வை BMW, ரூ.1.71 கோடியில் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது

வெளியிட்டவர்

Write your Comment மீது பிஎன்டபில்யூ M Series

Read Full News
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?