கார்தேக்கோ -வில் 2023 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 கார் பிராண்டுகள்
published on ஜனவரி 02, 2024 05:27 pm by bhanu
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
கடந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட கார் பிராண்டுகளின் பட்டியலில் மாருதி, ஹூண்டாய் மற்றும் டாடா ஆகியவை ஆதிக்கம் செலுத்தியுள்ளன
2023 ஆம் ஆண்டில், பெரும்பாலான கார்தேகோ பயனர்கள் மாருதி, ஹூண்டாய் மற்றும் டாடா மாடல்கள் மீது வலுவான விருப்பத்தைக் காட்டியுள்ளனர், இதனால் கார்தேக்கோவில் அதிகம் தேடப்பட்ட கார் பிராண்டுகளின் பட்டியலில் அவை முதலிடத்தை நெருங்கியுள்ளன. இந்த முறை ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் பிராண்டுகளை போலவே இருந்தது, மேலும் முதல் 3 இடங்களை மஹிந்திரா மற்றும் கியா போன்றவை பிடித்துள்ளன. உங்கள் தேடல்களின் அடிப்படையில், 2023 ஆண்டில் கார்தேக்கோ இணையதளத்தில் மக்கள் தேடிய மிகவும் பிரபலமான முதல் 10 கார் பிராண்டுகளின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம்.
1. Maruti Suzuki
இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரும் , அதிகம் விற்பனையாகும் கார் பிராண்ட் -ம் ஆன மாருதி சுஸூகி, 2023 ஆண்டில் அதிகம் தேடப்பட்ட கார் பிராண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு மாருதி ஃபிராங்க்ஸ், மாருதி ஜிம்னி மற்றும் மாருதி இன்விக்டோ உள்ளிட்ட 3 புதிய அறிமுகங்களுடன் இது மக்களிடையே பிரபலமாக இருந்தது. மாருதி ஸ்விஃப்ட், மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி பலேனோ போன்ற பிரபலமான மாடல்கள் இந்திய சந்தையில் அதிக விற்பனையாகும் கார்களாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. மாருதி புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் அதன் முதல் EV மாருதி eVX வடிவத்தில் 2024 ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
2. Hyundai
ஹூண்டாய் இந்தியாவில் கார்தேக்கோ -வில் இரண்டாவது மிகவும் பிரபலமான கார் பிராண்ட் ஆகும். ஹூண்டாய் 2023 ஆம் ஆண்டில் மாதாந்திர கார் விற்பனையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டில், ஹூண்டாய் 3 புதிய மாடல்களையும் அறிமுகப்படுத்தியது: ஹூண்டாய் ஐயோனிக் 5, புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர். மேலும் சமீபத்தில், ஹூண்டாய் எக்ஸ்டெர், இந்தியன் கார் ஆஃப் தி இயர் (ICOTY) 2024 என்ற மதிப்புமிக்க விருதையும் வென்றது.
இதையும் பார்க்கவும்: 2023 ஆம் ஆண்டில் கார்தேக்கோவில் மிகவும் பிரபலமான முதல் 10 கார்கள் (நீங்கள் தேடியபடி)
3. Tata Motors
இந்திய கார் தயாரிப்பாளரான, டாடா நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் கார்தேக்கோவில் அதிகம் தேடப்பட்ட கார் பிராண்ட் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. டாடாவின் வரிசையானது இந்த ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான், டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி போன்ற புதுப்பிக்கப்பட்ட தயாரிப்புகளுடன் மிகவும் கவர்ச்சிகரமானதாக ஒன்றாக இருந்தது. குறிப்பிடத்தக்க வகையில், நெக்ஸான் அதிக விற்பனையான கார்களில் ஒன்றாக (இரண்டும் இன்டர்னல்-கம்பஸ்டன் மற்றும் EV பதிப்புகள் இணைந்து), அதன் பிரிவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த டாடாவிலும் இருக்கின்றது. 2024 ஆம் ஆண்டில், டாடா நிறுவனம் கர்வ்வ்/கர்வ்வ் EV, டாடா பன்ச் EV மற்றும் டாடா ஹாரியர் EV போன்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடல்கள் உட்பட புதிய எஸ்யூவி -களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. Mahindra
2023 ஆண்டில், மஹிந்திரா மஹிந்திரா XUV400 EV என்ற ஒரே ஒரு தயாரிப்பை மட்டுமே அறிமுகப்படுத்தியது. இருப்பினும், கார்தேகோவில் இந்த வருடத்தில் நான்காவது மிகவும் பிரபலமான பிராண்டாக இருந்தது. குறிப்பாக மஹிந்திரா தார் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் போன்ற எஸ்யூவி -கள் பிரபலமாக இருந்தன. 2024 -ம் ஆண்டில் வரவிருக்கும் தார் 5-டோர் காருக்கும் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. 2023 ஆம் ஆண்டில் பல முறை சோதனை நடத்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 2023 ஆண்டில், மஹிந்திரா புதிய எஸ்யூவிகளான தாரின் மின்சார பதிப்பு மற்றும் ஸ்கார்பியோ N அடிப்படையிலான பிக்கப் போன்றவற்றையும் காட்சிப்படுத்தியது.
5. Toyota
ஜப்பானிய வாகன உற்பத்தியாளர், டொயோட்டா, 2023 ஆண்டில் கார்தேக்கோ -வில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றது. டொயோட்டா நிறுவனம் மாருதி எர்டிகாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பான ரூமியான் MPV -யையும் அறிமுகப்படுத்தியது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் கிரிஸ்டா எம்பிவிகள் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி போன்ற அதன் பிரீமியம் கார்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தையும் இது கொண்டுள்ளது.
இதையும் பார்க்கவும்: 2023ல் உங்களுக்குப் பிடித்த (அதிகமாகப் பார்க்கப்பட்ட) கார்தேகோ வீடியோக்கள் இவை
6. Kia
கியா 2023 ஆம் ஆண்டில் கார்தேக்கோ -வில் அதிகம் தேடப்பட்ட கார் பிராண்டாக ஆறாவது இடத்தைப் பிடித்தது 2020 -ம் ஆண்டில் இருந்து இடம்பெறும் இந்தியாவின் புதிய பிராண்டுகளில் ஒன்று. கொரிய வாகன உற்பத்தியாளரான கியாவுக்கு 3 கார்கள் மட்டுமே விற்பனையில் உள்ளது மற்றும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் 2023 ஆம் ஆண்டின் மத்தியில் வெளிவந்தது. டிசம்பரில், கியா சோனெட் -ன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டது. இரண்டு கார்களும், அவற்றின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்புகளில், இப்போது அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களுடன் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, புதிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் எக்ஸ்-லைன் மேட் ஷேட் அறிமுகம் உள்ளிட்ட அப்டேட்களை கியா கேரன்ஸ் MPV பெற்றது. கியா கார்கள் அவற்றின் விரிவான அம்சப் பட்டியல், பல்வேறு பவர்டிரெய்ன் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கு பெயர் பெற்றவை.
7. Honda
2023 ஆண்டில், ஹோண்டா அதன் காம்பாக்ட் செடான் ஹோண்டா சிட்டிக்கு மிட்லைஃப் அப்டேட்டை வழங்கியது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் ஹோண்டா எலிவேட் காம்பாக்ட் எஸ்யூவி வடிவத்தில் இந்தியாவில் ஒரு புதிய தயாரிப்பையும் அறிமுகப்படுத்தியது. அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) பொருத்தப்பட்ட இந்தியாவின் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக ஹோண்டா சிட்டி ஆனது. மேலும், வலுவான ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷனை வழங்கும் இந்தியாவில் உள்ள மூன்று மாஸ்-மார்க்கெட் கார் பிராண்டுகளில் ஒன்றாக ஹோண்டா இருக்கிறது.
8. MG
2023 ஆண்டில், எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் ஃபேஸ்லிஃப்ட்கள் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், இந்த ஆண்டு MG இன் மிக முக்கியமான வெளியீடுகளில் ஒன்று காமெட் EV ஆகும், இது அதன் விலை குறைவான மற்றும் ஃபன் நிறைந்த வடிவமைப்பில் தனித்து நிற்கிறது. இந்த அறிமுகங்களுக்கு மத்தியில், குளோஸ்டர் மற்றும் ஆஸ்டர் எஸ்யூவி -களுக்கான புதிய பிளாக் ஸ்டோர்ம் பதிப்புகளை அறிமுகப்படுத்தி ஒரு பரபப்பை உருவாக்க MG நிறுவனம் முயற்சி செய்தது.
9. Skoda
ஸ்கோடா 2023 ஆம் ஆண்டில் எந்த கார்களையும் புதிதாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனாலும் கூட ஸ்லாவியா மற்றும் குஷாக்கின் புதிய பதிப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், கார்தேக்கோவில் தேடப்படும் பிராண்ட் ஆக இருந்தது . ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் போன்ற ஸ்கோடா -வின் ஐகானிக் பிரீமியம் செடான் மாடல்களும் கடந்த வருடம் நிறுத்தப்பட்டன..
10. Mercedes-Benz
ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பாளரான, மெர்சிடிஸ்-பென்ஸ், 2023 ஆண்டில் கார்தேக்கோ -வில்ல் அதிகம் தேடப்பட்ட 10வது பிராண்டாகும். இது புதிய தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் GLC, GLE ஃபேஸ்லிஃப்ட், மெர்சிடிஸ்-AMG GT63 SE ஃபெர்பாமன்ஸ், மெர்சிடிஸ்-AMG SL 55 ரோட்ஸ்டர், மெர்சிடிஸ்-AMG E53 உள்ளிட்ட பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. கேப்ரியோலட், மெர்சிடிஸ்-AMG C43, மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQE SUV. மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் அவற்றின் பிரபலத்தால் அறியப்படுகின்றன, மேலும் எங்கள் கார்தேக்கோ குழுமத்தின் CEO, அமித் ஜெயின் அவற்றில் ஒன்றை வைத்திருக்கிறார்.
எனவே, 2023 ஆம் ஆண்டில் கார்தேக்கோவில் அதிகம் தேடப்பட்ட கார் பிராண்டுகள் இவைதான். எந்த பிராண்ட் கார் உங்களுக்குப் பிடித்தது, என்ன காரணம் ? கீழே உள்ள கமென்ட் பிரிவில் உங்கள் கருத்துகளை பகிரவும்.
0 out of 0 found this helpful