• English
    • Login / Register

    புதிய ஹூண்டாய் வெர்னாவின் இந்த 5 அம்சங்களும் டர்போ வேரியண்ட்களுக்கு பிரத்தியேகமாக கிடைக்கின்றன.

    ஹூண்டாய் வெர்னா க்காக மார்ச் 23, 2023 09:07 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 62 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    அதிக சக்தி வாய்ந்த பவர்டிரெய்ன் தவிர, டர்போ வேரியண்ட்கள் வித்தியாசமான கேபின் தீம் மற்றும் பல அம்சங்களையும் பெறுகின்றன.

    Hyundai Verna: Regular vs Turbo

    ஹூண்டாய் சிக்ஸ்த் ஜெனரேஷன் வெர்னாவை அறிமுகப்படுத்தியுள்ளது,இது இப்போது கம்பீரமான புதிய வடிவமைப்பு, பெரிய விகிதாச்சாரங்கள் மற்றும் பல புதிய அம்சங்களுடன் வருகிறது. இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் இந்த செடான் வருகிறது, இரண்டும் பெட்ரோல் : 1.5-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் யூனிட் (115PS மற்றும் 144Nm) மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் (160PS மற்றும் 253Nm). டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜினுடன் கூடிய வெர்னா அதிக சக்தி வாய்ந்தது மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தைக் கொண்டது மட்டுமல்லாமல், சில பிரத்யேக பிட்களுடன் வருகிறது.

    ஸ்போர்ட்டியரான வெளிப்புறம்

    Hyundai Verna: Fiery Red Dual-tone
    Hyundai Verna: Atlas White Dual-tone

    டர்போ-பெட்ரோல் இன்ஜின் 2023 வெர்னாவின் டாப்-ஸ்பெக் SX மற்றும் SX(O) வகைகளுடன் வழங்கப்படுகிறது. அந்த வேரியண்ட் மற்றும் பவர்டிரெய்ன் காம்போ மட்டுமே டூயல்-டோன் வெளிப்புற வண்ணங்கள், சிவப்பு நிற முன்பக்க பிரேக் காலிப்பர்கள் மற்றும் கறுப்பு நிற 16-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றைப் பெறுகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் செயல்திறன் கொண்ட  வேரியண்ட்களை ஸ்போர்ட்டி ஸ்டைலிங் விவரங்களுடன் தனித்து நிற்கச் செய்கின்றன.

    வித்தியாசமான கேபின் தீம்

    Hyundai Verna Turbo-petrol Cabin

    டர்போ அல்லாத வேரியண்ட்களில் டூயல்-டோன் பிளாக் மற்றும் பெயிஜ் கேபின் தீம் கிடைக்கும் போது, டர்போ வேரியண்ட்களில் ஸ்டீயரிங் வீல், கியர் ஷிஃப்டர், அப்ஹோல்ஸ்டரி மற்றும் உள் கதவு கைப்பிடிகள் ஆகியவற்றில் சிவப்பு இன்செட்களுடன் முழு கறுப்பு கேபின் கிடைக்கும். அவை டாஷ்போர்டின் நீளம் முழுவதும் சிவப்பு ஆம்பியண்ட் லைட் ஸ்ட்ரிப்பையும் பெறுகின்றன. இந்த சிவப்பு செருகல்கள் உள்ளே இருந்து டர்போ வகைகளின் ஸ்போர்ட்டி உணர்வை மேம்படுத்துகின்றன.

    கூடுதலான ADAS

    Hyundai Verna
    புதிய ஹூண்டாய் வெர்னா, ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங், ஃபார்வார்டு கொலிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிடரிங், லேன் கீப் அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் டிரைவர் அடென்ஷன் வார்னிங் போன்ற ரேடார் அடிப்படையிலான ADAS உடன் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், முன் செல்லும் வாகனம் புறப்படும் எச்சரிக்கை மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் டாப்-ஸ்பெக் டர்போ-பெட்ரோல் DCT SX(O) வேரியண்ட்டிற்கு மட்டும் பிரத்தியேகமானவை.

    பின்புற டிஸ்க் பிரேக்குகள்

    Hyundai Verna: Rear Disc Brakes

    SX(O) டர்போ DCT வேரியண்ட்டிற்கு மட்டுப்படுத்தப்பட்ட மற்றொரு அம்சம் பின்புற டிஸ்க் பிரேக்குகள் ஆகும். மற்ற அனைத்து வேரியண்ட்களும் பின்புறத்தில் டிரம் பிரேக்குகளைப் பெறுகின்றன.

    எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

    Hyundai Verna Turbo-petrol Electronic Parking Brake

    வசதிகளில் பெரிதாக எந்த ஒரு வேறுபாடு இல்லாவிட்டாலும், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஒரு காரை அதிக பிரீமியமாக உணரச் செய்து வசதியை அதிகரிக்கிறது. வெர்னாவின் டர்போ வெ ர்ஷன்டாப்-ஸ்பெக் SX(O) DCT வேரியண்ட் மட்டுமே இந்தச் வசதியை பெறுகிறது, அதே சமயம் செடானின் மற்ற அனைத்து வேரியண்ட்களும் வழக்கமான ஹேண்ட் பிரேக்குடன் வருகின்றன.

    மேலும் படிக்க: அனைத்து புதிய ஹூண்டாய் வெர்னாவின் வேரியண்ட் வாரியான அம்சங்களைக் கண்டறியவும்

    2023 ஹூண்டாய் வெர்னா ரூ.10.90 லட்சம் முதல் ரூ.17.38 லட்சம் வரையிலும், டர்போ-பெட்ரோல் வேரியண்ட்களின் விலை ரூ.14.84 லட்சத்திலும் (அறிமுக, எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது ஹோண்டா சிட்டிஸ்கோடா ஸ்லாவியா, வோக்ஸ்வாகன் விர்டஸ் மற்றும்  மாருதி சியாஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.

    மேலும் படிக்கவும்: வெர்னா ஆன் ரோடு விலை

    was this article helpful ?

    Write your Comment on Hyundai வெர்னா

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் சேடன் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience