புதிய BMW M2 கூபே: 4.3 வினாடிகளில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை தொடுகிறது.
சென்னை:
BMW வெளியிட்டுள்ள புதிய M2 கூபே, ஒரு உயர்-திறனை வெளிப்படுத்தும் 6-சிலிண்டர் இன்-லைன் என்ஜின், ரேர்-வீல்-டிரைவ் துரித தன்மை, எடை குறைந்த அலுமினியம் M ஸ்போர்ட் சஸ்பென்ஸன் மற்றும் எக்ஸ்ட்ரோவெர்ட் ஸ்டைலிங் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் புதிய 3.0-லிட்டர் என்ஜின் உடன் M ட்வின்பவர் டர்போ டெக்னாலஜியை கொண்டு, 6,500 rpm-ல் 370 hp-யும், அதிகபட்ச முடுக்குவிசையாக 465 Nm-யும், அதை ஓவர் பூஸ்ட்டின் கீழ் ஷார்ட் பர்ஸ்ட் செய்து 500 Nm என்றும் அதிகரிக்க முடியும். இதனோடு தேர்வுக்குட்பட்ட 7-ஸ்பீடு M டபுள் கிளெச் டிரான்ஸ்மிஷன் மற்றும் லான்ச் கன்ட்ரோல் ஆகியவற்றை பெற்று, M2 கூபே-க்கு 0 வில் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை அடைய வெறும் 4.3 வினாடிகள் மட்டுமே தேவைப்படுகிறது. எலக்ட்ரிக்கலி லிமிடேட் அதிகபட்ச வேகமாக மணிக்கு 250 கி.மீ. வரை செல்கிறது.
புதிய BMW M2 கூபே, அதிகளவில் காற்றை உள்ளிழுக்கும் தன்மை கொண்ட ஒரு தாழ்வான முன்பக்க கவசத்தையும், தடித்த பக்கவாட்டு பண்புகளை கொண்ட M கிரில்கள், M டபுள்-ஸ்போக் டிசைனில் 19-இன்ச் அலுமினியம் வீல்கள் உடன் கலப்பு அளவு கொண்ட டயர்கள் மற்றும் தாழ்வான, விரிந்த பின்புறத்தில் M பண்பை வெளிக் காட்டும் இரட்டை-டெயில்பைப் எக்ஸ்சாஸ்ட் சிஸ்டம் ஆகியவற்றின் மூலம் குறிப்பிடத்தக்க M ஸ்டைலை பெறுகிறது.
அக்டோபர் 15 ஆம் தேதி BMW X6M மற்றும் X5M ஆகியவை அறிமுகம் செய்யப்படுகிறது
அதன் வகையிலேயே சிறந்த ஸ்போர்டி காராக தெரியுமாறு, BMW M3/M4 ஆகிய மாடல்களில் உள்ளது போன்ற எடை குறைந்த அலுமினிய முன்புற மற்றும் பின்புற ஆக்ஸில்களை M2 கூபே கொண்டுள்ளது. மேலும் இரு அமைப்புகளை கொண்ட M சர்வோட்ரோனிக் ஸ்டீயரிங், M காம்பவுண்டு பிரேக்குகள், எலக்ட்ரிக்கலி கன்ட்ரோல்டு ஆக்டிவ் M டிஃப்ரன்ட்டியல் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. உங்களுக்கு டிராஃப்ட் மோடை அளிக்கும் வகையில், M டைனாமிக் மோடு (MDM) கொண்ட M2-வின் டைனாமிக் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டத்தை பெற்றுள்ளது. இதை இயக்குவதன் மூலம் ஓடுதளத்தில் மிதமான, கட்டுப்பாட்டிற்குட்பட்ட வீல் சறுக்கல்களை பெற முடிகிறது.
இந்த புதிய BMW M2 கூபேயில், 7 ஸ்பீடு M இரட்டை கிளெச் டிரான்ஸ்மிஷன் (M DCT) உடன் டிரைவ் லாஜிக் மற்றும் ஓட்டுநருக்கு உதவும் விரிவான தேர்வுகளை கொண்ட அமைப்புகள் மற்றும் BMW கனெக்ட்டேடு டிரைவ் அளிக்கும் மொபிலிட்டி சர்வீஸ்கள் போன்ற தரமான அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான பட்டியலை கொண்டுள்ளது. இந்த கனெக்ட்டேடு டிரைவ் சர்வீஸ்கள் மூலம் விரிவான வாகன தொடர்பு மற்றும் புதுமையான ஆப்-களின் பயன்பாட்டிற்கு உதவுதல் ஆகியவை BMW கனெக்ட்டேடு டிரைவ் டெக்னாலஜியின் உதவியோடு இந்த காரில் ஒருங்கிணைந்து காணப்படுகிறது.