டாடா நெக்ஸான் இவி ரூபாய் 14 லட்சத்தில் அறிமுகமாகி இருக்கிறது

published on பிப்ரவரி 03, 2020 05:38 pm by dhruv attri for டாடா நிக்சன் ev prime 2020-2023

  • 33 Views
  • ஒரு கருத்தை எழுதுக

அனைத்து-மின்சார நெக்ஸான்களும் அதன் உயர்-அம்சங்களை ஐசிஇ வகையைக் காட்டிலும் ரூபாய் 1.29 லட்சம் அதிக விலையில் இருக்கிறது 

  •  டாடா நெக்ஸான் இவி யானது மூன்று வகைகளில் கிடைக்கிறது: எக்ஸ்எம், எக்ஸ்இசட்+ மற்றும் எக்ஸ்இசட் + லூக்ஸ்.

  • இதனுடைய விலை ரூபாய் 13.99 லட்சத்திலிருந்து ரூபாய் 15.99 லட்சம் வரை ஆகும் (அறிமுக விலை).

  • இது 30.2கிலோவோல்ட் மின்கல தொகுப்பு மற்றும் 129பி‌எஸ்  மின்சார இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது.

  • நெக்ஸான் இவியில் 60 நிமிடங்களில் 80 சதவீதம் வரை வேகமாக-மின்னேற்றம் செய்யலாம்.

  • டாடா மோட்டாரானது இந்தியா முழுவதும் 100 வேகமாக-மின்னேற்றம் செய்யும் நிலையங்களைக் கொண்டுள்ளது, மேலும் 2020 மார்ச் மாதத்திற்குள் எட்டு நகரங்களில் அந்த எண்ணிக்கையை 300 ஆக அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

  • இது இலவச 3.3 கிலோவாட் ஏசியானது இல்லத்தில் மின்னேற்றம் செய்யும் வசதியுடன் வருகிறது, இதில் முழு மின்னேற்றம் செய்வதற்கு 8 மணி நேரம் ஆகும்.

  • நீங்கள் 22 நகரங்களில் 60 விற்பனை நிலையங்களில் நெக்ஸான் இவி.யை வாங்கலாம், இவி தற்போது மிகவும் பரவலாக எங்கும் கிடைக்கக்கூடிய வகையில் இருக்கிறது. 

Tata Nexon EV Launched At Rs 14 Lakh

டாடா மோட்டார்ஸ் இறுதியாக நெக்ஸான் இவி மின்சாரக் கார் தனியார் வாங்குபவர்களுக்கு இவி சந்தையில் முழு அளவிலான நுழைவைக் குறிக்கின்றது. எக்ஸ்எம், எக்ஸ்இசட் + மற்றும் எக்ஸ்இசட் + லூக்ஸ்: ஆகிய மூன்று மாதிரி வகைகளுக்கு இடையில் இதனுடைய விலையானது ரூபாய் 13,99 லட்சத்திலிருந்து ரூபாய் 15.99 லட்சம் வரை இருக்கும்.

வகை

எக்ஸ்-ஷோரூம் இந்தியா விலைகள்

எக்ஸ்‌எம்

ரூபாய் 13.99 லட்சம்

எக்ஸ்‌இசட்+

ரூபாய் 14.99 லட்சம்

எக்ஸ்‌இசட்+லூக்ஸ்

ரூபாய் 15.99 லட்சம்

வண்ண விருப்பங்கள்: டீல் நீலம், பனி வெள்ளை மற்றும் மூன்லைட் சில்வர்.

நெக்ஸான் இவியின் மிகவும் முக்கிய சிறப்பம்சமாக அதனுடைய வரம்பு 312 கிமீ ஆகும், இது 30.2 கிலோவாட் மின்கல தொகுப்பால் ஆனது, இது 8 வருடம் வரை / 1.60 லட்சம் கிமீ உத்தரவாதத்தைப் பெறுகிறது. 60 நிமிடங்களில் டிசி வேக-மின்னேற்றி வாயிலாக 80 சதவீத அளவு மின்னேற்றம் செய்ய இயலும், அதே சமயத்தில் வீட்டிலிருந்து 3.3 கிலோவாட் ஏசி வேக மின்னேற்றி மூலம் எட்டு மணி நேரத்தில் 100 சதவீதம் வரை மின்னேற்றம் செய்யலாம். பின்னர் இது இவி யின் விலையில் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு சுலபமான 15ஏ பொருத்துவாய் மூலம் கூட அதை மின்னேற்றம் செய்ய முடியும், ஆனால் நீங்கள் அதை ஒரு இரவு முழுவதும் செருகி வைக்க வேண்டும்.

நீங்கள் சாலையில் நெடுந்தொலைவு வாகனத்தில் போய்க்கொண்டு  இருக்கிறீர்கள் எனில், பெங்களூரு, டெல்லி, புனே, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய ஐந்து நகரங்களில் தேவைக்கேற்ப இயந்திர  மின்னேற்றத்திற்கான வசதி இருக்கின்றது. இந்த சேவை வருங்காலத்தில் இன்னும் விரிவடையும்.

நெக்ஸான் இவி 129பி‌எஸ்/ 245என்‌எம் மின்சார இயந்திரத்திலிருந்து ஆற்றலைப் பெறுகிறது, இது ஒற்றை-வேக செலுத்தியுடன் இணைக்கப்படுகிறது. முறுக்குதிறனை அதிகரிக்கும் செயல்பாட்டைக் கொண்ட டாடா, நெக்ஸான் இவி 10 வினாடிகளுக்குள் 0-100 கிமீ வேகத்தில் செல்லும் என்று சொல்லப்படுகிறது. இது பலவிதமான ஓட்டக்கூடிய அமைப்பு முறைகளையும் பெறுகிறது: அவை சாதாரண ஓட்டுநர் மற்றும் பந்தயம். 

எல்இடி டிஆர்எல் உடன் தானியங்கி படவீழ்த்தி முகப்புவிளக்குகள், சூரியஒளி திறப்பு மேற்கூரை, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு தானியங்கியுடன் 7 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு,  7-அங்குல டிஎஃப்டி கருவித் தொகுப்பு மற்றும் ஹர்மன் ஒலி அமைப்பு போன்ற ஏராளமான தனிசிறப்பம்சங்களையும் நெக்ஸான் இவியானது வழங்குகிறது. இது ஒளிபரப்பு அலகு மற்றும் இசட்கனெக்ட் கார் தொழில்நுட்பத்திற்கான ஓ‌டி‌ஏ (ஓவர் த ஏர்) மென்பொருள் புதுப்பிப்புகளைப் பெறுகிறது, இது ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

பலகையில் இருக்கின்ற பாதுகாப்பு உபகரணங்களில் ஈபிடி, மலை பகுதிகளில்  மற்றும் சாய்வான பகுதிகளில் இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது, அதிக வெளிச்சமுடைய மூடுபனி விளக்குகள் மற்றும் உணர்விகள் கொண்ட பின்புற வாகனம் நிறுத்துவதற்கான புகைப்படக் கருவி ஆகியவற்றுடன் இரண்டு காற்றுப் பைகள் உள்ளன. டாடா இந்த காருக்கு 3 வருடம் / 1.25 லட்சம் கிமீ உத்தரவாதத்தை 5 வருடங்களுக்கு நீட்டித்துள்ளது. இது  நம்முடைய இருப்பிடத்திலேயே வந்து சரிசெய்யக்கூடிய சேவை விருப்பத்தையும் வழங்குகிறது.

டாடா நெக்ஸன் ஈ.வி என்பது எம்ஜி இசட்எஸ் இ‌வி மற்றும் இவி ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகியவற்றுக்கு மாற்றாக மிகவும் விலைக்குறைவான பதிலீடாகும். எனினும், இது வருங்காலத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஈவிக்கு போட்டியாக இருக்கும்.

- டாடா நெக்ஸான் இவி மின்கலன் மின்னேற்றம் குறையும் வரை இயக்கிய முதல் சோதனை ஓட்டத்திற்கான மதிப்பாய்வு 

மேலும் படிக்க: நெக்ஸான் இவி தானியங்கி

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டாடா நிக்சன் EV Prime 2020-2023

Read Full News

explore similar கார்கள்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • க்யா ev9
    க்யா ev9
    Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • போர்ஸ்சி தயக்கன் 2024
    போர்ஸ்சி தயக்கன் 2024
    Rs.1.65 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • வோல்வோ ex90
    வோல்வோ ex90
    Rs.1.50 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • மினி கூப்பர் எஸ்இ 2024
    மினி கூப்பர் எஸ்இ 2024
    Rs.55 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • மெர்சிடீஸ் eqa
    மெர்சிடீஸ் eqa
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூல, 2024
×
We need your சிட்டி to customize your experience