இனிமேல் சார்ஜிங் ஸ்டேஷன்களை தேடி அலைய வேண்டாம் ! ஆகஸ்ட் 7-ம் தேதி டாடா அறிமுகப்படுத்துகிறது புதிய ஆப்
published on ஆகஸ்ட் 06, 2024 05:31 pm by samarth for டாடா கர்வ் இவி
- 55 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியா முழுவதும் உள்ள 13,000 சார்ஜிங் ஸ்டேஷன்களின் நிகழ் நேர தகவல்களை இந்த ஆப் EV உரிமையாளர்களுக்கு வழங்கும்.
-
டாடா மோட்டார்ஸ் டாடா EV -களில் கிடைக்கும் கனெக்டட் கார் பிளாட்ஃபார்ம் மூலம் ஆப்பை வெளியிட உள்ளது.
-
வாடிக்கையாளர்கள் நிகழ்நேர சார்ஜர் கிடைக்கும், பயனர் மதிப்புரைகள் மற்றும் பலவற்றை ஆப்ஸில் பார்க்கலாம்.
-
மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்திற்காக இந்த ஆப்ஸ் ஆனது மற்ற டாடா EV உரிமையாளர்களிடமிருந்து பெறும் தரவுகளை ஒருங்கிணைக்கும்.
EV கார்களை வைத்துள்ளவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் பற்றிய கவலை. இந்த கவலை லாங் டிரைவ்களை சவாலானதாக மாற்றும். இப்போது இதற்கு தீர்வு காண டாடா மோட்டார்ஸ் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கர்வ்வ் EV உடன் புதிய “சார்ஜ் பாயிண்ட் அக்ரிகேட்டர்” ஆப்பை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆப்ஸ் மூலம் நாடு முழுவதும் உள்ள சார்ஜிங் நிலையங்களை எளிதாகக் கண்டுபிடித்து அதை பயன்படுத்தலாம். டாடா மோட்டார்ஸின் புதிய ஆப் பற்றிய கூடுதல் விவரங்கள் இங்கே:
பயன்பாடு அடிப்படையில் பயனர்கள் சார்ஜர்களை கண்டறியவும் அதன் நிகழ்நேர நிலையைக் காணவும் அனுமதிக்கும். சார்ஜர் இருந்தால் அது ஆப்ஸ் மூலம் நேவிகேஷன் மற்றும் கார் செல்லும் திசையை காண்பிக்கும். வேகம், வழங்குநர் மற்றும் சார்ஜரின் வகை ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் தேடும் சார்ஜர்களை ஃபில்டர் செய்யலாம். மேலும் பிற டாடா EV உரிமையாளர்களின் மதிப்பீடுகளையும் இந்த ஆப் மூலமாக பார்க்க முடியும்.
நாடு முழுவதும் தடையற்ற பயன்பாட்டினை உறுதி செய்ய ஆப் 13,000 சார்ஜிங் பாயிண்ட்களை இதன் மூலமாக அணுகலாம். கூடுதலாக வாகனத்தின் ரேஞ்ச் மற்றும் சார்ஜர் பயன்பாட்டுத் தரவுகளின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட பயணத் திட்டமிடலைச் செயல்படுத்த இது டாடா EV தரவுகளுடன் ஒருங்கிணைத்து நீண்ட டிரைவ்களை மிகவும் சாத்தியமானதாகவும், மன அழுத்தத்தை குறைப்பதகாவும் இருக்கும். டாடாவின் புதிய ஆப் வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த EV உரிமை அனுபவத்தை மேம்படுத்தும்.
மேலும் பார்க்க: ஆகஸ்ட் 7 அன்று அறிமுகத்திற்காக காத்திருக்கும் Tata Curvv EV -ன் இன்டீரியர் விவரங்களுடன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது
டாடா கர்வ்வ் EV பற்றிய கூடுதல் விவரங்கள்
டாடா கர்வ்வ் EV ஆனது நெக்ஸான் EV மற்றும் வரவிருக்கும் ஹாரியர் EV இடையே விற்பனைக்கு கொண்டு வரப்படும். டாடா கர்வ்வ் EV -ன் பவர்டிரெய்ன் விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், இது இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 500 கி.மீ கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கலாம்.
டாடா கர்வ்வ் EV -க்கான ஆரம்ப விலை சுமார் ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV மட்டுமில்லாமல் புதிய ஹூண்டாய் கிரெட்டா EV, மற்றும் இந்த மாருதி eVX ஆகிய கார்களுடனும் போட்டியிடும்.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.