மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா நிறுவனத்தின் விழாக்கால வெளியீடுகள் அறிமுகம்: போல்ட், செஸ்ட், நானோ, சஃபாரி மற்றும் இண்டிகோ மாடல்கள் மேம்படுத்தப்பட்டன

டாடா நானோ க்கு published on அக்டோபர் 13, 2015 12:43 pm by manish

  • 20 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட ஜென்X நானோ, போல்ட் மற்றும் ஜெஸ்ட் கார்களை, விழாக்கால வெளியீடாக அறிமுகப்படுத்துகிறது. பண்டிகைகள் மிகவும் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், டாடா நிறுவனம், தனது பிரபலமான கார்களுக்கு புதிய மேம்பாடுகளைப் பொருத்தி சந்தையில் வெளியிடுவதன் மூலம், புதிய வடிக்கையாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. இதன் பயனாக, தற்போதுள்ள இருப்பு சரக்குகளை வேகமாக விற்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க எண்ணுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல, தனது 5 விதமான மாடல்களுக்கு பட்டை தீட்டி, (மேம்பாடுகளைச் செய்து) விற்பனைக்கு வைத்து உள்ளது. அவை முறையே, போல்ட், ஜென்X நானோ, சஃபாரி ஸ்டார்ம், செஸ்ட் மற்றும் இண்டிகோ ஆகும்.

டாடா ஜென்X நானோ காரின் புதிய பண்டிகை கால வெளியீட்டு மாடல், பல வகையான அம்ஸங்களைக் கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில், தோலினால் ஆன இருக்கை விரிப்புகள், பண்டிகைக் கொண்டாட்டத்தை விவரிக்கும் விதத்தில் கார் மேற்பரப்பில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் பேட்ஜ்; பம்பரின் மூலையை பாதுகாக்கும் அமைப்பு, மற்றும் ரிமோட் மூலம் இயங்கக் கூடிய ஹாட்ச் ரிலீஸ் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

மேற்சொன்ன, பண்டிகைக் கால கூடுதல் அம்சங்களை ரூபாய். 10,500 –க்கு பெற்றுக் கொள்ளலாம். இவை அனைத்தும் விழாக்கால கொண்டாட்டத் தொகுப்பாக, குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. ஆனால், தனித்தனியே வாங்க முற்பட்டாலோ, பண்டிகைக்கு பின் வாங்க முற்பட்டாலோ, வாடிக்கையாளர்கள் அதிக பணம் கொடுத்து பெற வேண்டும் என்று இந்நிறுவனம் குறிப்பிடுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த பண்டிகைக் கால அறிமுகங்களை வாங்கும் போது, 9.5 சதவிகிதம் வரை மொத்த செலவில் சேமிக்க முடியும்.

மக்கள் குதூகலமாக பண்டிகைகளைக் கொண்டாட, டாடா ஜென்X நானோ காருக்கு, அடிப்படை விழாக்கால தொகுப்பைத் தவிர, பிரீமியம் தொகுப்பையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த உயர்தர பேக்கேஜை ரூபாய். 24,999 விலையில் பெற்றுக் கொள்ளலாம். அடிப்படை விழாக்கால கொண்டாட்ட தொகுப்பில் வரும் அம்ஸங்களைத் தவிர, இந்த பிரிமியம் உபகரணத் தொகுப்பில் ரிமோட் மூலம் இயங்கும் ஹாட்ச் ரிலீஸ், வெயிலில் இருந்து பாதுகாக்க சன் ரூஃப், தோலினால் ஆன இருக்கை விரிப்புகள், பண்டிகைக் கொண்டாட்டத்தை விவரிக்கும் விதத்தில் கார் மேற்பரப்பில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் பேட்ஜ், ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. விழாக்கால தள்ளுபடி சலுகை இல்லாமல் வாங்கினால், இந்த சிறப்பாம்ஸ தொகுப்புக்கு, கிட்டத்தட்ட ரூபாய். 27,000 வரை செலுத்த வேண்டியது இருக்கும். எனவே, இது ஒரு சிறந்த விழாக்கால சலுகையாகும்.

மேலும் வாசிக்க:

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டாடா நானோ

Read Full News

trendingஹாட்ச்பேக்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience