Tata Harrier EV: புதிய காரில் என்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் ?
டாடா ஹெரியர் இவி க்காக மார்ச் 06, 2025 08:42 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா ஹாரியர் EV ஆனது வழக்கமான ஹாரியரின் அதே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட்டப் உடன் இது வரலாம் மற்றும் 500 கி.மீ ரேஞ்சை இது கொடுக்கும்.
டாடா நிறுவனத்தின் அடுத்த ஆல்-எலக்ட்ரிக் எஸ்யூவி -யாக டாடா ஹாரியர் EV விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் அதன் இறுதி தயாரிப்புக்கு தயாராக உள்ள வெர்ஷன் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஆல்-எலக்ட்ரிக் ஹாரியருக்கான வசதிகளின் பட்டியல் மற்றும் பேட்டரி பேக் விவரங்களை டாடா இன்னும் வெளியிடவில்லை. இது ஆல்-வீல்-டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்னுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. டாடாவின் புதிய ஃபிளாக்ஷிப் EV -யில் இருந்து என்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்பது இங்கே.
வழக்கமான ஹாரியர் போன்ற தோற்றம்
டாடா ஹாரியர் EV -யின் வெளிப்புறத்தின் வடிவமைப்பு பெரிதாக மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. ஆகவே இது வழக்கமான டீசலில் இயங்கும் ஹாரியர் போலவே உள்ளது. இருப்பினும் இது ஒரு EV ஆக தனித்து நிற்கிறது. அதன் குளோஸ்டு கிரில், டாடா நெக்ஸான் EV -ல் காணப்படுவது போல் வெர்டிகல் ஸ்லேட்டுகளுடன் புதிய பம்ப்பர்கள் மற்றும் ஏரோடைனமிக்-பாணியில் உள்ள அலாய் வீல்கள் ஆகியவை உள்ளன. இருப்பினும் கனெக்டட் LED DRL -கள் மற்றும் டெயில் லைட்ஸ் போன்ற எலமென்ட்களும் மாற்றமில்லாமல் அப்படியே இருக்கின்றன.
டூயல் டோன்: பிளாக் மற்றும் வொயிட் கேபின் தீம்
ஹாரியர் EV -யின் இன்ட்டீரியர் விவரங்களை டாடா இன்னும் வெளியிடவில்லை என்றாலும், வழக்கமான ஹாரியரில் காணப்படும் அதே டேஷ்போர்டு செட்டப் இதிலும் அப்படியே இருக்கலாம். மேலும் நெக்ஸான் EV மற்றும் கர்வ் EV ஆகியவற்றில் உள்ளதை போலவே ஆல்-எலக்ட்ரிக் டாடா ஹாரியரும் டூயல்-டோன் பிளாக் மற்றும் வெள்ளை கேபின் தீம் உடன் வரலாம்.
வசதிகள்: சம்மன் மோடு உடன் வரலாம்
ஹாரியர் EV ஆனது அதன் ICE வெர்ஷனில் இருப்பதை போன்ற வசதிகளுடன் வரலாம். 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவை கொடுக்கப்படலாம். இது டூயல் ஜோன் ஏசி மற்றும் பவர்டு டெயில்கேட் போன்ற வசதிகளுடன் வரக்கூடும். ஹாரியரின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பும் ஒரு சம்மன் மோடு உடன் வரலாம். இது சாவியை பயன்படுத்தி காரை முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர்த்த உதவி செய்யும்.
இதன் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்படலாம்.
மேலும் படிக்க: பிப்ரவரியில் மாத கார் விற்பனையில் ஹூண்டாயை முந்தியது மஹிந்திரா நிறுவனம்
AWD (ஆல்-வீல்-டிரைவ்) செட்டப் கொடுக்கப்படலாம்
ஹாரியர் EV டூயல் மோட்டார் ஆல்-வீல் டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்னுடன் வரும் என்பதை டாடா ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. டாடா ஹாரியர் EV ஒரு பெரிய பேட்டரி பேக்குடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இது சுமார் 500 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை கொடுக்கும். ஆல்-வீல் டிரைவ் பதிப்பைத் தவிர சிங்கிள் மோட்டார் வேரியன்ட் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா ஹாரியர் EV விலை ரூ. 30 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மஹிந்திரா XEV 9e மற்றும் BYD அட்டோ 3 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.