சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Curvv EV -யில் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் என்ன தெரியுமா ?

published on ஆகஸ்ட் 09, 2024 04:43 pm by shreyash for டாடா கர்வ் இவி

45 kWh மற்றும் 55 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் டாடா கர்வ் EV கிடைக்கிறது. MIDC கிளைம்டு 585 கி.மீ ரேஞ்சை இந்த கார் கொண்டிருக்கும்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் மார்க்கெட் எலக்ட்ரிக் எஸ்யூவி-கூபேவாக டாடா கர்வ் EV அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற அனைத்து டாடா EV -கள் போலவே கர்வ் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது - 45 kWh (மீடியம் ரேஞ்ச்) மற்றும் 55 kWh (லாங் ரேஞ்ச்). இது மொத்தம் கிரியேட்டிவ், அக்கம்பிளிஸ்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் என மொத்தம் 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. கர்வ் EV -க்கான வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் விவரங்களைப் பார்ப்போம்.

வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

வேரியன்ட்

கர்வ்.ev 45 (மீடியம் ரேஞ்ச்)

கர்வ்.ev 55 (லாங் ரேஞ்ச்)

கிரியேட்டிவ்

அக்கம்பிளிஸ்டு

அக்கம்பிளிஸ்டு + எஸ்

எம்பவர்டு +

எம்பவர்டு + ஏ

இங்குள்ள மிட்-ஸ்பெக் அக்கம்பிளிஸ்டு வேரியன்ட்கள் மட்டுமே இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷனை கொண்டுள்ளன.

டாடா கர்வ் EV எலக்ட்ரிக் பவர் ட்ரெயின்கள் விவரம்

வேரியன்ட்

கர்வ்.ev 45 (மீடியம் ரேஞ்ச்)

கர்வ்.ev 55 (லாங் ரேஞ்ச்)

பேட்டரி பேக்

45 kWh

55 kWh

எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை

1

1

பவர்

150 PS

167 PS

டார்க்

215 Nm

215 Nm

கிளைம்டு ரேஞ்ச் (MIDC)

502 கி.மீ வரை

585 கி.மீ வரை

MIDC - மாடிஃபைடு இந்தியன் டிரைவ் சைக்கிள்

மேலும் பார்க்க: Tata Curvv EV காரில் உள்ள வசதிகளின் முழுமையான விவரங்கள் இங்கே

சார்ஜிங் விவரங்கள்

கர்வ் EV பல்வேறு சார்ஜிங் ஆப்ஷன்களை சப்போர்ட் செய்கிறது. விவரங்கள் கீழே உள்ளன:

சார்ஜர்

கர்வ்.ev 45 (மீடியம் ரேஞ்ச்)

கர்வ்.ev 55 (லாங் ரேஞ்ச்)

DC ஃபாஸ்ட் சார்ஜர் (10-80%)

40 நிமிடங்கள் (60+ kW சார்ஜர்)

40 நிமிடங்கள் (70+ kW சார்ஜர்)

7.2 kW AC சார்ஜர் (10-100%)

6.5 மணி நேரம்

7.9 மணி நேரம்

15A பிளக் பாயிண்ட் (10-100%)

17.5 மணி நேரம்

21 மணி நேரம்

நெக்சன் இவி -யில் இருப்பதை போன்றே இதுவும் V2L (வெஹிகிள் டூ லோட்) மற்றும் V2V (வெஹிகிள் டூ வெஹிகிள்) ஃபங்ஷன்களையும் இது கொண்டுள்ளது. உங்கள் வெளிப்புற சாதனங்களை V2L மூலம் நீங்கள் இயக்கலாம், அதே நேரத்தில் V2V உங்கள் சொந்தப் பயன்படுத்தி மற்றொரு EV -யை சார்ஜ் செய்ய உதவும்.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

கர்வ் EV -யில் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 9-ஸ்பீக்கர் JBL-டியூன் செய்யப்பட்ட சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமெட்டிக் ஏசி ஆகிய வசதிகள் உள்ளன. இது பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் (டாடா கார்களில் முதல் முறை) ஆகியவற்றைப் பெறுகிறது.

பாதுகாப்புக்காக கர்வ் EV ஆனது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் நிலை 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ( ADAS).

விலை போட்டியாளர்கள்

டாடா கர்வ் EV -யின் விலை ரூ. 17.49 லட்சத்தில் இருந்து ரூ. 21.99 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக உள்ளது. மேலும் இது MG ZS EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் மாருதி eVX ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

லேட்டஸ்ட் கார் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: டாடா கர்வ் EV ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Tata கர்வ் EV

explore மேலும் on டாடா கர்வ் இவி

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Rs.7.99 - 11.14 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை