நாளை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக Tata Curvv EV கார்கள் டீலர்ஷிப்களை சென்றடைந்துள்ளன
published on ஆகஸ்ட் 06, 2024 07:52 pm by dipan for டாடா கர்வ் இவி
- 67 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா கர்வ்வ் EV -க்கான ஆஃப்லைன் முன்பதிவுகளும் சில டீலர்ஷிப்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
-
அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு டாடா கர்வ்வ் EV ஆனது டாடாவின் ஃபிளாக்ஷிப் EV காராக இருக்கும்.
-
எஸ்யூவி-கூபே ஒரு ஸ்லோப்பிங் ரூஃப், கனெக்டட் LED DRL -கள் மற்றும் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
உள்ளே இது ஹாரியரின் நான்கு-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் நெக்ஸான் EV -யின் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை கொடுக்கப்படலாம்.
-
இது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விலை ரூ.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸின் முதல் எஸ்யூவி-கூபேவான டாடா கர்வ்வ் EV -யின் முன்பதிவு சில டீலர்ஷிப்களில் ஏற்கனவே தொடங்கியுள்ளது. நாளை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக காரின் வடிவமைப்பு மற்றும் வசதிகளை காட்டும் ஏராளமான டீசர்களை டாடா நிறுவனம் பகிர்ந்துள்ளது. இப்போது டாடா கர்வ்வ் EV -யின் வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது. வீடியோவில் நாம் காணக்கூடிய அனைத்து விஷயங்களும் இங்கே:
நம்மால் என்ன பார்க்க முடிகிறது?
வீடியோவில் உள்ள பல வசதிகளின் ஒரு பார்வையை வழங்கியது. நெக்சன் இவி மற்றும் பன்ச் இவி -யில் இருப்பதை போன்றே இதிலும் 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே UI ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இருப்பதை பார்க்க முடிந்தது. இது நெக்ஸான் EV உடன் பொருந்துகிறது. மேலும் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஒரு எலக்ட்ரிக் டெயில்கேட் ஆகியவையும் உள்ளன.
மேலும் படிக்க: இனிமேல் சார்ஜிங் ஸ்டேஷன்களை தேடி அலைய வேண்டாம் ! ஆகஸ்ட் 7-ம் தேதி டாடா அறிமுகப்படுத்துகிறது புதிய ஆப்
வெளிப்புறத்தில் பார்க்கும் போது கர்வ்வ் EV அதே நீல நிறத்தில் இருந்தது. இது கூபே மாடல்களின் வழக்கமான சாய்வான கூரை, குளோஸ்டு-ஆஃப் முன் கிரில், டாடா ஹாரியர் -லிருந்து ஈர்க்கப்பட்ட ஹெட்லைட்களால் மற்றும் டாடா நெக்ஸான் EV -யிலிருந்து LED DRL -கள் ஆகியவை உள்ளன. 18-இன்ச் ஏரோடைனமிக் அலாய் வீல்கள் மற்றும் ஃப்ளஷ்-டோர் ஹேண்டில்கள் ஆகியவற்றைக் காட்டிய EV -யின் பக்கவாட்டு தோற்றம் முழுமையாக தெரிகிறது.
தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற விஷயங்கள்
மற்ற வசதிகளில் வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் டச்-பேஸ்டு ஏசி பேனல் ஆகியவை அடங்கும். நெக்ஸான் EV -யில் இருந்து டிரைவ் மோட் செலக்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்டரையும் EV பகிர்ந்து கொள்ளும். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
எதிர்பார்க்கப்படும் பேட்டரி, பவர் மற்றும் ரேஞ்ச்
டாடா மோட்டார்ஸ் இதுவரை எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் விவரங்களை வெளியிடவில்லை. கர்வ்வ் EV ஆனது Acti.ev தளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே இது 500 கி.மீ ரேஞ்ச் கிடைக்கும் என்று டாடா உறுதியளிக்கிறது. கர்வ்வ் EV ஆனது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிறிய டாடா நெக்ஸான் EV போலவே V2L (வெஹிகிள் டூ லோடு ) மற்றும் V2V ( வெஹிகிள் டூ வெஹிகிள் ) வசதிகளைக் கொண்டிருக்கும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ்வ் EV -யின் விலை ரூ. 20 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு டாடா மோட்டார்ஸின் ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் கார் ஆக இது இருக்கும். இது MG ZS EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் இந்த மாருதி eVX ஆகியவற்றுடன் போட்டியிடும்.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.